கடலில் விழும் சூரியன்
நெருப்பாய் சிவக்கும் வானம்
ஓங்கி அடிக்கும் அலைகள்
ஓயாமல் துடிக்கும் இதயம்
நாட்களை என்னும் மனசு
நடந்ததை நினைக்கும் வயசு
ஒருமுறை பார்த்து துடிக்க
இரு விழி போடும் கணக்கு
இருளில் எழும்பும் நிலவு
கனவில் தவழும் நினைவு
இடைவெளி என்பது பெரிது
இரு மனம் துடிக்குது சேர்ந்து
வரும்வரை காத்திருக்கும் கண்கள்
வரமுன்னே சிரித்துவிடும் உதடு
தலையணையை அணைத்திடும் கைகள்
காற்றுக்கு கொடுக்கும் பல முத்தம்
காணாமல் கனக்கும் இதயம்
காத்திருந்தே நீர் இறைக்கும் கண்கள் – நான்
கடவுளிடம் கேட்க்கும் ஒரு வரம்
பிரியாமல் வாழுகின்ற சுகம்
Tweet | |||||
19 comments:
நல்ல வரிகள் நண்பரே....
/// கடவுளிடம் கேட்கும் ஒரு வரம்
பிரியாமல் வாழுகின்ற சுகம் ///
நன்றாக முடித்துள்ளீர்கள். நன்றி.
அருமை நண்பா!
நல்ல வரிகள் கவி அழகன். எங்கே உம்மைக் காணோமே! நமது பக்கம்! முன்பு போல சுறுசுறுப்பு இல்லையா? நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
//இடைவெளி என்பது பெரிது//
ஆம் மிகப்பெரிது வெளிநாடுகளில் தனைமையில் இருக்கும் எங்களைப் போன்றவர்கள் அனுபவத்தில் உணர்ந்தது
அருமையான கவிதை வழ்த்துகள்
கவிதை பிடித்தது அழகா..
கடவுளிடம் கேட்கும் வரம் பிரியாமல் வாழும் சுகம்..........அழகான வரிகள் பராட்டுக்கள்.
கடவுளிடம் கேட்போம் பிரியாமல் வாழும் சுகம்!! அருமை கவிதை !
பிரியாமல் வாழ்வது சுகமானது ம்ம்ம்ம் அருமை....!
பிரிவு என்னும் சொல்லே பெரும் வேதனை.வாழ்வில் வேண்டவே வேண்டாம் பிரிவு !
அருமை
அழகான கவி சகோதரனே.....
Anaithu anpu ullankalin karuththukkalukkum nanrikal
காணாமல் கனக்கும் இதயம்
காத்திருந்தே நீர் இறைக்கும் கண்கள் – நான்
கடவுளிடம் கேட்க்கும் ஒரு வரம்
பிரியாமல் வாழுகின்ற சுகம்
அழகான கவி அழமான அன்பு
அருமையான வரம் வாழ்த்துக்கள்
என்ன கவிஞரே காதல் இரசம் அபாரமாய் கொட்டுகின்றது கவிதை மழையிலே?...!! :) வாழ்த்துகக்ள் சகோ அருமையாய் கவி வடித்துள்ளீர்கள் .
அருமையானதோர் முடிவு.அழகு வரிகள்.வாழ்த்துக்கள் சொந்தமே!!!!
மயங்காதிரு என் மனமே..!!!!
பிரியாமல் வாழ வாய்க்க பெறுகிறா வரம் காத்லில் மட்டுமில்லை,கல்யாண வாழ்க்கையிலும் கேட்க வேண்டியதாயிருக்கிறது.
''.. நான்
கடவுளிடம் கேட்க்கும் ஒரு வரம்
பிரியாமல் வாழுகின்ற சுகம் ...''
நல்ல வரம் கிடைக்கட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
வரங்கள் கேட்கும்
கரங்கள் நடுங்கும்
வார்த்தை சொல்ல
உதடு துடிக்கும் //அருமையாய் கவி வடித்துள்ளீர்கள் .
கடவுளிடம் கேட்க்கும் ஒரு வரம்
பிரியாமல் வாழுகின்ற சுகம்//
எல்லோரும் கேட்கும் வரம்.
கவிதை அருமை.
வாழ்த்துக்கள்.
Post a Comment