நினைவு தேடி ஓடுகின்ற நெஞ்சம்
நிழலைக்கூட காதலிக்கும் உள்ளம்
இடைவெளிகள் கொடுமை செய்யும் காலம்
எப்பொழுது இரண்டும் ஒன்று சேரும்
நிலவை பிரிந்து வாழ்வதிங்கு கொடுமை
மன்னன் காதலுக்கு வந்ததிங்கு வறுமை
கடலும் வானும் தூரமான போதும்
மலை நீரின் மூலம் தொடுவதிங்கு இனிமை
மேகம் கலைந்த இருண்ட வானில் கனவு
காதல் பூக்கள் கொண்டு மாலை சூடும் வயது
வேள்வி தொடங்கி காலம் நூறு கடந்தும்
காத்திருக்கும் வாழ்வு ஒரு சாபம்
காதல் மட்டும் வாழுகின்ற உலகில்
தேடல் கொண்டு காதலித்த பொழுதில்
காத்திருப்பின் கொடுமை செய்யும் வேலை
கடவுள் காதலுக்கு போட்டுவிட்ட மாலை
Tweet | |||||
35 comments:
காத்திருப்பின் கொடுமை செய்யும் வேலை
கடவுள் காதலுக்கு போட்டுவிட்ட
அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
//
மேகம் கலைந்த இருண்ட வானில் கனவு
காதல் பூக்கள் கொண்டு மாலை சூடும் வயது
வேள்வி தொடங்கி காலம் நூறு கடந்தும்
காத்திருக்கும் வாழ்வு ஒரு சாபம்
//
அருமையான வரிகள்
அருமையான கவிதை
அருமையான வரிகளில், அசத்தலான கவிதை.. வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள்.
கருப்பு நிற பின்னணியில், வெள்ளை நிற எழுத்துக்கள் ஒரு அற்புத காதல் கவிதை..!!
எனக்குப் பிடித்த வரிகள்: நிலவை பிரிந்து வாழ்வதிங்கு கொடுமை
மன்னன் காதலுக்கு வந்ததிங்கு வறுமை
கடலும் வானும் தூரமான போதும்
மலை நீரின் மூலம் தொடுவதிங்கு இனிமை
எனது வலையில் இன்று:
"தமிழ்நாடு உருவான வரலாறு"
இனிமை இனிமை.. உங்கள் கவிதை இனிமை.. காதலும் இனிமை..!!
ஞாயிற்று கிழமை வந்து விட்டால்
கவி அழகனின் கவிதையும் வந்ந்து விடுகிறது.
ஞாயிற்று கிழமையை தேர்ந்தெடுத்து கவிதை வெளியிடுவதின் காரணம் என்ன? என்ன? என்ன?
ரசனையான வரிகள்!
///கடலும் வானும் தூரமான போதும்
மலை நீரின் மூலம் தொடுவதிங்கு இனிமை ///
சூப்பர்..
ஒவ்வொரு பந்தியிலும் அடுக்கடுக்காக வருவது உங்க கவிதையின் சிறப்பு
யாதார்த்தம்....
கவி வடிவம் அழகு..
காதல் ஏக்கம் மனதைத்தொட்டது. வாழ்த்துக்கள்.
அருமையான வரிகளில், அசத்தலான கவிதை.. வாழ்த்துக்கள்+பாராட்டுக்கள்.
அசத்தல் கவிதை
அருமையான நடையில்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3
அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html
//மேகம் கலைந்த இருண்ட வானில் கனவு
காதல் பூக்கள் கொண்டு மாலை சூடும் வயது
வேள்வி தொடங்கி காலம் நூறு கடந்தும்
காத்திருக்கும் வாழ்வு ஒரு சாபம்
//
arumai..vaalththukkal
//மேகம் கலைந்த இருண்ட வானில் கனவு
காதல் பூக்கள் கொண்டு மாலை சூடும் வயது
வேள்வி தொடங்கி காலம் நூறு கடந்தும்
காத்திருக்கும் வாழ்வு ஒரு சாபம்
//
arumai..vaalththukkal
அருமையான உணர்வுள்ள கவிதை நண்பரே
த.ம 5
கடவுளை நினைத் தால் எதுவும் நடக்கும் எல்லாம் கை கூடும் காலம் வரும் விரைவில்.
