7/10/2011

ஏங்கிநிற்பாள்


மாலைக்கருக்கள் மயங்கும்வேளை
மனசு முழுக்க ஏக்கம் தாங்கி
வாசல் கதவில் காத்துநிற்பாள்
கணவன் வருகைக்காய் ஏங்கிநிற்பாள்

ஓடும் மணிக்கூடு நேரம் சொல்ல
ஒவொன்றொவொன்றாய் அடுக்குப்பண்ணி
சூடாய் தேநீர் போட்டுவைப்பாள்
சூடு ஆறாமல் பாதுகாப்பாள்

வேலைப்பழுவில் சோர்ந்து விழுந்து
பாரப்பையை தோளில் சுமந்து
வீட்டு வாசலில் காலடி வைக்க
ஓடிவந்து கட்டி அணைப்பாள்

வேலைப்பையை வாங்கி வைப்பாள்
வேண்டுமென்றே சிணுங்கி முழிப்பாள்
சட்டைபொத்தானை கழட்டிவிட்டு
நெஞ்சில் தானாக சாய்ந்துகொள்வாள்

ஒருமுறை தூக்கி சுற்றிவிட்டு
உச்சி முகர்ந்து முத்தம் வைத்தால்
பூனைக்குட்டிபோல் பசுந்தாய் நிற்பாள்
புண்ணியம் செய்ததாய் பூரிப்படைவாள்

42 comments:

மாலதி said...

//ஒருமுறை தூக்கி சுற்றிவிட்டு
உச்சி முகர்ந்து முத்தம் வைத்தால்
பூனைக்குட்டிபோல் பசுந்தாய் நிற்பாள்
புண்ணியம் செய்ததாய் பூரிப்படைவாள்//
நல்ல கவியமைப்பு
தேர்ந்த நடையில் உங்களின் படைப்பு பரட்ட்டுகளுக்குரியான .

இராஜராஜேஸ்வரி said...

அழகான கவிதைக்கு பாராட்டுகள்.

Mohamed Faaique said...

அனுபவமே இல்லாம இவ்ளோ சூப்பரா எழுத முடியுமா?????? (போட்டுகு குடுப்போர் சங்கம்)

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
வார்த்தைகள் மிக இயல்பாக வந்து விழுந்து
ஆச்சரியப்படுத்துகின்றன
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

சுதா SJ said...

அழகான வரிகள் சேர்த்து அழகாக செதுக்கிய கவி பாஸ்
அனுபவம் இல்லாமல் அனுபவித்தவர் போல் அசத்தல் முயற்சி பாஸ்
( அனுபமா...??)
வாழ்த்துக்கள் பாஸ்

ரிஷபன் said...

ஏக்கமும் ஆர்வமும் கவிதையில் பின்னிப் பிணைந்து சுவாரசியமான கவிதை.

sarujan said...

அனுபவித்தவர் போல் super வாழ்த்துக்கள்

Anonymous said...

ஆமா சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் செய்து போட்டிங்களா ???

Anonymous said...

அன்பான கணவன் மனைவிக்கிடையிலான உறவை அழகாக கவி வடித்துள்ளீர்கள்..ஆனால் கல்யாணம் கட்டின புதுசிலயும் சிலர் இப்பிடித்தான் இருப்பார்கள் அப்புறம் போக போக தான் தெரியும் ..)))

குணசேகரன்... said...

//ஒருமுறை தூக்கி சுற்றிவிட்டு
உச்சி முகர்ந்து முத்தம் வைத்தால்
பூனைக்குட்டிபோல்// super words

கவனிக்கவும்..
"ஒவொன்றொவொன்றாய்"

vidivelli said...

சகோ/அழகான கவிதை....
கவியழகா அருமை..
வாழ்த்துக்கள்,,,

Anonymous said...

வாழ்வின் அகரத்தில் அருமையான வரிகள் ஆனால் அந்திமம் ஆக வேண்டாம் ஆறு மாதத்திலோ அல்லது வருஷத்திலோ
வார்த்தைகளை தலைகீழான கருத்திற்கு மாற்ற வேண்டும் , எப்படி இருந்தனான் இப்படி ஆயிற்றேன் என்று இருப்பினும் இது நல்ல கவிதை மிகவும் தரமாகவேயுள்ளது உமது வழமையான கவிதைகளைப்போல் ...நன்றி ......ஈழத்தான் .

