12/11/2011

என் சந்தோசத்தை யாரிடம் கொடுத்தது



சிவப்பு நிற வாழ்க்கை
தனிமையோடு வேதனை
பிரிவை தாங்கா மனதினில்
தனிமை தாங்கும் சோதனை

உறவுகள் வேண்டி உலகினில்
தனிமரம் தோப்பு அவதற்கு
தேடிய ஆணிவேர் அறுந்தது
காய்த்திட்ட கனிகளோ விழுந்தது

வறண்ட கருங்கல் பாறையில்
மோதும் எந்தன் நினைவுகள்
இரத்தம் சிந்தி விழுகிறது
எழும்ப முடியாது துடிக்கிறது

சுழல்வது இந்த பூமியெனில் - என்
வாழ்கையும் ஏன் சுழல்கிறது
கொடுப்பது எல்லாம் கடவுள் எனில் - என்
சந்தோசத்தை யாரிடம் கொடுத்தது

22 comments:

இராஜராஜேஸ்வரி said...

சுழல்வது இந்த பூமியெனில் - என்
வாழ்கையும் ஏன் சுழல்கிறது
கொடுப்பது எல்லாம் கடவுள் எனில் - என்
சந்தோசத்தை யாரிடம் கொடுத்தது

nice..

Yaathoramani.blogspot.com said...

மனம் கவர்ந்த கவிதை
உணர்வோடு ஒருங்கிணைந்து வார்த்தைகள் உறவாடி
கவிதைக்கு ஒரு அழகு சேர்க்கிறது
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1

நிகழ்வுகள் said...

நாட்டை - உறவுகளை பிரிந்த ஒருவரின் உணர்வுகளை சுட்டி நிற்கிறது உங்க வரிகள்... புலம்பெயர் வாழ்க்கையில் இவற்றை எல்லாம் சகித்து தான் ஆகணும் நண்பா!

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துகள்.

குறையொன்றுமில்லை. said...

கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

அப்பாதுரை said...

சிவப்பு நிற வாழ்க்கை.. இந்த ஒரு வரியே ஆழமான கவிதை. அங்கேயே நிற்க வைத்து விட்டீர்கள்.
என் சந்தோசத்தை யாரிடம் கொடுத்தது - நியாயமான கேள்வி. ரசித்தேன்.

Unknown said...

// கொடுப்பது எல்லாம் கடவுள் எனில் - என்
சந்தோசத்தை யாரிடம் கொடுத்தது//

'யாரிடமும் இல்லை தம்பீ!
உன்னிடம் தான்
தீதும் நன்றும் பிறர் தரவாரா!

புலவர் சா இராமாநுசம்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை. புலவர் கூறியதும் நூற்றுக்கு நூறு உண்மை.
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)"

M.R said...

அழகிய கவிதை அருமை

கொடுப்பது எல்லாம் கடவுள் எனில் - என்
சந்தோசத்தை யாரிடம் கொடுத்தது

சிந்திக்க வைக்கும் வரிகள்

தமிழ்மணம் 5 வது வாக்கு

கோகுல் said...

கனக்க வைக்கும் கவிதை!

vimalanperali said...

நல்ல வாழ்த்துக்கள்

சுதா SJ said...

கனக்கும் கவிதை பாஸ்... ஆனால் வெளிநாட்டில் எல்லோர் நிலையம் இதுதானே

kowsy said...

சந்தோஷத்தைப் பறித்து யாரிடமோ கடவுள் கொடுத்துவிட்டார் என்னும் வேதனை விளிம்பில் நிற்பார் கூறும் கவிதை கவியழகன் வார்த்தையில் வளம் வருகின்றது. வாழ்த்துகள்

ஹேமா said...

யாதவன்...உங்கள் காதல் கவிதைகளில் இப்படிக் கவலையான கவிதை கண்டதில்லை.சோகத்திலும் சுகம்தான் !

ம.தி.சுதா said...

////வறண்ட கருங்கல் பாறையில்
மோதும் எந்தன் நினைவுகள்
இரத்தம் சிந்தி விழுகிறது///

உறவு என்ற சொல் என்றுமே உறவுப்பாலமல்லவா...

அருமை சகோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
நடகமேடையின் கதைக்குப் புறம்பான நகைச்சுவைகள்

மாலதி said...

உள்ளத்தில் இனம் புரியாக சோகத்தில் இருக்கிறீர்கள் அதுதான் காதல் வேட்கை உங்களை படை படுத்துகிறது இந்த ஆகாமை வெடிக்கிறது சிறந்த ஆக்கத்தையும் தர முடிகிறது கத்தல் உள்ளே வந்தால் இன்பம் கொஞ்சம் தள்ளி போகலாம் காரணம் தெளிவில்லாமல் காதல் கொண்டால் இப்படி நேரலாம் என உலகிற்கு உணர்த்து கிறீர்கள் பாராட்டுகள்

vetha (kovaikkavi) said...

தனிமையால் வந்த சிவப்பு. தப்பி வரட்டும். வெளியே புதிய கரு வாழ்த்துகள் கவி அழகன்.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wodpress.com

அம்பாளடியாள் said...

உறவுகள் வேண்டி உலகினில்
தனிமரம் தோப்பு அவதற்கு
தேடிய ஆணிவேர் அறுந்தது
காய்த்திட்ட கனிகளோ விழுந்தது

ஒவ்வொரு வரிகளிலும் வலி உணர்த்தப்பட்டவிதம் அருமை சகோ .
வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

SelvamJilla said...

you lines are simply super super super. i written some tamil kavithai in my blog.
please check and give ur comments
http://alanselvam.blogspot.com/

sarujan said...

அருமை வாழ்த்துகள்.

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
சந்தோசத்தைப் பறி கொடுத்து விட்டு,
தனிமையில் தவிக்கும் கவிக் கிழவனின் உணர்வுகளை இந்த கவிதை தாங்கி வந்திருக்கிறது.