8/20/2012

பச்சை மிளகாய் தின்றவளே


பச்சை மிளகாய் தின்றவளே – என்

பக்கத்தில் வந்து நின்றவளே

உதட்டின் மீது உதட்டை வைத்து - உன்

உறைப்பை என்னுள் தீர்த்தவளே


தோட்டத்து வெருளி போல

பல் இளித்து திரிஞ்ச என்னை

தோட்டக்காரனாயே ஆக்கிவிட்டு

நல் விளைச்சலும் தந்தவளே


சிமிட்டுகின்ற கண்களாலே

காரப்பார்வை பார்ப்பவளே

சினுங்குகின்ற கால் கொலுசில்

கடுகு மிளகு சேர்த்தவளே


கறுவா பையன் போல்

கறுப்பா இருந்த என்னை

மெதுவாக வறுத்தெடுத்து

சிவப்பாக ஆக்கியவளே


ஏலக்காய் பற்களாலே

கராம்பு கடி கடித்தவளே

சுக்கு மிளகு தட்டிவச்சு

தாளிச்சு போட்டவளே


உப்பையும் உறைப்பும்

உசுருக்குள், கலந்து வச்சவளே – நான்

பருப்பும் பந்தியும் போல

உன்னோடு ஓட்டினேனே.

14 comments:

மாலதி said...

காதலில் காதலியின் ஒவ் வொரு அசைவும் இன்பத்தை தருவதாக இருக்கும் ஆனால் பின்னால் அது குறைந்து போவதின் காரணம் புரியாத புதிர் சிறந்த ஆக்கம் தொடருங்கள்

மாலதி said...

காதலில் காதலியின் ஒவ் வொரு அசைவும் இன்பத்தை தருவதாக இருக்கும் ஆனால் பின்னால் அது குறைந்து போவதின் காரணம் புரியாத புதிர் சிறந்த ஆக்கம் தொடருங்கள்

mycollections said...

பந்தி ரெடி வாங்க மச்சான்

mycollections said...

அருமையான வார்த்தைகளின் கோர்வை

திண்டுக்கல் தனபாலன் said...

அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சில தாளிக்கும் பொருட்களை வைத்து, ஒரு கலக்கு கலக்கிட்டீங்க... அருமை...

வயிறு நிறைய சாப்பிட்டது போல் இருக்கு நண்பரே...

பாராட்டுக்கள்... நன்றி...

ஹேமா said...

காதலை இப்படியும் சமைக்கலாமோ....ஒவ்வொரு வரியும் ரசனை....கொஞ்சம் உறைப்பு,வாசனை.அருமை கிழவரே !

இராஜராஜேஸ்வரி said...

Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

vimalanperali said...

சுவை மிகுந்த காதல் வரிகள்.குறுக்கு சிறுத்தவளே.பாடல் வரிகளை ஞாபகமூட்டிச்செல்கிறது.சினிம பாடல் வரிகள் போல் உள்ளது.நன்றி வணக்கம்.

vimalanperali said...

சுவை மிகுந்த காதல் வரிகள்.குறுக்கு சிறுத்தவளே.பாடல் வரிகளை ஞாபகமூட்டிச்செல்கிறது.சினிம பாடல் வரிகள் போல் உள்ளது.நன்றி வணக்கம்.

Anonymous said...

Such a nice poem. I love it. You are great kavi alaga.
I wish u all the best. From km

செய்தாலி said...

காதல்
கரம் மசாலா
ம்ம்ம் ....அருமை

Athisaya said...

அடடா கவிதைகக்குள் ஒரு சமைகல்கட்டு!!!!
தழலவியும் அவளே,தந்தவளும் அவளே!!!அருமையான கவிதை நண்பா!

சென்னை பித்தன் said...

மசாலா காதல் அருமை

ஆத்மா said...

ஆஹா என்ன ஒரு கவிதை சமையல் ஐட்டம் எல்லாம் ஒருமித்து சங்கமிக்கிறதே....
வாழ்த்துக்கள் சகோ