1/30/2012

புதைந்துபோன ஆசைகள்


காத்திருக்கிறது மண்
ஒரு விதைக்காக

காத்திருக்கிறது நீர்
ஒரு துளிர்க்காக

காத்திருக்கிறது பனி
ஒரு இலைக்காக

காத்திருக்கிறது வண்டு
ஒரு மலருக்காக

காத்திருக்கிறது காதல்
ஒரு மலர்க்கொத்துக்காக

காத்திருக்கிறான் இறைவன்
ஒரு மாலைக்காக

காத்திருக்கிறது சூரியன்
அதை சுட்டெரிப்பதற்க்காக

காத்திருக்கிறேன் நான்
கூந்தலில் சூட்டுவதற்க்காக

யாருக்காக அந்த மலர்
காத்திருக்கிறது

யாருமே கேட்பதில்லையே
புதைந்துபோன ஆசைகள்

12 comments:

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் கவிக் கிழவரே!

மௌனங்களுக்குள் புதைந்து போகும் மலரின் மன உணர்வினை அழகுறச் சொல்லியிருக்கீறீங்க.

ரசித்தேன்.

கவி அழகன் said...
This comment has been removed by the author.
கவி அழகன் said...

நிருபன் ஐயா நீங்கள் owner அ விட மிக வேகமா இருக்கிரிங்கள்

நன்றிகள் பலகோடி

நிரூபன் said...

ஹே...ஹே...
என்னமோ தெரியலை, இன்னு உங்கள் பதிவு என் பார்வைக்கு இலகுவாக கிடைச்சிருக்கு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகு...

ad said...

டோண்ட் ஃபீல். ஆல் இஸ் வெல்.
காத்திருங்கையா.
காத்திருப்பும் ஒரு சுகம்தான்னு... பாரதியாரே சொல்லிருக்கார்.(பாரதியாரா?.. பாரதி ராஜாவா?)

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆசைகள் வளரும்... புதையவில்லை.

ஹேமா said...

காத்திருப்புக்களின் ஆதங்கம் ஒவ்வொன்றிற்கும்.காத்திருப்புக்களின் அளவு கொண்டே இன்பமும் துன்பமும்.அழகான கவிதை !

arasan said...

காத்திருப்பும் ஒரு சுகமான சுமை தான் ...

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான கவிதை ! வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !

vetha (kovaikkavi) said...

''...காத்திருக்கிறது மண்
ஒரு விதைக்காக


காத்திருக்கிறது நீர்
ஒரு துளிர்க்காக


காத்திருக்கிறது பனி
ஒரு இலைக்காக ...''
மிக நல்ல வரிகள் வாழ்த்துகள் கவி அழகள் வாருங்கள் நல் வரவு....
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

Unknown said...

பூத்திருக்கும் இக் கவிதை
காத்திருப்பது யாருக்காக?

என் வலையின் புதிய முகவரி;-
http://www.pulavarkural.info/2012/02/blog-post.html#comment-form

புலவர் சா இராமாநுசம்