10/16/2011

சுறுசுறுப்பை சொல்லிவிடும்


சாளரத்தின் சேலையை
சற்று நான் திறக்கையில்
வெட்கம் கொண்டு காலைப்பொழுது
கட்சிதமாய் விடிகிறது

போர்வை விலக்கி குயில்கள் கூவ
பனி நீரை எடுத்து இலைகள் மூள்க
சோம்பல் முறித்த சூரியானோ
ஆம்பல் கண்ணை திறக்கின்றான்

சாலையில் வாகனம் ஊர்வலம் செல்ல
சடுதியாய் மஞ்சள் சிவப்பு சமிஞ்சை விழ
மனசு ஒருமுறை நிற்கிறது
மறுபடியும் ஏதோ நினைக்கிறது

வேகநடை இரண்டு கால்கள்
பறந்து செல்லும் நாலு சில்கள்
சுறுசுறுப்பை சொல்லிவிடும் - நான்
முழுஇரவு பணிமுடித்து திரும்பும்போது

24 comments:

SURYAJEEVA said...

நல்லா தாம்பா இருக்கு நைட் shift வேலை செய்றவங்க கதை

இராஜராஜேஸ்வரி said...

வேகநடை இரண்டு கால்கள்
பறந்து செல்லும் நாலு சில்கள்
சுறுசுறுப்பை சொல்லிவிடும் - நான்
முழுஇரவு பணிமுடித்து திரும்பும்போது/

விடிந்த்து!

குறையொன்றுமில்லை. said...

நைட் டியூட்டி முடிந்து வரும்போதுகூட சுற்று சூழலை ரசிக்கமுடிஞ்சிருக்கே.

kowsy said...

பணிமுடித்துத் திரும்பும் போதும் உடல்களைப்பு நிறைந்த போதும் உள்ளம் எங்கும் கவிதை ஊற்று பெருகிக் கொண்டே இருக்கிறது. தேவை இது தேவை மனிதன் உயர்வு கொள்ள தேவை இது தேவை. சூரியன் அனல் தெறிக்கும் வேளையிலும் தன் ஆம்பல் கண்ணைத் திறக்கின்றான். செங்கண்ணைத் திறந்தான் என்னும்போது இன்னும் கொஞ்சம் சிறப்பாய் இருக்கும் என்று நம்புகின்றேன். கவிதைக்குள்ளும் விவாதம் கலந்து நிற்றல் சிறப்பு இல்லையா! யாதவன்.

அம்பலத்தார் said...

இயற்கையை, சுற்றிலும் உள்ளவர்களை - உள்ளவற்றை - நடப்பவற்றை கூர்ந்து நோக்குபவன் நல்ல படைப்பாளி என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக நீங்களும் உங்கள் படைப்புகளும்.

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

sarujan said...

((பனி நீரை எடுத்து இலைகள் மூள்க
சோம்பல் முறித்த சூரியானோ))அருமை

Yaathoramani.blogspot.com said...

பணி முடித்த அலுப்பிலும் அழகை ரசிக்கும் குணமும்
அதனை அழகிய பதிவாகத் தரும் அழகும்
எம் மனத்தைக் கொள்ளை கொள்கிறது
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள் த.ம 5

கோகுல் said...

நானும் பலமுறை இரவுப்பணி செய்து திரும்பியிருக்கிறேன் எப்படா போய் கட்டிலில் விழுவோம் என தான் எண்ணுவேன்.
ஆனால் உங்கள் அனுபவம் அருமை!ரசனை!

ஹேமா said...

இதுதான் வெளிநாடு.கவிதைகளில் தெறிக்கிறது !

மகேந்திரன் said...

பணிமுடித்து செல்கையிலும்
காண்பதெல்லாம் கவிதானோ?
கவிஞனய்யா ...
அழகிய கவி நண்பரே.

சி.பி.செந்தில்குமார் said...

வேலைக்கு போறாராம் ஹா ஹா

vetha (kovaikkavi) said...

''...சுறுசுறுப்பை சொல்லிவிடும் - நான்
முழுஇரவு பணிமுடித்து திரும்பும்போது
..''
ஓயாத உழைப்பைக் கூறி நிற்கும் வரிகள் மனசு எப்போதும் கவிதை தானே...வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.cpm

தனிமரம் said...

இரவு வேலை முடித்து அதிகாலையில் வீடுவரும் ஏகாந்தப் பொழுதினை அழகாய் கவிதை ஆக்கி கொண்டு வந்திருக்கிறீங்க வாழ்த்துக்கள் நண்பா!

நிரூபன் said...

காலை முதல் மாலை வரை பணி முடித்து திரும்புகையில் சுறு சுறுப்பைச் சொல்லுகின்ற சாலையின் அழகுதனைக் கவிதை இயறகை வர்ணனை எனும் ஆடை போர்த்திச் சொல்லி நிற்கிறது.

Unknown said...

//போர்வை விலக்கி குயில்கள் கூவ
பனி நீரை எடுத்து இலைகள் மூள்க
சோம்பல் முறித்த சூரியானோ
ஆம்பல் கண்ணை திறக்கின்றான்//

கதிரவன் எழுவது கவின்மிகு
காட்சி-நல்
கவிதையாய் விழுவது வியந்திடும் மாட்சி

புலவர் சா இராமாநுசம்

vimalanperali said...

ஸார்.வணக்கம்.கவிதை நல்லாயிருக்குது.வாழ்த்துக்கள்.

ஸ்ரிகரின் வலைப்பதிவு said...

ஒரு நாள் வாழ்கையை 16 வரிகளுக்குள் அடக்கிவிடாய் நண்பா, அருமை..

Anonymous said...

முழு இரவு பணி முடித்து கவிதை நல்லாயிருக்கு...வாழ்த்துக்கள்...

Unknown said...

அற்புதமான கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

சென்னை பித்தன் said...

இரவு முழுவதும் பணி புரிந்தாலும், கவிஞன் விழித்திருக்கிறான்.

அம்பாளடியாள் said...

அழகிய கவிதை வாழ்த்துக்கள் சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு ......

Anonymous said...

சாலையோரம் கவியாரம் பார்த்தேன் , அருமை அழகா !

காந்தி பனங்கூர் said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா