9/11/2011

மோக போதை நகரம்படபடக்கும் இயந்திர இதயம்
பெருமூச்சு விடும் புகைபோக்கி
உழைத்தால் தான் உயிர்பிழைகமுடியுமென
தயார்படுத்தும் மனிதவலு நகரம்

காலைக்காய் கண்மூடி காத்திருந்து
கூட்டை விட்டு பறந்துபோகும்
பறவைகளாய் மனிதர்
உலகுடன் போராட வியர்வைசிந்தும்

இறுகிய முகங்கள் கொண்டு
இதிகாசம் படைப்பதாய் எண்ணி
உடல் உழைப்பை உறிஞ்சவிடும்
ஊமையாகும் எலும்புக்கூடுகள்

மகிழ்ச்சிக்கு வடிவமைக்கபட்ட
மது மாது பாணக்கடைகளிலே
உதடுருஞ்சி உடல் குளுங்கி
உற்சாக மோகம் கொள்ளும்

குடும்ப உறவை காட்டுவத்தில்லை
குழந்தை அன்பை பேசுவதில்லை
குடும்பம் என்றால் வளர்ச்சிக்கு
தடைவிதிக்கும் படிக்கல் என்றும்

தனியாக பிரித்துவைக்கும்
தனக்கென்றே தயார் படுத்தும்
புரட்சி என்று சொல்லிகொன்று
மனிதத்தை அழித்திவிடும்

ஊரை விட்டு நகரம் வந்து
உலக வணிகத்தில் உருண்டுபிரண்டு
வயதாகி நரை வந்தததும்
குடும்ப உறவை தேடிச்செல்லும்

நகரம் என்பது நரகமாகி
துயரம் தரும் சிகரமாகி
ஊர் நினைப்பை அழித்துவிட்டு
பணத்தை காட்டி போதை செய்யும்

41 comments:

காந்தி பனங்கூர் said...

//நகரம் என்பது நரகமாகி
துயரம் தரும் சிகரமாகி
ஊர் நினைப்பை அழித்துவிட்டு
பணத்தை காட்டி போதை செய்யும்//

சரியா சொன்னீங்க நண்பா. இப்போ இருக்கும் நகர வாழ்க்கை இப்படி தான் போகிறது. அருமையான பதிவு

ரெவெரி said...

நகரம் என்பது நரகமாகி
துயரம் தரும் சிகரமாகி
ஊர் நினைப்பை அழித்துவிட்டு
பணத்தை காட்டி போதை செய்யும்
...
உண்மை தான் கவி...கவிதை கலக்கல் ....ரெவெரி

மாலதி said...

இன்றைய நகரமாய மாதலின் பின்னணியை அழகாக பதிவு செய்து இருக்கின்றீர் இந்த சூழல்தான் மனிதன் மனிதநேயத்தை மறந்து எல்லாவற்றையும் விட பணம் மட்டுமே கூறிக்கொண்டு விலங்குகள் மாதிரி நோயை பெற்று விரைந்து மரித்துபோகின்றான் சிறந்த பதிவு நல்ல செய்தி பாராட்டுகள் தொடர்க.

மாலதி said...

தனியாக பிரித்துவைக்கும்
தனக்கென்றே தயார் படுத்தும்
புரட்சி என்று சொல்லிகொன்று
மனிதத்தை அழித்திவிடும் //அருமையான பதிவு

Lakshmi said...

அருமையான கவிதை. உண்மைதான் சொல்லி இருக்கீங்க.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super . . . Super . . .

இராஜராஜேஸ்வரி said...

நகரம் என்பது நரகமாகி
துயரம் தரும் சிகரமாகி/

வருந்தும் விஷ்யமாகி
நாளும் ஏங்குகிறோம்!

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

அருமையான கவிதை சார்! நல்லாவே சொல்லியிருக்கீங்க! ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு நகரங்களைத்தான் ரொம்ப பிடிக்கும்!

எமது நாட்டு நகரங்கள் எல்லாமே நரகங்கள்தான் ஆனால், வெளிநாட்டு நகரங்கள் அப்படி அல்ல! அவை சொர்க்கங்கள்!!

ரிஷபன் said...

