8/30/2011

செங்கொடி வெந்ததோ தீயினில்



உன்னையே கொன்று
எம்மை கொல்கிறாய்
உயிர்களை மதித்தே
உன் உயிரினை விட்டாய்

எப்படி நியாயம்
நீ செய்தது
உன்னை பெத்தவளுக்கு
பொறுப்பு யாரது

ஈழத்து நெஞ்சங்கள்
ஒரு போதும்
உயிர்பலி கேட்க்க
இல்லையம்மா

நாம் நொந்தது போதும்
செங்கொடியே
இவள் செய்தது வேண்டாம்
எம் இனமே

41 comments:

கிராமத்து காக்கை said...

எப்படி நியாயம்
நீ செய்தது
உன்னை பெத்தவளுக்கு
பொறுப்பு யாரது

உண்மையான விழிப்புணர்வு வரிகள் வாழ்த்துக்கள்
தோழரே

நிரூபன் said...

ஈழத்து நெஞ்சங்கள்
ஒரு போதும்
உயிர்பலி கேட்க்க
இல்லையம்மா//

எம் மீதான உறவுகளின் உணர்வுகளுக்குத் தலை வணங்கும் அதே வேளை,
இத்தகைய முடிவுகளை நாம் ஒரு போதும் கேட்பதில்லை எனும் உண்மையினையும் சொல்லிக் கொள்கிறோம்,

இனியும் செங்கொடிகள் வேண்டாம்,
முத்துகுமரர்களும் வேண்டாம்,

உங்களின் உணர்வுகள் மாத்திரம் போதுமானது உறவுகளே.

கிராமத்து காக்கை said...

அயல்நாட்டில் வசித்தாலும் உங்களது மனம் தமிழ்நாட்டில் சுற்றிக்கொண்டு இருக்கிறது
வாழ்த்துக்கள் உங்கள் உணர்வுகளுக்கு

சாமக்கோடங்கி said...

பெரும் சோகம்.. கொடுமை... கொடுமை..

Anonymous said...

சகோதரிக்கு அஞ்சலிகளும் வணக்கங்களும் ,இனியும் இவ்வாறான முன் உதாரணங்கள் வேண்டாம் ....

மாய உலகம் said...

நிரூபன் said...
இனியும் செங்கொடிகள் வேண்டாம்,
முத்துகுமரர்களும் வேண்டாம்,

உங்களின் உணர்வுகள் மாத்திரம் போதுமானது உறவுகளே.//

உண்மையே உணர்வுகள் மாத்திரம் போதுமானது... பாழும் உலகில் போராட இன்னும் நிறைய பாக்கியிருக்கிறது....நன்றி நண்பர் நிருபன்.... கவிதையில் உணர்வை வெளிபடுத்தியமைக்கு நன்றி கவிஅழகன் நண்பரே

Mohamed Faaique said...

நல்லதொரு கவிதை..

Anonymous said...

உன்னையே கொன்று
எம்மை கொல்கிறாய் ...

உணர்வு வரிகள்...
கவிதை...இதயத்திலிருந்து...

காட்டான் said...

உன்னையே கொன்று
எம்மை கொல்கிறாய்
உயிர்களை மதித்தே
உன் உயிரினை விட்டாய்

உண்மைதான் இப்பிடியான உயிர்பலிகள் தேவையில்லை அது அந்த நோக்கத்தையே பாழ்படுத்திவிடும் இதை நாம் கண்டிக்காவிடின் வருங்காலம் நம்மை சபிக்கும்..

Yaathoramani.blogspot.com said...

நல்லதொரு கவிதையை பதிவாக்கித்
தந்தமைக்கு நன்றி.த.ம 4

செங்கோவி said...

திருத்திக்கொள்ள முடியாத தவறு.

rajamelaiyur said...

Very sad . .

M.R said...

உண்மை நண்பரே ,உயிர்பலி வேண்டாம் .நண்பர் செங்கோவி சொன்னது போல் திருத்தி கொள்ள முடியாத தவறு.

M.R said...

தமிழ் மணம் ஆறு

ஆகுலன் said...

கண்டிப்பாக இதை ஏற்றுகொள்ள முடியாது.....மூன்று உயிரை காப்பாத்த ஒரு உயிரை விட வேண்டிய அவசியம் ஏது..........முடிந்த அளவு போராடி இருக்கலாமே....மனதுக்கு வேதனை அளித்த விடயம்...

தனிமரம் said...

இப்படியான துயரங்கள் தொடரவேண்டாம் இது நிறுத்தப்படவேண்டிய செயல்கள் அருமை கவிதை  !

இராஜராஜேஸ்வரி said...

எப்படி நியாயம்
நீ செய்தது
உன்னை பெத்தவளுக்கு
பொறுப்பு யாரது

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...
This comment has been removed by the author.
!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

விழிப்புணர்வு வரிகள் அருமை

சுதா SJ said...

