8/14/2011

நான் வருவேன் மறுமுறை


மீண்டும் ஒருமுறை என்
மண்ணை மிதித்திட
வேண்டும் விடுதலை

நான் ஆண்ட பூமியை
தோண்டி பார்த்திட
வேண்டும் பலமுறை

நான் விட்டு வந்த
சொந்த பந்தங்கள்
செத்தது எதுவரை

அவர் வீர எலும்பினை
தேடி எடுத்து
தேடவேண்டும் உறவினை

அன்னை மடியினில்
தலை சாய்ந்த வயதினில்
மறந்தேன் உலகினை

என்
அன்னை மண்ணிலே
தலை சாய்த்தபோது
இழந்தேன் உலகினை

உண்மை மகனாய்
ஒற்றை மகவாய் - என்ன
செய்தேன் இதுவரை

பெற்ற தாயையும்
சொந்த மண்ணையும்
விட்டேன் அது குறை

கூடி குழாவி
கும்மி அடித்த
உறவுகள் உள்ளீரோ

ஒருவர் இருந்தாலும்
தந்தி அனுப்புங்கள்
நான் வருவேன் மறுமுறை

37 comments:

நிலாரசிகன் said...

உணர்ச்சி பொங்கிய வரிகள் நண்பா வாழ்த்துகள்..............

இராஜராஜேஸ்வரி said...

நான் வருவேன் மறுமுறை

இனி நலம் வரட்டும். மலரட்டும் வாழ்வு.

Mohamed Faaique said...

///அன்னை மடியினில்
தலை சாய்ந்த வயதினில்
மறந்தேன் உலகினை

என்
அன்னை மண்ணிலே
தலை சாய்த்தபோது
இழந்தேன் உலகினை//

இது உண்மையிலேயே கண் கலங்க வைத்து விட்டது.... மிக அருமையான கவிதை நன்பா....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வேண்டும் விடுதலை

மைந்தன் சிவா said...

கவிதையில் சோகம்...புலம்பெயர்ந்த நண்பர்களின் உண்மையான கவலை...
ம்ம்ம்
நான் வந்திட்டேன்...நான் வந்திட்டேன்!

ரியாஸ் அஹமது said...

அன்னை மடியினில்
தலை சாய்ந்த வயதினில்
மறந்தேன் உலகினை

என்
அன்னை மண்ணிலே
தலை சாய்த்தபோது
இழந்தேன் உலகினை
//////////
மனம் கனத்துவிட்டது நண்பா

விடியும் என்ற நம்பிக்கை கொள்வோம்

♔ம.தி.சுதா♔ said...

சகோதரம் தங்கள் ஆசை நிச்சயம் நிறைவேறும் காத்திருங்கள்... இந்த உறவுகள் தங்களுக்காகவே காத்திருக்கிறது.

vidivelli said...

அன்னை மடியினில்
தலை சாய்ந்த வயதினில்
மறந்தேன் உலகினை

என்
அன்னை மண்ணிலே
தலை சாய்த்தபோது
இழந்தேன் உலகினை/

பெற்ற தாயையும்
சொந்த மண்ணையும்
விட்டேன் அது குறை/

மனசைக் குடைகிறது ஒவ்வொரு வரிகளும்...
அற்புதமான வரிகள்..
வாழ்த்துக்கள் கவியழகா..

மாய உலகம் said...

உணர்ச்சி வலிகள் மிகுந்த கவிதை... மறுமுறை வரும்போது எதிர்பார்த்தவைக்கள் இருக்கட்டும் நண்பா

மாய உலகம் said...

த ம 7

Ramani said...

அருமையான படைப்பு
இழந்தவர்களுக்குத்தான்
அதன் வலி புரியும்
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Lakshmi said...

உ ங்கள் ஆசைகள் நிறை வேறட்டும்.

ஆகுலன் said...

உண்மை மகனாய்
ஒற்றை மகவாய் - என்ன
செய்தேன் இதுவரை

அண்ணா உணர்வின் வரிகள்............

சென்னை பித்தன் said...

உணர்ச்சி பூர்வமான கவிதை!