காலைக்காய் கண்மூடி காத்திருந்து
கூட்டை விட்டு பறந்துபோகும்
பறவைகளாய் மனிதர்

வாழ்வைத் தொலைக்கிறோமா.. வாழ்கிறோமா..

♔ம.தி.சுதா♔ said...

////தனியாக பிரித்துவைக்கும்
தனக்கென்றே தயார் படுத்தும்
புரட்சி என்று சொல்லிகொன்று
மனிதத்தை அழித்திவிடும்////

எந்தக் கலாச்சாரம் போனாலும் உங்கள் வரிகளுக்கு குறைவில்லை போல இருக்கு..

Rathnavel said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா வந்துருக்கு ம்ம்ம் சூப்பர்...!!!

தமிழ்வாசி - Prakash said...

நகரம் என்பது நரகமாகி
துயரம் தரும் சிகரமாகி
ஊர் நினைப்பை அழித்துவிட்டு
பணத்தை காட்டி போதை செய்யும்///

உண்மை தான் நண்பா....

கிராமத்து காக்கை said...

ந(ர)கர வேதனையை அருமையான கவிதைவரிகளில்
வாழ்த்துக்கள் நண்பா

காட்டான் said...

ஊரை விட்டு நகரம் வந்து
உலக வணிகத்தில் உருண்டுபிரண்டு
வயதாகி நரை வந்தததும்
குடும்ப உறவை தேடிச்செல்லும்

உண்மைதானய்யா...!? ஆனா ஆரப்பத்திலேயே தவறவிட்ட குடும்ப உறவு கடைசிகாலத்திலும் இவர்களை எதிர்பாத்து நிக்குமாய்யா.. நகர வாழ்கையின் துயரங்களை அழகாக கவிதையிலே தந்துள்ளீர்கள்.. பகிர்விற்கு நன்றி...

kovaikkavi said...

''...வயதாகி நரை வந்தததும்
குடும்ப உறவை தேடிச்செல்லும்...'' நல்ல கவிதை வரிகள் (கிராமம் பற்றிக் கூறும்) நானும் மிக நேசிக்கிறேன் கிராமப் புறத்தை. வாழ்த்துகள் கவி அழகன். சில சமயம் உமது தளத்திற்கு வருகை தர பிந்தி விடுகிறது. ஆனால் வருவேன்.சொற் கட்டமைப்புகள் நன்றாக உள்ளது. வாழ்த்துகள் மறுபடியும்.
வேதா. இலங்காதிலகம்.

நிகழ்வுகள் said...

இன்றைய இயந்திர தனமான வாழ்விலே... யதார்த்தமான வரிகள் ...

Nesan said...

அழகான துயரங்களை கிராமம் மறந்து மாநகரத்தில் மந்தையான வாழ்வை படம்பிடிக்கின்றது கவிதை!

//இறுகிய முகங்கள் கொண்டு
இதிகாசம் படைப்பதாய் எண்ணி
உடல் உழைப்பை உறிஞ்சவிடும்
ஊமையாகும் எலும்புக்கூடுகள்//
 கவிதையில் யதார்த்தம் இவ்வரிகள்!

Mohamed Faaique said...

sila varihalai copy panni poatu comment pannalaam'nu parthean. ethai copy panrathu'nu puriyala..

unga kavithailaye best of best ethu'nu keatta, itha solvean. sooper.

last varihal atputham..

(Sorry. suddnly NHM Writter is not working, ur post in my dash borad also)

துஷ்யந்தன் said...

பல உண்மைகளை கவிதை என்ற பெயரில்
உடைத்துக்கொண்டு போகும் அழகு அருமை....

சூப்பர் மாம்ஸ்..

துஷ்யந்தன் said...

//ஊரை விட்டு நகரம் வந்து
உலக வணிகத்தில் உருண்டுபிரண்டு
வயதாகி நரை வந்தததும்
குடும்ப உறவை தேடிச்செல்லும்//


நிஜ வரிகள்....... (((

Nesan said...

குடும்ப உறவை காட்டுவத்தில்லை
குழந்தை அன்பை பேசுவதில்லை
குடும்பம் என்றால் வளர்ச்சிக்கு
தடைவிதிக்கும் படிக்கல் என்றும்// மாநகரத்தின் இன்னொரு குணம் இது கவி அழகனின் அற்புதம் இது வாழ்த்துக்கள்!

