8/21/2011

நட்பு


நீ சிரித்தால்
நட்பும் சிரிக்கும்
நீ அழுதால்
நட்பு துடிக்கும்

நீ நடந்தால்
நட்பும் நடக்கும்
நீ விழுந்தால் - (நட்பு)
கை கொடுக்கும்

நீ உயர்ந்தால்
நட்பு மகிழும்
நீ மறந்தாலும் - (நட்பு )
உன்னை நினைக்கும்

49 comments:

M.R said...

முதல் நட்பு

நிரூபன் said...

நட்பு//

வணக்கம் கவிக்கிழவரே,
தலைப்பே நண்பர்களைப் பற்றியதாக இருக்கிறதே.
இருங்கள் உள்ளார்ந்து படித்திட்டு வாரேன்.

M.R said...

நட்பிற்கு இலக்கணமாய் ஒரு கவிதை அருமை ,

பகிர்வுக்கு நன்றி நண்பரே

நிரூபன் said...

நீ சிரித்தாள்
நட்பும் சிரிக்கும்
நீ அழுதால்
நட்பு துடிக்கும்//

நட்பின் வலிமையினை, நட்பின் உணர்வுதனை விளக்க, இதனை விட ஒரு வார்த்தை வேண்டுமா?
உண்மை நட்பை உணர்வின் வெளிப்பாடாக வெளிப்படுத்தியிருக்கிறீங்க.

நிரூபன் said...

நீ நடந்தால்
நட்பும் நடக்கும்
நீ விழுந்தால் - (நட்பு)
கை கொடுக்கும்//

நட்பு எப்போதெல்லாம் உதவி செய்யும், எவ்வாறு தன் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் என்பதனை விளக்கியிருக்கிறீங்க.

rajamelaiyur said...

Super friendship kavithai

நிரூபன் said...

நீ உயர்ந்தால்
நட்பு மகிழும்
நீ மறந்தாலும் - (நட்பு )
உன்னை நினைக்கும்//

உண்மை நட்பினை உரத்துச் சொல்ல இதனை விட வேறு வார்த்தைகள் தேவை இல்லை என்று நினைக்கின்றேன்.
ஆழமாக அற்புதமாக நட்பினைப் பற்றிச் சொல்லியிருக்கிறீங்க.

rajamelaiyur said...

Kalakkal kavithai

Unknown said...

சிறிய அழகான கவிதை௧!!

Unknown said...

தமிழ்மணத்தை சேருங்க அப்புறமா வாறன்

நிரூபன் said...

நட்பு: உண்மை நட்பின் உணர்ச்சிக் கீதம்!

கோகுல் said...

2-ம் நட்பு.
ஆம் நண்பா உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.

உணவு உலகம் said...

நட்பைக் கூறும் நற்கவிதை.

ஆகுலன் said...

நீ மறந்தாலும் - (நட்பு )
உன்னை நினைக்கும்

அழகான வரிகள்.....
சில வரிகளை முக புத்தகத்தில் இட விரும்புகிறேன் உங்களது ஓகே வேண்டும்...

நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)

குறையொன்றுமில்லை. said...

நட்புக்கு வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

நீ உயர்ந்தால்
நட்பு மகிழும்
நீ மறந்தாலும் - (நட்பு )
உன்னை நினைக்கும்//
நட்புக்கு வாழ்த்துக்கள்.

மாலதி said...

நப்பைபற்றிய சிறப்பான வரிகள் உண்மையில் நட்பு உள்வாங்கி கொள்ள கூடிய உயர்ந்த வரிகள் பாராட்டுகள் நன்றி

அம்பாளடியாள் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ .நம்ம கடப்பக்கம்

வந்து போங்கோ .இண்டைக்கு உங்கள சிரிக்க வைக்கணும் .நன்றி

பகிர்வுக்கு ....

sarujan said...

(நீ மறந்தாலும் - (நட்பு )
உன்னை நினைக்கும்)உணர்ந்து எழுதிய வரிகள்

காந்தி பனங்கூர் said...

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்

Unknown said...

வந்து போட்டிட்டேன்..இப்போ செட் ஆகிருச்சு!

Unknown said...

அட உங்கள் பேர் சொல்லும் கவிதை

Mohamed Faaique said...

natpu, kaathal, soaham'nu color color'a kalakkureenga...

(sorry NHM Writer is not working)

Anonymous said...

நடப்பை பற்றி சொன்ன நடப்புக்கு நட்பின் வாழ்த்துக்கள் ...

Yaathoramani.blogspot.com said...

நட்பின் உயர்வை மிகச் சுருக்கமாகவும்
மிக அழகாகவும் சொல்லிச் செல்லும்
அசத்தல் கவிதை
தொடர வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

நீ மறந்தாலும் நட்பு உன்னை நினைக்கும்...உண்மை தான் நண்பா அசத்தல்

vidivelli said...

