இழந்தவை
திருப்பி பெறமுடியாதவை
மறந்திடவும் முடியாதவை
ஒரு கட்டம் வரை
அழமுடியும்
ஆழமாக உணர்ந்து
அழமுடியாது
மனிதனாக
வாழ முடியவில்லை
மனிதனாக
வாழ நினைத்தால்
மிருகத்தைவிட
கேவலமான முடிவு
தண்ணீரை
மறித்துகட்ட முடியும்
உணர்ச்சிகளை
கட்டாயம்
கட்டுப்படுத்த வேண்டி உள்ளது
ஒரு நூல்
இடைவெளியில்
உயிர் எடை குறைய
வாய்ப்புகள் பல
காலடித்தடம் தெரியாமல்
வாழ வேண்டும்
மானத்தையும்
வெட்கத்தையும் விட்டு
Tweet | |||||
10 comments:
ஒரு கட்டம் வரை
அழமுடியும்
ஆழமாக உணர்ந்து
அழமுடியாது
மனிதனாக
வாழ முடியவில்லை
மனிதனாக
வாழ நினைத்தால்
மிருகத்தைவிட
கேவலமான முடிவு//
இந்த வரிகள்
தைத்து செல்கின்றன.
உங்கள் பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமென விரும்பினால் என் தளத்தில் இணைக்கலாம். மேலதிக தகவல்களுக்கு http://www.googlesri.com/2012/02/are-you-want-to-writer.html
தண்ணீரை
மறித்துகட்ட முடியும்
உணர்ச்சிகளை
கட்டாயம்
கட்டுப்படுத்த வேண்டி உள்ளது
nice
காலடித்தடம் தெரியாமல்
வாழ வேண்டும்
மானத்தையும்
வெட்கத்தையும் விட்டு //
சுருக்கமான வார்த்தைதான்
யோசிக்க யோசிக்க அதன் பொருள்
விரிந்து கொண்டே போகிறது மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்க
காலடித்தடம் தெரியாமல்
வாழ வேண்டும்
மானத்தையும்
வெட்கத்தையும் விட்டு
உண்மை சொல்லும் வரிகள் .
அநேகமான ஈழத்தவரின் நிலையைச் சொல்லியிருக்கிறீர்கள் யாதவன்.மனம் அழுகிறது !
அருமையான கவிதை.
வாழ்த்துகள்.
அழுது புலம்பும் இன்மாகிவிட்ட நிலையை சொல்லிய கவிதை.
நல்ல கவிதை ! வாழ்த்துக்கள் !
ஆழமான கவிதை. கவலை என்று தீருமோ?. பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்
Post a Comment