9/07/2012

உயிரை பிய்த்து கொடுப்பேன்


நிலவை வருடும் மேகம்

நெஞ்சில் வளரும் தாகம்

காதல் கொள்ளும் வேகம்

கன்னி அவள் மோகம்


உயிரை பறிக்கும் காதல்

உணர்வை கொடுக்கும் கூடல்

உலகம் மறக்கும் ஆடல்

பெண்மை என்பதோ தேடல்


உலகப்பொருளில் ஒன்று

புரிய முடியா சொண்டு

வார்த்தை கொட்டும் போது

பொருளைத்தேடும் மனது


உதட்டில் முத்தம் வைத்து

கண்கள் நான்கையும் தைத்து

இடையில் உயிரை பித்து

கொடுப்பேன் அவளிடம் சொத்து

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்திட்டீங்க நண்பரே... நல்லா எழுதியிருக்கீங்க...

வாழ்த்துக்கள்...

முடிவில் (உயிரை பித்து - உயிரை பிய்த்து) ஒரு வேலை " பித்து " தான் வருமோ...?

ஹேமா said...

கடைசிப் பந்தி மட்டுமே போதும்....காதலின் ஆழம்வரை போக !

arasan said...

நிறைவான கவிதை ,, அழகாக பதிகின்றது மனதில் வாழ்த்துக்கள் நண்பா

Unknown said...

அருமை தோழரே வாழ்த்துக்கள் வணக்கம் தொடருங்கள்

Unknown said...

அருமை தோழரே வாழ்த்துக்கள் வணக்கம் தொடருங்கள்

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
இயைபுத்தொடை இயல்பாய் அமைந்த
அசத்தல் கவிதை
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

தங்களிடம் பயிலும் மாணவர்கள் நிச்சயம்
கொடுத்துவைத்தவர்கள்
ஆசிரியர் தின விழாவினை
ஒரு சடங்காக கொண்டாடிக்கொண்டிருக்கும்
இந்தக் காலச் சூழலில் ஒரு பயனுள்ள உயிர்ப்புடங்கூடைய
நாளாக மாற்றிய உங்களை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்
மனக் கொள்ளை கொண்ட பதிவு
படங்களுடன் ப்திவு அருமை
தொடர வாழ்த்துக்கள்

மாலதி said...

சிறப்பான ஆக்கம் சிறப்பான படங்கள் உணர்ந்து எழுதப்பட்டவைகள் பாராட்டுகள்

Unknown said...

தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!

இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!

தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!

அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவ்ரி. tamilnaaththam@gamil.com

please visit: www.tamilnaththam.blogspot.com

முனைவர் இரா.குணசீலன் said...

கவிதை நன்றாகவுள்ளது கவிஞரே..

தலைப்பே கவிதையின் அழகுக்கு சாட்சி.