இதுதான் உண்மையான நட்பு...
அழகான நட்பு கவிதை..
அன்புடன் பாராட்டுக்கள் கவிக்கு..

ஆமினா said...

//நீ மறந்தாலும் - (நட்பு )
உன்னை நினைக்கும்//

செம....செம.....

அந்த நம்பிக்கையில் தான் பலபேருக்கும் வண்டி ஓடுது...

சுதா SJ said...

நட்பின் பெருமை சொல்லும் வரிகளை கொண்ட கவிதை

சுதா SJ said...

//நீ மறந்தாலும் - (நட்பு )
உன்னை நினைக்கும்/

ரெம்ப ரசித்த இடம்
நிஜ வரிகளும் கூட...

Anonymous said...

அழகான கவிதை..வாழ்த்துக்கள்...

கிராமத்து காக்கை said...

கவிதை அருமை படங்கள் அதைவிட அருமை

Anonymous said...

''...நீ உயர்ந்தால்
நட்பு மகிழும்
நீ மறந்தாலும் - (நட்பு )
உன்னை நினைக்கும்...''
இது பொது விதி. நட்பு என்று நினைக்க, நம்மை ஒதுக்கும் நட்பும் உள்ளது. வேற யாரையும் தூக்கி வைத்துக் கொண்டாடும் நட்பு பொய்யான நட்பு தானே! இப்படி போலியாகவும் பலரகம் கவிஅழகன்! வாழ்த்துகள்
வேதா. இலங்காதிலகம்.

சாமக்கோடங்கி said...

அதுதானே நட்பின் இலக்கணம்...

நன்றி..
சாமக்கோடங்கி..

பிரணவன் said...

நிச்சயம் நட்பு அழகுதான். . .அருமையான வரிகள். . .

சென்னை பித்தன் said...

உயர்ந்த நட்பு!

kowsy said...

உண்iமாயான நட்பின் வரிகளைக் கவிதையாய் வாழ்த்தியிருக்கின்றீர்கள். நட்பென்று கூறி நயவஞ்சகம் புரிவோரும் உலகில் பலர் உள்ளனர்.

DREAMER said...

நட்புடன் எழுதிய கவிதை நட்பு பாராட்டுகிறது. நன்றி..!

நட்புடன்
DREAMER

காட்டான் said...

நீ நடந்தால்
நட்பும் நடக்கும்
நீ விழுந்தால் - (நட்பு)
கை கொடுக்கும்

வணக்கம் மாப்பிள அருமையான வார்த்தைகளுடன் கூடிய அழகான கவிதை  இங்கு நல்ல நட்பு இல்லாவிட்டால் ஒன்ன்றுமேயில்லை.. வேலையில் இருந்து வீடுவரை நட்பாபால்தான் முடிகிறது.. குறைவாக எழுதினாலும் செறிவாக எழுதுகிறீர்கள்... அது சரி கடுகு சிறிதென்னாலும் காரம் பெரிதுதானேய்யா...வாழ்த்துக்கள்.. வீடுபோய் சேர்ந்தவுடன் ஓட்டுபோடுறேன்யா...

காட்டான் குழ போட்டான்..

நிலாமதி said...

நீ மறந்தாலும் நட்பு உன்னை நினைக்கும்

Anonymous said...

பதிவுலக நட்பின் மூலம் இணையட்டும் இதயங்கள்.

தமிழ்விருது said...

இலைமறை காயாக உள்ள பல பதிவர்களை இனம் காணல்.இது எமது தளத்தின் நோக்கம்.கொஞ்சம் எல்லாப்பதிவர்களும் வந்து ஆதரவைத்தாருங்கள்

arasan said...

நட்புக்கு அழகிய விளக்கம் ... வாழ்த்துக்கள்

Unknown said...

உடுக்கை இழந்தவன் கைபோல உதவுதல்
நட்பென கூறினார் வள்ளுவர்
நட்பு பற்றி மிக அருமையாய்
எழுதியுள்ளாய் தம்பீ!

புலவர் சா இராமாநுசம்

தினேஷ்குமார் said...

நட்பின்றி இவ்வுலகு சுற்றாது ... நல்லோர் நட்பிற்க்கு மிகையேதும் உண்டோ...

அம்பலத்தார் said...

அசத்திட்டிங்க பாஸ்

Riyas said...

நட்பு உன்னதமானதுதான் கவிதை அழகு

அம்பாளடியாள் said...

குட்டிக்குட்டிக் கவிதைகளால் இந்த சொர்க்கத்தை விலைக்கு வாங்கலாம் என்று நினைப்போ இந்தக் கவிஞருக்கு?:..வாழ்த்துக்கள் சகோ அருமையான கவிதைப் பகிர்வுக்கு ......

மும்தாஜ் said...

அழகிய நட்பின் வரிகளை படைத்த நட்பிற்கு வாழ்த்துக்கள் !!!!!!