வணக்கம் கவியாழகா..
காதலையும் காத்திருப்பையும் அழகாய் சொல்லும் கவிதை பகிர்வு அழகு வாழ்த்துக்கள்..
காதலில் காத்திருப்பதுதானே சுகம். . .
பிரிவின் வலியை வேதனையோடு நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறீர்கள் கவிக்கிழவரே !
வணக்கம் பாஸ்,
நலமா?
காதல் கொண்ட நெஞ்சம் காத்திருக்கையில் படும் வேதனையினை யதார்த்தமாய் இக் கவிதை சொல்லி நிற்கிறது.
குட் ஒன்
அருமையான கவிதை...
காத்திருப்பின் வலியை சிறப்பாக காட்டியிருக்கிறீங்க வாழ்த்துக்கள் சகோ!
யாதவன்... கவிதை வரிகள் மிகவும் அழகு... இரசனையாக உள்ளது..ஆனால் உன் வளர்ச்சியில் கொண்ட அக்கறையால் ஒரு சிறிய ஆலோசனை... உன் வரிகள் அழகாக அழகாக நீ கவிதையின் சந்தத்தை மறந்து விடுகிறாய்.. சந்தம் இல்லாவிட்டாலும் கவிதை இனிக்கும்.. சந்தமும் அமைந்தால் கவிதை தித்திக்கும்... உன் கவிதை வரிகளின் அழகுக்கு.. சந்தமும் அமைந்த்தால் அவை கம்பனுடன் கூட போட்டியிடும்... கவனிப்பாயா...
-வாழ்த்துக்களுடன் அக்கா-
காத்திருப்பே கடவுள் போட்ட மாலையாக கவிதையில் சொல்லி அசத்தியுள்ளீர்கள் நண்பா ... அசத்தல்
கவிதை அருமை
''காத்திருப்பின் கொடுமை செய்யும் வேலை
கடவுள் காதலுக்கு போட்டுவிட்ட மாலை
கவிதை நன்றாக வந்திருக்கிறது. வாழ்த்துகள் கவி அழகன்.
வேதா. இலங்காதிலகம்.
http//www.´kovaikkavi.wordpress.com
கவிஞரே அருமையான கவிதை (நல்லா அனுபவப்பட்டு விட்டாரோ!....)
என்ன சொல்லி வாழ்த்த கவிதை சொல்லி வேலை இல்லை .
1000000000000000 பரிசுப்பொருள் பிடிச்சுக்கோங்க .நாங்க மன்னர் காலத்து
ஆக்கள் மனசார வாழ்த்துறம் .மென்மேலும் சிறப்பான கவிதை மழை
கொட்டட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
@பூங்கோதை
அக்காச்சி இன்னும் கூட விழங்கலியா அண்ணையின் கவஜதைப் போக்கை வைத்து பார்க்கையில் புரிந்திருக்குமே... ஹ...ஹ.. (லொல்ஸ்)
திரும்பவும் வாழ்த்துகக்ள் எட்டு ஓட்டுக்கள் போட்டாச்சு சகோ ....
//கடலும் வானும் தூரமான போதும்
மலை நீரின் மூலம் தொடுவதிங்கு இனிமை
மேகம் கலைந்த இருண்ட வானில் கனவு
காதல் பூக்கள் கொண்டு மாலை சூடும் வயது
வேள்வி தொடங்கி காலம் நூறு கடந்தும்
காத்திருக்கும் வாழ்வு ஒரு சாபம்//
அருமையான வரிகளுடன் அழகு கவிதை நண்பரே
கடலும் வானும் தூரமான போதும்
மலை நீரின் மூலம் தொடுவதிங்கு இனிமை
அழகு!
Post a Comment