1/07/2012

காதல் செடிக்கு கண்ணீர் வேண்டாம்


இளமை வாழும்
இனிய மலர்கள்
பனியைத் தாங்கி
பூத்து குலுங்கும்

இதமாய் விரியும்
ஒவ்வொரு இதழும்
மென்மை சேர்த்து
இதயம் வருடும்

சுவாசம் பட்டு
வாடும் வதனம்
முத்தம் வாங்க
ஆசை கொள்ளும்

வெப்பம் தாங்கா
மடியும் பெண்மை
நெஞ்சில் சாய
ஏங்கி நிற்கும்

பூக்கும் செடிக்கு
தண்ணீர் ஊற்றி
குளிர்மை காக்கும்
பணியை செய்வோம்

காதல் செடிக்கு
கண்ணீர் வேண்டாம்
கண்கள் சிரிக்க
காதல் கொள்வோம்

15 comments:

ம.தி.சுதா said...

////பூக்கும் செடிக்கு
தண்ணீர் ஊற்றி////

உண்மை தான் அது கூட ஒரு நாளில் அழகிய பூ தருமே...

சசிகலா said...

காதல் செடிக்கு
கண்ணீர் வேண்டாம்
கண்கள் சிரிக்க
காதல் கொள்வோம்
உண்மைதான் சிரிக்க சிறக்க காதல் செய்க அருமை

இராஜராஜேஸ்வரி said...

பூக்கும் செடிக்கு
தண்ணீர் ஊற்றி
குளிர்மை காக்கும்
பணியை செய்வோம்


Nice...

vetha (kovaikkavi) said...

''...காதல் செடிக்கு
கண்ணீர் வேண்டாம்
கண்கள் சிரிக்க
காதல் கொள்வோம் ...''
I like these lines. vaalthukal Kavi alakan....
Http://www.kovaikkavi.wordpress.com

மாலதி said...

வள்ளுவர் காதலை மலரினும் மெல்லிது என்றார் நீங்கள் காதலுக்கு கண்ணீர் வேண்டாம்முடிந்தால் தண்ணீர் ஊற்றுங்கள் என கூறும் விதம் சிறப்பு காதல் வாழ்க உண்மையான காதலில் தோல்வி இல்லை என்பதே எனது கருத்து ...

தனிமரம் said...

கண்கள் சிரிக்க காதல் கொள்வோம் அருமையான வரிகள் கவி அழகன் காதல் கிறுக்கன் போல!வார்த்தைகள் வந்து கொட்டுது!

ஹேமா said...

ரோஜாவுக்கு தண்ணீர் ஊற்றுங்கள்.உதிர்ந்துவிடப்போகிறது.
இதுதான் காதல் கிழவரே !

நிரூபன் said...

காதலின் முக்கியத்துவத்தினைச் சொல்லி, காதல் செடியினைக் கருக்க வேண்டாம் எனக் கட்டியம் கூறுகிறது இந்த அழகிய கவிதை.

நன்றி நண்பா.

kowsy said...

சரியாகச் சொன்னீர்கள்

அம்பலத்தார் said...

//காதல் செடிக்கு
கண்ணீர் வேண்டாம்
கண்கள் சிரிக்க
காதல் கொள்வோம் //

ஆமா காதல் செடிக்கு என்றும் எப்பொழுதும்
கண்ணீர் வேண்டாம்.

பிரணவன் said...

இதமாய் விரியும்
ஒவ்வொரு இதழும்
மென்மை சேர்த்து
இதயம் வருடும்......
உன்மை தான் சகா.....

Yaathoramani.blogspot.com said...

அருமையான படைப்பு
தாங்கள் இன்று சென்னைப் பித்தன் அவர்களால்
வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள்ளதற்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்
தங்கள் கவிப்பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்

சென்னை பித்தன் said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

sarujan said...

உவமை அருமை

அன்புடன் நான் said...

வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.