பிணங்களும் பிணவாடைகளும் கழுகளின் காரியாலயங்களும் வட்டில்லா தென்னைகளும் பற்றைமண்டிய வீடுகளும் கோபுரம் இடிந்தகோயில்களும் பள்ளம் விழுந்த வீதிகளும் இது எந்தன் கிராமமா இல்லை செவ்வாய்க்கிரகமா ஊரைச்சுற்றி சோலைகள் கைகூப்பவைக்கும் மணிஓசைகள் விளைச்சல் தரும் வயல்கள் பாலரிவிபோல் கால்நடைகள் ஆங்காங்கே அழகிய கூரைவீடுகள் குளைதள்ளும் வாழைகள் பனைதரும் நொங்குகள் பாட்டி சொல்லும் கதைகள் இதுதான் என் கிராமம் எப்போ செல்வோம் எங்கள் இறுதிமூச்சைவிட