7/17/2011

என் காதல் குழந்தையே


இதயம் முழுக்க துடிப்பதெல்லாம்
உந்தன் காதலே
இமைக்கிடையில் கண்கள் இல்லை
காதல் பூக்களே
வருடம் முழுக்க நாட்கள் இல்லை
உன்னை போலவே
வாசமுள்ள ரோஜா கூட
காதல் சொல்லுமே

எண்ணம் முழுக்க உன்னைப்பற்றி
மட்டும் நினைக்குதே
கண்ணும் கண்ணும் மோதிக்கொள்ள
ஆசை கொள்ளுதே
உதடுகள் இடையில் வருவதெல்லாம்
காதல் சொற்களே
தீர்ந்து போன பேனா கூட
காதல் சாட்சியே

வாழ்த்துமடல் அனுப்பிவைக்க
கவிதை எழுதினேன்
வார்த்தை இன்றி காதல் மட்டும்
முந்தி வருகுதே
நெஞ்சுக்குள்ளே நிறைய காதல்
பொதிந்து கிடக்குதே
எழுதக்கூட முடியவில்லை - என்
காதல் குழந்தையே

44 comments:

vanathy said...

நெஞ்சுக்குள்ளே நிறைய காதல்
பொதிந்து கிடக்குதே
எழுதக்கூட முடியவில்லை - என்
காதல் குழந்தையே/// super lines.
well written.

நிரூபன் said...

காதல் குழந்தை இனிய காலை வேளையில் கவிதையாகப் பிறந்திருக்கிறது. இருங்கோ படிச்சிட்டு வாரேன்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அழகான குழந்தை... அட நான் கவிதையை சொன்னேன்.

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துமடல் அனுப்பிவைக்க
கவிதை எழுதினேன்//

Nice..

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃவாழ்த்துமடல் அனுப்பிவைக்க
கவிதை எழுதினேன்
வார்த்தை இன்றி காதல் மட்டும்
முந்தி வருகுதேஃஃஃஃஃ

அருமை அருமைப்பா அது சரி முந்திவரும் காதலுக்கம் முத்திரையொட்டியா அனுப்பணும்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னைச் செருப்பால் அடித்த இலங்கைப் பதிவர்

ரிஷபன் said...

நெஞ்சுக்குள்ளே நிறைய காதல்
பொதிந்து கிடக்குதே
எழுதக்கூட முடியவில்லை - என்
காதல் குழந்தையே

அருமை.. அருமை..

Vetha.Elangathilakam. said...

இமைக்கிடையில் கண்கள் இல்லை
காதல் பூக்களே
good vaalthukal
http:/www.kovaikkavi.wordpress.com

மாலதி said...

//வாழ்த்துமடல் அனுப்பிவைக்க
கவிதை எழுதினேன்
வார்த்தை இன்றி காதல் மட்டும்
முந்தி வருகுதே
நெஞ்சுக்குள்ளே நிறைய காதல்
பொதிந்து கிடக்குதே
எழுதக்கூட முடியவில்லை - என்
காதல் குழந்தையே //அழகான குழந்தை

Rathnavel Natarajan said...

நெஞ்சுக்குள்ளே நிறைய காதல்
பொதிந்து கிடக்குதே
எழுதக்கூட முடியவில்லை - என்
காதல் குழந்தையே


அழகு கவிதை.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்

கிராமத்து காக்கை said...

கவிதை அருமை

Mohamed Faaique said...

அய்யோ!! அய்யய்யோ!! தானுண்டு..தன் வேலையுண்டு’னு செவ்வனேண்டு இருந்த உங்க வாழ்க்கைல யாருங்க ஆப்பு வச்சாங்க....
காதல் ரசம் பொங்கி வழியுது.. வாழ்த்துக்கள்..

Unknown said...

//தீர்ந்து போன பேனா கூட
காதல் //
அவ்வவ்....
ஹிஹி பாஸ்.....இன்னுமா பேனாவால் எழுதுறீங்க???அவ்வ்வ்வவ்வ்வ்வ் சாட்சியே

kowsy said...

அழகான கவிதை. மெட்டுப் போட்டுப் பாடிப்பார்த்தால், அழகான பாடல்.

Anonymous said...

சிறப்பான வரிகள் பாஸ் ,

///வாழ்த்துமடல் அனுப்பிவைக்க
கவிதை எழுதினேன்
வார்த்தை இன்றி காதல் மட்டும்
முந்தி வருகுதே // கலக்கல் ..

காட்டான் said...

தீர்ந்து போன பேனா கூட
காதல் சாட்சியே

இப்புடிதான் மாப்பிள அடித்தடித்து எழுதினால் பேனா என்ன கையே தேஞ்சு போகும்..
மாப்பிள.. காட்டான் குழ வைச்சிட்டான்

ஹேமா said...

பாவம் குழந்தை .... நீங்களும்தான் !

தனிமரம் said...

கவிதை அருமை வார்த்தைகள் கோத்திருக்கிறீங்கள் பேனா மை தீர்ந்தாலும் காதல் தீராது என்ற சிலேடையில் கிறங்கிப் போகிறது மனசு!
நேரம் இருந்தால் ஆடிக்கூழ் குடிக்க வாங்க!

நிரூபன் said...