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஒருமுறை தூக்கி சுற்றிவிட்டு
உச்சி முகர்ந்து முத்தம் வைத்தால்
பூனைக்குட்டிபோல் பசுந்தாய் நிற்பாள்
புண்ணியம் செய்ததாய் பூரிப்படைவாள்>>>>

ஆகா...அருமையான வரிகள்.

Unknown said...

nice! :-)

Unknown said...

ஹிஹிஹி வைப்பாள்??செய்வாள்??ஓகே ஓகே

நிரூபன் said...

வணக்கம் அண்ணாச்சி,

இருங்க படிச்சிட்டு வாரேன்.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...

இந்த காலத்திலும் இப்படி ஒரு மனைவி
இருக்காங்களா ?

தொலைக்காட்சிக்குள் தொலைந்துவிட்டார்கள் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

உடனே அனுபவமா ? னு யாரும் கேட்டுறாதீக ..
உண்மை.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அட நான் ஒன்றை மறந்துவிட்டேன்..

கவிதைக்கு பொய் அழகல்லவா ?

அப்படியானால் வாழ்த்துக்கள்...

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

நிரூபன் said...

மாலைக்கருக்கள் மயங்கும்வேளை
மனசு முழுக்க ஏக்கம் தாங்கி
வாசல் கதவில் காத்துநிற்பாள்
கணவன் வருகைக்காய் ஏங்கிநிற்பாள்//

ஆஹா...நிஜமாவா பாஸ். இப்படி ஒரு பெண்ணை இக் காலத்தில் மனைவியாக அடைவோர் கொடுத்து வைச்சிருக்க வேண்டும்.

நிரூபன் said...

ஓடும் மணிக்கூடு நேரம் சொல்ல
ஒவொன்றொவொன்றாய் அடுக்குப்பண்ணி
சூடாய் தேநீர் போட்டுவைப்பாள்
சூடு ஆறாமல் பாதுகாப்பாள்//

நிஜமாவா பாஸ், இவ் இடத்தில் எப்படி விமர்சிப்பது என்றே தெரியவில்லை.. இப்படி ஓர் துணையினை யார் அடையப் பெறுகிறார்களோ, அவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

சட்டைபொத்தானை கழட்டிவிட்டு
நெஞ்சில் தானாக சாய்ந்துகொள்வாள்//

கவிதையினூடாக காதல் ரசத்தினையும் சேர்ந்து பருக வைத்திருக்கிறீங்க.

காட்டான் said...

மாப்பிள நீ இன்னும் கன்னாலம் கட்டல அதனால கற்பனையில மிதக்குற அனுபவஸ்தன் நான் சொல்லுறன் கேட்டுக்கோ இப்பத்தைய நிலமையில் வீட்ட நீ வரும்போது மனைவி இப்படி சொன்னாலே பெரிய விசஜம்''சாப்பாடு மேசையில இருக்கு கொட்டிக்கொண்டு போயா''

நிரூபன் said...

ஒருமுறை தூக்கி சுற்றிவிட்டு
உச்சி முகர்ந்து முத்தம் வைத்தால்
பூனைக்குட்டிபோல் பசுந்தாய் நிற்பாள்
புண்ணியம் செய்ததாய் பூரிப்படைவாள்//

ஏங்கி நிற்பாள் எனும் கவிதையூடே கணவனை- காதலனைத் தன் இதயத்தில் எந் நாளும் தாங்கி நின்று, அவன் தேவைகளைத் தானாய் உணர்ந்தறிந்து பணிவிடை செய்து, இல் வாழ்வு சிறகக் உதவும் ஓர் பெண்ணினைத் தங்களின் கவிதைக் கமராக் கண் மூலம் படம் பிடித்து எழுத்துருவாக்கி வலையேற்றியிருக்கிறீங்க.