குணசேகரன்... said...

sharpen words...

Ramani said...

யதார்த்தத்தைச் சொல்லும் மிக அருமையான பதிவு
பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள்
த,ம 13

M.R said...

குடும்ப உறவை காட்டுவத்தில்லை
குழந்தை அன்பை பேசுவதில்லை
குடும்பம் என்றால் வளர்ச்சிக்கு
தடைவிதிக்கும் படிக்கல் என்றும்


உண்மையான சாடல் நண்பரே

M.R said...

தமிழ் மணம் 14

பிரணவன் said...

நகரம் என்பது நரகமாகி
துயரம் தரும் சிகரமாகி
ஊர் நினைப்பை அழித்துவிட்டு
பணத்தை காட்டி போதை செய்யும்
உன்மைதான். இங்கே மனிதர்கள் பலர் இயந்திரங்களாகவே இருக்கின்றனர். . .

ஆகுலன் said...

மிக அருமையாக சொல்லி இருக்குறீர்கள்.....
வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான கவிதை...

சம்பத்குமார் said...

//ஊரை விட்டு நகரம் வந்து
உலக வணிகத்தில் உருண்டுபிரண்டு
வயதாகி நரை வந்தததும்
குடும்ப உறவை தேடிச்செல்லும் //

நகரமயமாதலில் தொலைந்துபோன வாழ்க்கையை தேடிய வரிகள் அருமை நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்

நிரூபன் said...

வணக்கம் நண்பா,
//

மோக போதை நகரம்//

இயந்திர மயமான உலகத்தில் இனிமைகளைத் தொலைத்து விட்ட மனித உணர்வினை உங்களின் இக் கவிதை வெளிப்படுத்தி நிற்கிறது.

suryajeeva said...

கொன்னுட்டீங்க..

ரெவெரி said...

மிக அருமையாக சொல்லி இருக்குறீர்கள்.....யதார்த்தம்..

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை டிஸ்டிங்க்‌ஷன் பாஸ்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நகரம் என்பது நரகமாகி
துயரம் தரும் சிகரமாகி
ஊர் நினைப்பை அழித்துவிட்டு
பணத்தை காட்டி போதை செய்யும்///
அருமையான வரிகள்...

சந்திரகௌரி said...

நகரம் நரகம் என்பதை அநுபவித்தவர்களுக்குத்தான் புரியும். எட்ட நின்று பார்த்தால் இனிக்கும் கிட்டவந்து பார்த்தால்.......... கவிதையில் குடும்ப சுகம் மறந்து வாழும் மக்களுக்கு நல்ல அறிவுரை கொடுத்திருக்கின்றீர்கள். சிந்திக்கட்டும்.

மாய உலகம் said...

இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

மாய உலகம் said...

இயந்திர உலகில் வசந்தத்தை தொலைத்ததை உணர்த்தும் விதமாக உள்ள வரிகள் உண்மை...வாழ்த்துக்கள் நண்பா

புலவர் சா இராமாநுசம் said...

நகரம் என்பது நரகமாகி
துயரம் தரும் சிகரமாகி
ஊர் நினைப்பை அழித்துவிட்டு
பணத்தை காட்டி போதை செய்யும்
அருமை தம்பீ அருமை!
கவிதை
வளமை தம்பீ வளமை!
படிக்க
பெருமை தம்பீ பெருமை!
இதனால்

உனக்கு எனக்கு தமிழுக்கு

புலவர் சா இராமாநுசம்

kovaikkavi said...

''...இறுகிய முகங்கள் கொண்டு
இதிகாசம் படைப்பதாய் எண்ணி
உடல் உழைப்பை உறிஞ்சவிடும்
ஊமையாகும் எலும்புக்கூடுகள் ..''
உழைப்பும் நகர வாழ்வும் நன்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது...தொடரட்டும் பணி....
வேதா. இலங்காதிலகம்.

அம்பாளடியாள் said...

ஆகா அருமையான கவிதை கவிஞரே வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .வாருங்கள் என் தளத்திற்கும் .

மதுமதி said...

சிறப்பு..வாழ்த்துகள்..