வருடம் முழுக்க நாட்கள் இல்லை
உன்னை போலவே
வாசமுள்ள ரோஜா கூட
காதல் சொல்லுமே//

ஆகா.....அவளைப் போல, வருடத்திற்கும் எல்லை இல்லையா..
அண்ணருக்கு காதல் முத்திடுச்சி, இனி வீட்டுக்குச் சொல்லி டும் டும் இற்கு ஒழுங்கு செய்ய வேண்டும்.

நிரூபன் said...

கண்ணும் கண்ணும் மோதிக்கொள்ள
ஆசை கொள்ளுதே//

தொடர்ந்து கண்ணும் கண்ணும் மோதினால் அலுப்படிக்கும் என்றூம் சொல்லுறாங்கள். பார்த்து மச்சான்.

நிரூபன் said...

நெஞ்சுக்குள்ளே நிறைய காதல்
பொதிந்து கிடக்குதே
எழுதக்கூட முடியவில்லை - என்
காதல் குழந்தையே//

ஆகா....காதல் கூடினால் வார்த்தைகளும் வெளியே வராதோ. நடக்கட்டும், நடக்கட்டும்.

நிரூபன் said...

என் காதல் குழந்தையே//

மனசுக்குள் வார்த்தைகளை வைத்துக் கொண்டு, வெளியே சொல்ல முடியாது, தத்தளிக்கும் காதல் வசப்பட்ட நாயகனின் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தி நிற்கிறது.

மாய உலகம் said...

காதலெனும் குழந்தை

மாய உலகம் said...

காதல் குழந்தையின் முதல் சுவாசம் நுரையீரல் தாண்டமுன் நுரைகக்கி செத்தது காதல்

அப்பாதுரை said...

சினிமா பாட்டு போல இருக்குங்க :)

இராஜராஜேஸ்வரி said...

வார்த்தை இன்றி காதல் மட்டும்
முந்தி வருகுதே
நெஞ்சுக்குள்ளே நிறைய காதல்
பொதிந்து கிடக்குதே//

அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

குட் ஒன்

Lakshman said...

Fantastic anna, what a romantic poem?

நிலாமதி said...

இத்தகைய் வாழ்த்துப் பெறும் உங்கள் காதல் குழந்தை கொடுத்து வைத்தவள்.கவிதை அழகாய் வருகிறது . பாராட்டுக்கள.

FARHAN said...

நெஞ்சுக்குள்ளே நிறைய காதல்
பொதிந்து கிடக்குதே
எழுதக்கூட முடியவில்லை - என்
காதல் குழந்தையே

பைனல் டச் சும்மா அதிருதில்ல

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கவிதை அருமை யாதவன்.

Unknown said...

அற்புதம் அன்பரே

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
நான்கு ஐந்து முறை மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
வார்த்தைகள் மிக இயல்பாய் திரு நெல்வேலி அல்வா போல்
வழுக்கிக்கொண்டு போகின்றன
கவி அழகன் என்கிற பெயர் தங்களுக்கு காரணப் பெயர்தான்
தொடர வாழ்த்துக்கள்

சுதா SJ said...

இந்த காதல் குழந்தையை எனக்கு ரெம்ப புடித்து இருக்கிறது.
காதல் கவிதைகளை கொண்டாடும் உங்கள் எழுத்து அசத்தல்,
தபு சங்கர் கவிதையில் இருக்கும் ஈர்ப்பு உங்கள் கவிதைகளிலும் கொட்டிக்கிடக்கு .

Anonymous said...

அழகு...அருமை... இந்த கவிதை...
வாழ்த்துக்கள் கவி அழகன் ...

ஆன்மீக உலகம் said...

நெஞ்சுக்குள்ளே நிறைய காதல்

sarujan said...

(வருடம் முழுக்க நாட்கள் இல்லை
உன்னை போலவே )அருமை,அருமை

ஆகுலன் said...

நெஞ்சுக்குள்ளே நிறைய காதல்
பொதிந்து கிடக்குதே
எழுதக்கூட முடியவில்லை - என்
காதல் குழந்தையே..

கடைசி நான்கு வரிகளும் எனக்கு பிடித்திருக்கிறது...
தொடருங்கள் நானும் உங்களை தொடர்கிறேன்...
கூகிளுக்கு ஏன் இந்த வேலை????

தமிழ்த்தோட்டம் said...

அருமை பராட்டுக்கள் நண்பரே

Unknown said...

தம்பீ!
முதல்ல ஒரு சந‍்தேகம்.
கலியாணம் கட்டியாச்சா
ஏதோ குழந்த அழும் சத்தம் கேட்டிச்சி
அதனாலே கேட்டேன்
மற்றபடி கவிதை அருமையோ அருமை
சும்மா சொல்ல கூடாது கவிதையிலே
இளமை ஊஞ்சலாடுது
புலவர் சா இராமாநுசம்

vidivelli said...

கவிக்குழந்தையே காதல் குழந்தை ரொம்ப அழகாய் இருக்கு..
வாழ்த்துக்கள்.....

Anonymous said...

கவியழகன் பெற்றெடுத்த காதல் குழந்தையை வாழ்த்திடவே நானும் வந்தேன் !! வாழ்த்துக்கள் தம்பி.

மாய உலகம் said...

காதல் குழந்தை காதல் முதியவர் வரை வளரட்டும்

குணசேகரன்... said...

ஹாய்..லவ் பண்றீங்களா...நல்லா எழுதறீங்க..

vetha.Elangathilakam said...

விதிகளை மீறும் காதலில்
உலகினை மறந்த உண்மைகள்
httP://www.kovaikkavi.wordpress.com