தலைவா உனக்கு நன்றி சொல்ல
தவமிருப்பேன் தனியாக
விரைவாய் உன்னை காண்பதற்கு
தவமிருப்பேன் தனியாக
விரைவாய் உன்னை காண்பதற்கு
விழித்திருப்பேன் பகலாக
சுகமாய் உனக்கு சுகம் தரவே
இனித்திருபேன் கனியாக
நிறைவாய் உன்னை மகிழ்விக்க
மறந்த்திடுவேன் நான் உயிராக
கனவாய் நான் காத்திருக்கிறேன்
கண்களில் ஏக்கம் சேர்த்திருக்கிறேன்
விரல்களில் ஸ்பரிசம் தேடிநின்று
சிந்தை முழுக்க சிலிர்த்திருக்கிறேன்
படைகளின் வீரம் கொண்டவனே
பகைகளை அடக்கி ஆள்பவனே
மெதுமகள் மேனி தொடுவதற்கு
உன் கருணையின் கண்களை திறந்துவிடு
Tweet | |||||
28 comments:
super
அருமை.
வருவாளே தலைவா
வருந்தாதே தலைவா
புலவர் சா இராமாநுசம்
சூப்பர் கவிதை நண்பரே
ம்ம்ம்... ஒரு பெண்ணின் பார்வையில் எழுதி இருக்கீங்க... நல்லாயிருக்கு..
ஆஹா!
பெண்ணின் உணர்வில் காத்திருப்பின் கனங்களை அற்புதமாக கவிதையில் செதுக்கியிருக்கும்!
கவிக்கிழவனுக்கு
வருவானா மணாலன் என்று ஒருத்தி காத்திருக்கிறாள்!
சினேஹா படமும் அதுக்குப் பொருத்தமான கவிதையும் வாழ்த்துக்கள் சகோ.
வணக்கம் கவியழகா
அருமையான இக்கவி எனக்கு இரண்டு அர்த்தங்கள் தொக்கி நிற்பதுபோல் தெரிகின்றது...!!!!!???
வாழ்த்துக்கள்..
''..படைகளின் வீரம் கொண்டவனே
பகைகளை அடக்கி ஆள்பவனே
மெதுமகள் மேனி தொடுவதற்கு
உன் கருணையின் கண்களை திறந்துவிடு...'''
ஆகா! என்ன ஒரு ஏக்கம் ! காதலோடு கூடப் பிறந்தது அல்லவா! வாழ்க காதல் ! வாழ்த்துகள் கவிஅழகன்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
அழகிய பிளாக் அருமையான கவிதைகளுடன் .வாழ்த்துகள்
கவிதை அசத்தல்.பாராட்டுக்கள்
இன்றுதான் படித்தேன்... 'மூச்சு இழுக்க மூக்கிருந்தும் காற்று வாங்க உரிமை இழந்த இனத்தில் பிறந்தவன்'. நம் மக்கள் அனைவருக்கும் நல்ல விடிவு கிடைக்கும் நாள் விரைவில் வரட்டும்.
காதல் கவிதைகள் அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
கவிதையில் மயங்கினேன்.
வணக்கம் பாஸ்,
நலமா?
தலைவனின் தொடுகைக்காய் தவிப்புடன் காத்திருக்கும் பெண்ணின் உணர்வுகளை அழகுறச் சொல்லி நிற்கிறது இக் கவிதை.
அழகிய கவிதை நண்பா
அட்வான்ஸ் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
அருமை பாராட்டுக்கள்
அழகிய ஆக்கம் பாராட்டுகள் நன்றி
அசத்தல்.,
பாராட்டுகள்.,
பெண்ணின் நிலையில் இருந்து எழுதியிருக்கீர்கள் போல ))
//சுகமாய் உனக்கு சுகம் தரவே
இனித்திருபேன் கனியாக
நிறைவாய் உன்னை மகிழ்விக்க
மறந்த்திடுவேன் நான் உயிராக//
arumai..vaalththukkal
யாரையும் நாடி நின்றால் நடப்பது ஒன்றுமில்லை. நேரடியாக மெதுமகளை நாடிவிட்டால், காரியம் இலகுவாய்விடும்.
keep it up
படமும் அதற்கான அழகிய விளக்கமாக அமைந்த பதிவும்
மிக மிக அருமை.தொடர வாழ்த்துக்கள்
இனிய தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...
super
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
அருமையான கவிதைகளுடன் .வாழ்த்துகள்
http://www.kovaikkavi.wordpress.com
கவிதை கலக்கல் நண்பா!
Post a Comment