8/07/2011

தமிழ் அன்னையின் கதறல்

டிஸ்கி - ஈழதமிழ் சமுகத்தின் முதுபெரும் புலமையாளர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் மறைந்தது ஒருமாதம் ஆகின்றது அதை முன்னிட்டு



தமிழுக்கு பிறந்தவனே
தமிழோடு வளர்ந்தவனே
தமிழுக்குள் ஆய்வு செய்து
தமிழையே வளர்த்தவனே

நீ இன்றி தமிழ் இல்லை
தமிழ் இன்றி நீ இல்லை
உலகத்தில் தமிழ் மொழியை
தலை நிமிர்த்திய என் பிள்ளை

இயல் இசை நாடகத்தில்
இயல்புடனே இசைந்தவனே
நாட்டுப்புற நாடகத்துக்கே
நாட்டாமை ஆனவனே

சமூகவியல் பொருளியலில்
அறிவுத்திறன் கொண்டவனே
மாக்சிச கொள்கையிலே
மாறாமல் வந்தவனே

பர்மிங்காம் பல்கலையில்
தமிழ் கற்க சென்றுவிட்டு
நீ செய்த ஆய்வினால்
தமிழ் உன்னை கற்றதடா

இலக்கணங்கள் இலக்கியங்கள்
எடுத்தவுடன் பறந்து வரும்
நீ எழுதிய புத்தகங்கள்
நினைக்கவே தமிழ் வளரும்

கைலாசபதி மௌனகுரு என
தமிழ் நட்பு கொண்டவனே
பிழையென்றால் நேரே சொல்வாய்
கலைஞ்ஞசருக்கே மறுப்பு சொன்னாய்

தமிழில் உள்ள பற்றுனாலே
மண் மீது காதல் கொண்டாய்
தமிழருக்கு தீர்வு காண
அரசியல் கொள்கை கொண்டாய்

தமிழ் துறையில் நீ தலைவன்
புத்தகத்தில் நீ புலவன்
எத்தனை பேருக்கு உன்கையால்
தமிழ் பால் கொடுத்திருப்பாய்

ஈழத்தமிழ் சமுகத்தின்
முது பெரும் முனைவரே
காலத்தின் கட்டளையால்
கண் மூடி விட்டாயே

கதறுவது மக்களல்ல
தமிழ் மொழியும் கூடத்தான்
பிரிந்தது நீ அல்ல
தமிழ் சிறப்பும் சேர்த்துதான்

மிக்சி - கலைஞ்ஞருக்கே மறுப்பு சொன்னாய் - செம்மொழி மாநாட்டுக்கு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு அழைப்பு வந்ததும் கலைஞ்ஞர் கருணாநிதியிடம் ஈழத்தமிழர் பற்றிய தெளிவான கொள்கை இல்லை ஆதலால் கலந்துகொள்ள மாட்டேன் என மறுப்பு கடிதம் அனுப்பியவர்

இறுதி சேர்க்கை

இவர் கடைசியாக கலந்து கொண்ட சர்வதேச மாநாடு, கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடுதான். இந்த மாநாட்டுக்கு அவர் வருவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இருப்பினும் தமிழுக்காக செல்கிறேன் என்று கூறி கலந்து கொண்டார்.

இவர் மறுப்பு கடிதம் அனுப்பியதும் உண்மை கலந்து கொண்டதும் உண்மை

தவறுக்கு வருந்துகின்றேன்
நன்றி காட்டான்

37 comments:

இராஜராஜேஸ்வரி said...

இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Unknown said...

கதறுவது மக்களல்ல
தமிழ் மொழியும் கூடத்தான்
பிரிந்தது நீ அல்ல
தமிழ் சிறப்பும் சேர்த்துதான்
100% TRUE ....
TQ KOR DA INFO AND POEM
HAPPY FRIENDSHIP DAY

தமிழ்வாசி பிரகாஷ் said...

நினைவு கவிதை அருமை....

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

தமிழ்மணம் இணைச்சுட்டேன்.... நன்பேண்டா

vidivelli said...

தமிழுக்கே இழப்பு
இவர் இறப்பு....

நினைவுக்கவிதை அருமையாய் வரித்துள்ளீங்க.......
அன்புடன் நினைவுப்பகிர்வுக்கு பாராட்டுக்கள்...

vidivelli said...

