4/10/2012

நினைவை எண்ணி தவிக்கின்றேன்

அறுகம்புல் நுனியிலே

அழகாய் விழுந்த பனித்துளியே

என் இதயத்தை குளிர்வித்து

இமை துடிக்க வைத்துவிட்டாய்


அதிகாலை பொழுதினிலே

அலாரமணி அடிக்கையிலே

போர்வையின் கதகதப்பில்

கனவுலகில் நான் மிதந்தேன்


சிறு துளியாய் நீ விழுந்து - என்

உடல்முழுதும் நீ தவழ்ந்து

குளிர்கின்ற காலையிலே

சிலிர்க்கின்ற உணர்வுதந்தாய்


கள்ளத்தனமாய் சூரியனோ –என்

என் யன்னல்வழி பார்க்கமுன்பே

சூடான கோப்பி வேண்டும்

இரு உதடு சுவைக்கவேண்டும்


காலைக்குயில் கூவும் சத்தம்

பாடலாக மாறி வந்து

காதினிலே இசை ஊட்டவேண்டும்

காதலோடு நான் வாழவேண்டும்


வேலைக்குப்போகும் மனிதரெல்லாம்

வேகமாக ஓடிவிட

தண்ணீரில் தலை குளிக்கவேண்டும்

தனிமையில் நான் பாடவேண்டும்


வாசலில்ப்போய் கோலம்போட்டு

வாசமுள்ள பூ ஒடித்து

கூந்தலில் நான் சூடவேண்டும்

கை எடுத்து இறை வணங்க வேண்டும்


இன்றைக்குமட்டும் என்வீட்ட்டில்

மற்றவர்கள் குருடாக

துள்ளி குதித்து ஆடவேண்டும்

காதலோடு நடை போடவேண்டும்


நாள் முழுக்க காதலிலே

நான் மிதக்கும் ஆசையிலே

கனவு கண்டு மகிழ்கின்றேன்

நினைவை எண்ணி தவிக்கின்றேன்

10 comments:

ஹேமா said...

இன்றைக்குமட்டும் என்வீட்டில்
மற்றவர்கள் குருடாக....

அப்பனே எல்லாம் ஆசையெண்டா இது பேராசை !

குறையொன்றுமில்லை. said...

அழகான வரிகளில் அசத்தலான கவிதை

நாள் முழுக்க காதலிலே

நான் மிதக்கும் ஆசையிலே

கனவு கண்டு மகிழ்கின்றேன்

நினைவை எண்ணி தவிக்கின்றேன்

வாழ்த்துகள்.

kowsy said...

கற்பனை அபாரம். வாசலில் கோலமிட எந்த நாட்டில் இருக்கின்றீர்கள். வீட்டுக்குள்ளேயே இங்கு போடமுடியாது. எல்லாம் அழகுக் கோலங்கள்தான் . கற்பனை வரிகளில் கவிதை மெய்யாக வேண்டும்

சிவகுமாரன் said...

அழகிய கவிதை.
கனவு மெய்ப்பட வேண்டும்

மகேந்திரன் said...

அபார கற்பனைவளம் நண்பரே...
கவிதை அழகு...

Unknown said...

றொம்பத்தான் கற்பனையில் மிதக்கிறீங்க.. அருமையான கவி

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ! வாழ்த்துக்கள் !

அருணா செல்வம் said...

இப்படியெல்லாம் கனவாவது வந்ததே...
சந்தோசம் பட்டுக்கொள்ளுங்கள்.

மாலதி said...

மகத்தான கனவுகள் காதலில் கனவு காண்பது தமிழர்களின் அடையலாம் நல்ல கனவு சுவையான பதிவு பாராட்டுகள் தொடர்ந்து பதிவு செய்க என்ன நண்பரே சில பதிவுகளாக காலம் கடங்கு வருகிறது ....

Anonymous said...

ரெம்பத் தான் ஆசை கவி அழகன்..
வேதா. இலங்காதிலகம்.