மண்வாசனை இக் கவிதையில் மறைமுகமாக இருக்கிறது. கிராமத்து மகளிரிடத்தில் தான் கணவனுக்குப் பணிவிடை செய்யும் பண்பு அதிகமாக காணப்படும். ஆனால் இங்கே காட்சித் திரிபு நகராமா அமைந்து கவிதைக்கும், புதுமையான வாழ்விற்கும் அணிசேர்த்திருக்கிறது.

ஹேமா said...

இப்பத்தான் கவிக்கிழவர் அழகான காதல் கவிதைகள் தாறார்.காதலில் நனைகிறாரோ.இப்பிடி ஒரு மனைவி இந்தக் காலத்திலயும் கிடைச்சதுக்கு வாழ்த்து !

Unknown said...

அற்புதமான கவிதை அன்பரே

jgmlanka said...

என்ன யாது.. கற்பனையா?... ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்... இருந்தாலும் இப்படியொரு மனைவி வாய்க்க வாழ்த்துக்கள்... அழகான கவிதை அதற்கும் வாழ்த்துக்கள்

Menaga said...

Its very nice. really super

பிரணவன் said...

சிறந்த எதிர்பார்ப்பு. . .நிகழ்வுகளாக வாழ்த்துக்கள். . .

சி.பி.செந்தில்குமார் said...

aahaa ஆஹா

சக்தி கல்வி மையம் said...

அசத்தலான வரிகள், அருமையான கவிதை..

Anonymous said...

My dear friends,

be positive. Nothing is impossible. It is in our hand to make the things happen. We can't blame the other person for the mistakes it's our fault as well.

Just make your self as a person who is waiting for your spouse and make tea for your spouse, help to remove the cloths of your spouse and receive kisses from your spouse.

It's in your hand ..........to enjoy the life. Really I am enjoying my life nearly for two years and with the hope to continue it. CHEERS.........................................

Anonymous said...

Nice poem with real mile stones in enjoying the life.

kowsy said...

உங்கள் கற்பனை அலாதிதான். இப்போதெல்லாம் இப்படி அதிகமாக கற்பனையில்தான் எதிர்பார்க்க முடியும் என்று நினைக்கின்றேன். இவற்றை மாறி நீங்கள் செய்ய உங்கள் கனவுக்கன்னி மனமகிழ்ந்து கவிதை வடிப்பதுபோல் கற்பனை பண்ணிப் பார்த்தேன்

Vetha.Elangathilakam. said...

ஓடும் மணிக்கூடு நேரம் சொல்ல
ஒவொன்றொவொன்றாய் அடுக்குப்பண்ணி
சூடாய் தேநீர் போட்டுவைப்பாள்
சூடு ஆறாமல் பாதுகாப்பாள்....He is lucky.. good luck...
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

தனிமரம் said...

அழகான கருத்துக்கூடிய கவிதை இக்காலத்தில் இப்படி ஒரு மனைவி கிடைத்தவன் பாக்கியசாலி . 

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Reverie said...

அற்புதமான கவிதை ....தொடர்ந்து கலக்குங்கள்...

Reverie
http://reverienreality.blogspot.com/
இனி தமிழ் மெல்ல வாழும்

arasan said...

இனிமை சேர்க்கும் நிகழ்வை இயல்பாய் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அழகான காதல் கவிதை.அருமை

அப்பாதுரை said...

போட்டுக்கொடுப்போர் சங்கம்? :)
பூனைக்குட்டி போல் பசுந்தாய் நிற்பாள் - உண்மையல்ல என்று தோன்றுகிறதே?
கவிதை படிக்கச் சுவையாக உள்ளது.

மாய உலகம் said...

வாசல் கதவில் காத்துநிற்பாள்....அருமை நண்பரே..
rajeshnedveera
http://maayaulagam-4u.blogspot.com

Unknown said...

ரஜினி ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு மோதி திரும்பி உள்ளது. சென்னை வாழ்பவர்களுக்கு அவரது வருகையை காண்பவர் இருந்தது. ஒரு வைத்திருக்கவும்
http://bit.ly/n9GwsR