கண்களில் நீரை வரவளைக்குது நண்பா உங்கள் கவிதை.
ஆதங்கமும் இயலாமையும் நிறைந்த படைப்பு

சுதா SJ said...

//ஈழத்து நெஞ்சங்கள்
ஒரு போதும்
உயிர்பலி கேட்க்க
இல்லையம்மா//


உண்மைதான்,
ஏனெனில் உயிர்களின் மதிப்பை பல உயிர் இழப்பின் மூலம்
அறிந்தவர்கள் நாங்கள்.

Riyas said...

//நாம் நொந்தது போதும்
செங்கொடியே
இவள் செய்தது வேண்டாம்
எம் இனமே//

ம்ம்ம்ம் சரியே

காந்தி பனங்கூர் said...

//உன்னையே கொன்று
எம்மை கொல்கிறாய்
உயிர்களை மதித்தே
உன் உயிரினை விட்டாய்//

உயிரைக்கொடுத்து உயிரைக் காப்பாற்ற நினைத்தாயே தாயே, உம்மை என்ன சொல்லி போற்றுவது. வீரவணக்கம்.

Unknown said...

//உன்னையே கொன்று
எம்மை கொல்கிறாய்
உயிர்களை மதித்தே
உன் உயிரினை விட்டாய்//

கருத்தாழம் மிக்க சோகவரிகள்
கண்ணீர் துளிகளை சிந்த வைக்கின்றன

புலவர் சா இராமாநுசம்

சி.பி.செந்தில்குமார் said...

தப்பு செஞ்சுடுச்சு, அவசரம்

அம்பாளடியாள் said...

வலிதரும் கவிதை வரிகள்!.....
நன்றி சகோ பகிர்வுக்கு .........

rajamelaiyur said...

இதுபோல் இனி யாரும் செய்யகூடாது

rajamelaiyur said...

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

K said...

வணக்கம் கவியழகன் சார்! கும்புடுறேனுங்க!

கவிதை ரொம்ப உருக்கமா இருந்திச்சு! இதுமாதிரி தீக்குளிப்பு இனிமே நடக்கக்கூடாது சார்!

kowsy said...

மாயைக்குள் மயங்கி உழலும் உலகில், எது, எப்படி, எதற்காகச் செய்கின்றோம் என்று புரியாது, உணர்வை அடக்கமுடியாது, ஆருயிர்களின் அருமை, பெருமை புரியாது, அநியாயமாக எப்படி இப்படி ......? வார்த்தை இல்லை. ஆத்மா சாந்திக்கு மட்டுமே பிரார்த்திக்க முடியும்.

இராஜராஜேஸ்வரி said...

இவள் செய்தது வேண்டாம்
எம் இனமே

அம்பலத்தார் said...

வேண்டாம் இனியும் இத்தகைய பொல்லாப்பு. உரிமைக்காக -
உயிரைக்கொடுத்தல்ல-
உயிருள்ளவரை போராடுவோம்

Muruganandan M.K. said...

"..உயிர்களை மதித்தே
உன் உயிரினை விட்டாய் .."

நெஞ்சை
வலிக்க வைக்கும்
வலிய வரிகள்

குறையொன்றுமில்லை. said...

சகோதரிக்கு அஞ்சலிகள். இது போல முன்னுதாரணங்கள் வேண்டாமென்றுதான் தோன்றுகிரது.

Anonymous said...

சரியாக சிந்தித்துச் செயற்படலாம் ..இது போலவல்ல...
வேதா. இலங்காதிலகம்.

ரிஷபன் said...

எப்படி நியாயம்
நீ செய்தது
உன்னை பெத்தவளுக்கு
பொறுப்பு யாரது

சமூகப் பொறுப்புடன் எழுதப்பட்ட வரிகள்.

மாலதி said...

தோழி செங்கொடி பற்றிய நறுக்கு சிறப்பானது உண்மையில் வேதனைப்பட வைத்ததது உங்களின் நறுக்கு மட்டுமல்ல செங்கொடியின் செய்கையும்தாம் அதுமட்டுமல்லாமல் ஈழம் தமிழர்களின் உயிரை கேட்கவில்லை உங்களின் உரத்த குரலை தான் இந்திய அரசின் செவிட்டு காதுகளுக்கு கேட்கம்படியாக இருக்கட்டும் என்கிறீர்

sarujan said...

(ஈழத்து நெஞ்சங்கள்
ஒரு போதும்
உயிர்பலி கேட்க்க
இல்லையம்மா )உண்மை வரிகள்

sarujan said...

(எப்படி நியாயம்
நீ செய்தது
உன்னை பெத்தவளுக்கு
பொறுப்பு யாரது )மிகச் சரியான கேள்வி

sarujan said...

(நாம் நொந்தது போதும்
செங்கொடியே
இவள் செய்தது வேண்டாம்
எம் இனமே)அனைத்து தமிழரின் விருப்பம்

சக்தி கல்வி மையம் said...

அப்போதாவது விழிக்கட்டும் மக்கள்..