நீ இன்றி தமிழ் இல்லை
தமிழ் இன்றி நீ இல்லை
உலகத்தில் தமிழ் மொழியை
தலை நிமிர்த்திய என் பிள்ளை/

painful

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழை நிமிர்ந்து பேசியவர்...

இறங்கல்பாவிற்க்கு அவருக்கும் என் அஞ்சலிகள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

கோகுல் said...

கதறுவது மக்களல்ல
தமிழ் மொழியும் கூடத்தான்
பிரிந்தது நீ அல்ல
தமிழ் சிறப்பும் சேர்த்துதான்
//
புலமையாளருக்கு அஞ்சலிகள்.

ஹேமா said...

நல்ல மனிதர்கள்,அறிவுஜீவிகள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்கிற ஓரளவு திருப்தி இப்படியான மனிதர்களாலேயே நிறைவாகிறது.
நல்லதொரு நினைவுப் பதிவு யாதவன் !

கோகுல் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!@

காட்டான் said...

அருமையான அஞ்சலி... 
காட்டானுக்கு உலக அறிவு குறைவுதானய்யா.. நான் கேள்விப்பட்டவரை இவர் செம்மொழி  மகாநாட்டி சென்றதென்றோ..?? அங்கு ஈழம் என்பது சிங்களசொல் என்றும் கூறியதாக... தவரு இருந்தா மன்னிச்சுக்கொள் மாப்பிள காட்டானுக்கு ஒலக அறிவு கம்மி...????

Anonymous said...

''..தமிழுக்கு பிறந்தவனே
தமிழோடு வளர்ந்தவனே
தமிழுக்குள் ஆய்வு செய்து
தமிழையே வளர்த்தவனே...
நிறைந்த தகவல்களோடு நல்ல பதிவு. மகிழ்ச்சி. வாழ்த்துகள் கவி அழகா!
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com

Anonymous said...

Happy friendship day.

vidivelli said...

HAPPY FRIENDSHIP DAY

rajamelaiyur said...

Happy friendship day

Reverie said...

என் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...

உணவு உலகம் said...

என் அஞ்சலிகள்.

நிரூபன் said...

பர்மிங்காம் பல்கலையில்
தமிழ் கற்க சென்றுவிட்டு
நீ செய்த ஆய்வினால்
தமிழ் உன்னை கற்றதடா//

வரிகள் ஒவ்வொன்றும் அஞ்சலிக் கவிதைக்கு ஏற்றாற் போலப் பொருந்தி வந்துள்ளது,
தமிழாசானனின் பெருமைகளையும், அவரின் பணிகளையும் உங்களின் கவிதை தாங்கி வந்து, அவரது நினைவுகளினூடே எம் சமூகத்தின் மத்தியில்
சிவத்தம்பி ஐயாவை நடை போட வைத்திருக்கிறது உங்கள் கவிதை.

மாய உலகம் said...

//செம்மொழி மாநாட்டுக்கு பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு அழைப்பு வந்ததும் கலைஞ்ஞர் கருணாநிதியிடம் ஈழத்தமிழர் பற்றிய தெளிவான கொள்கை இல்லை ஆதலால் கலந்துகொள்ள மாட்டேன் என மறுப்பு கடிதம் அனுப்பியவர்//

அவரது நேர்மையை காட்டுகிறது...நன்றி

Anonymous said...

ஈழ தமிழர்களை பொறுத்தவ வரை பெரிய இழப்பு தான் ..கூடவே தமிழுக்கும்.

சுதா SJ said...

எனது அஞ்சலிகள் பாஸ்

காட்டான் said...

தம்பி மாயா உலகம் தயவு கூர்ந்து தவரான தகவல் தராதீர்கள்... சிவதம்பிஐயா தமிழ் ஈனதலைவரின் அழைப்பை ஏற்கவில்லை என்பதை கூறாதீர்கள்...!!!!!

sarujan said...

கவிதை அருமை.(கதறுவது மக்களல்ல
தமிழ் மொழியும் கூடத்தான்) .கலைஞ்ர்கு மறுப்பு சொன்னாய்

ஆகுலன் said...

கவிதை அழகு..அதிலும்..
இயல் இசை நாடகத்தில்
இயல்புடனே இசைந்தவனே
நாட்டுப்புற நாடகத்துக்கே
நாட்டாமை ஆனவனே

இந்த வரிகள் என்னை கவர்ந்தவை..

சக்தி கல்வி மையம் said...

வாழ்த்துக்கள்..
மாப்ள..