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

நல்லா இருக்கு நண்பா
உணர்வுகளை புரட்டிப்போடும் கவிதை இது
வாழ்த்துக்கள்

sarujan♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...

(அவர் வீர எலும்பினை
தேடி எடுத்து
தேடவேண்டும் உறவினை)உணர்ச்சி வரிகள் அருமை

பிரணவன் said...

என்
அன்னை மண்ணிலே
தலை சாய்த்தபோது
இழந்தேன் உலகினை
அழகான வரிகள். . .

நிகழ்வுகள் said...

என் உணர்வுகளையும் இந்த கவி பிரதிபலிக்கிறது ..(

காட்டான் said...

நன்றி மாப்பிள அருமையான கவிதை.. இக்கவிதையில் என்னைக்கான்கிறேன்...

காட்டான் குழ போட்டான்..

சந்திரகௌரி said...

முடியாது என்று உலகினில் எதுவுமில்லை. மனிதம் யாவும் ஒன்றென மதித்தே வாழப் பழகிவிட்டால், உள்ள சொந்தம் அத்தனையும் உரிமைப் பொருளாய் ஆகிவிடும். உயிர்கள் அனைத்தும் உறவுகள் என்னும் பெருமைத் தன்மை மனதுள் புகுந்துவிட்டால், சொந்தம் பல கூடிவிடும். சொர்க்கம் எம்மைத் தேடிவரும். வாழ்த்துகள்

M.R said...

உணர்வு நிறைந்த கவிதை

அதில் என்னைக் கண்டேன்

சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்

பாரத்... பாரதி... said...

""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..

அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..(உங்களுக்கும் சொல்லாம் தானே சகோ)

பாரத்... பாரதி... said...

இந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

சூப்பர்....

பூங்கோதை said...

தவிக்கும் உள்ளம்...
துடிக்கும் உதடு...
துளிர்க்கும் கண்ணீர்...
உணர்வின் வரிகள்...
வாழ்த்துக்கள்.....

இந்திய சகோதரர்களுக்கு....
சுதந்திரத்திற்காக ஏங்கும் சகோதர சகோதரிகளின்
சுதந்திர தின வாழ்த்துக்கள்...

! சிவகுமார் ! said...

எளிய நடையில் நன்றாக எழுதி உள்ளீர்கள். தொடரட்டும் பயணம்..

Anonymous said...

உணர்வு நிறைந்த கவிதை ....

Anonymous said...

உணர்வு நிறைந்த கவிதை.
சுதந்திர தின வாழ்த்துக்கள்...
வேதா. இலங்காதிலகம்.

தமிழ்த்தோட்டம் said...

உணர்வுகளை பகிர்ந்திருக்கீங்க பாராட்டுக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

good

கார்த்தி said...

கவலையான ஏக்கம்தான்!! சொந்த மண்ணைப்போல் எது வரும்?

பாரத்... பாரதி... said...

வெள்ளைதாள்களாய் தூய்மையாய் சேர்ந்திருந்த எம் சோதரர்கள் திசைக்கொன்றாய், கிழித்து வீசப்பட்டதன் வலியை அப்படியே கவிதையாக்கி இருக்கிறீர்கள்.

புலவர் சா இராமாநுசம் said...

கவிதனைப் படிப்பார்-யாரும்
கண்ணீர் வடிப்பார்
செவிவழி கேட்பினும்-தம்
செயல்தனை மறப்பார்
புவிதனில் எவரே-கேட்டுப்
புலம்பிடா தவரே
நவிலுவேன் நம்பீ-இருப்பீர்
நடக்குமே தம்பீ

புலவர் சா இராமாநுசம்

அம்பலத்தார் said...

இது உங்கள் ஏக்கம்மட்டுமல்ல ஒட்டுமொத்த புலம்பெயர் உறவுகளினதும் ஏக்கம் வாழ்த்துக்கள்

மாலதி said...

கவிதையில் சோகம்

யசோதா காந்த் said...

அனைத்தும் அருமை ...

Anonymous said...

உணர்ச்சி பூர்வமான கவிதை,
அருமை ! அருமை !!