கவி அழகன் said...

செம்மொழி மாநாட்டுக்கு சிவத்தம்பி சென்றார் என்ற கருத்தை காட்டான் சார் முன்வைத்துள்ளார். உண்மையாக இருக்கலாம் . இதில் தெளிவு கான விரும்புகின்றேன். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் . நான் சிவத்தம்பி கொடுத்த பேட்டியை பார்த்து தான் இந்த வரியை போட்டேன் . பேட்டிக்கான லிங்க் இங்கே
http://www.youtube.com/watch?v=h_uunlQd9Fo&feature=player_embedded#at=௨௧

இதேபோல் சிவத்தம்பி சென்றார் என்பதற்கான ஆதாரம் இருந்தால் சொல்லுங்கப்பா

8வது தஞ்சை உலகத்தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பேராசிரியர் சிவத்தம்பி திருப்பி அனுப்பப்பட்டார், என்ற அநீதிக்குப் பரிகாரமாக 2000ம் ஆண்டில் திமுக அரசு அவருக்கு ‘திருவிக விருது’ என்று கருணாநிதி தன் இரங்களில் குறிப்பிட்டுளார்

தாயகத்தின் நடைமுறையரசு சிங்களத்தால் சிதைக்கப்பட்டிருக்காவிட்டால் தேசியத் தலைவர் அவர்களால் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டிருக்கக்கூடியவர்.

என்று விசுவநான் ருத்ரகுமாரன்,பிரதமர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுளார்

உண்மையை எழுதுவது எமது கடமை

கவி அழகன் said...

இவர் கடைசியாக கலந்து கொண்ட சர்வதேச மாநாடு, கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடுதான். இந்த மாநாட்டுக்கு அவர் வருவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இருப்பினும் தமிழுக்காக செல்கிறேன் என்று கூறி கலந்து கொண்டார்.

இவர் மறுப்பு கடிதம் அனுப்பியதும் உண்மை கலந்து கொண்டதும் உண்மை

தவறுக்கு வருந்துகின்றேன்
நன்றி காட்டான்

சி.பி.செந்தில்குமார் said...

மரபுக்கவிதை !!

காட்டான் said...

மாப்பிள என்ன காட்டான் சார்..!!!?? அந்த கருமத்த விட்டுட்டு காட்டான்னு பாசமா கூப்பிடுடோய்..
ஐயா சிவதம்பி மிக சிறந்த தமிழ் அறிஞர் இதில் சந்தேகமேயில்லை... அந்த தகவல் உங்களுக்கு தர வேண்டும் என்று எனக்குப்பட்டது அவ்வளவே வேறு ஒன்றுமில்லை... அவருக்கு நீங்கள் செய்த அஞ்சலி பாராட்டுகுரியது.. வாழ்த்துக்கள்...

காட்டான் குழ போட்டான்...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

இனிய நண்பர் தின வாழ்த்துக்கள்.

arasan said...

இரங்கற்பா எழுதிய உங்களுக்கு நன்றிகள்

Yaathoramani.blogspot.com said...

கதறுவது மக்களல்ல
தமிழ் மொழியும் கூடத்தான்
பிரிந்தது நீ அல்ல
தமிழ் சிறப்பும் சேர்த்துதான்மனம் கவர்ந்த அருமையான வரிகள்
அழகான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

தமிழ் மலை சாய்ந்தது தம்பீ!
நல்ல கவிதாஞ்சலி
புலவர் சா இராமாநுசம்

அம்பாளடியாள் said...

தமிழ் வளர்க்கப் பாடுபட்ட பெரியவரின்
ஆன்மா சாந்திபெறப் பிரார்த்திப்போம்.
நன்றி சகோ பகிர்வுக்கு .இந்தவாரம் என் தளத்தில்
புரட்சிக் கவிதைகள் வாரம்.முடிந்தால்
உங்கள் கருத்து மழையைப் பொழியுங்கள்.

மாலதி said...

ஐயா அவர்களின் நினைவை ஏந்தி உங்களின் சிறப்பான பதிவு பாராட்டுகளுக்கு உரியன ஐயா அவர்கள் இங்கு செம்மொழி ? மனத்திற்கு கோவை வந்தபோது எங்களுக்கு சற்று சங்கடம்தான் என்ன செய்வது அய்யா அவர்களின் தமிழ்பணி வணங்க தக்கது தொடர்க ...