2/19/2012

நீயே என் காதலின் அழகிய தேவதை


காற்று வெளியில் பூக்கள் மிதக்கும்
காதல் சொல்ல கண்கள் துடிக்கும்
மெல்லிசை மெல்ல காதினில் கேட்க்கும்
மேகமாய் கூந்தல் முகத்தினில் பறக்கும்

வண்டுகள் அங்கே கூட்டமாய் மொய்க்கும்
வண்ணத்து பூச்சி வட்டமிட்டு துடிக்கும்
இதழ்களை விரித்த அழகிய மலரோ
இளமையை தெளித்தி நிமிர்ந்து நிற்கும்

காற்றுக்கு கொஞ்சும் மலரின் வாசனை
கண்களை மயக்கும் அழகின் போதனை
இதழ்களில் படர்ந்த மென்மையின் சோலை - என்னை
கெஞ்சிட செய்யும் உதடுகளின் வேலை

இன்று உணர்ந்தேன் மனதினில் தோல்வியை
ஒரு நொடி உந்தன் பார்வையின் வேதனை
நெஞ்சினில் கை வைத்து அடிச்சு சொல்கிறேன்
நீயே என் காதலின் அழகிய தேவதை

16 comments:

இராஜராஜேஸ்வரி said...

இன்று உணர்ந்தேன் மனதினில் தோல்வியை
ஒரு நொடி உந்தன் பார்வையின் வேதனை
நெஞ்சினில் கை வைத்து அடிச்சு சொல்கிறேன்
நீயே என் காதலின் அழகிய தேவதை

அழகான கவிதை.. பாராட்டுக்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ! வாழ்த்துக்கள் !

vimalanperali said...

நல்ல கவிதை வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

வணக்கம் கவிக் கிழவரே,
அழகிய தேவதையின் அன்பினில் தொலைந்த கவிஞரின் உணர்வுகளை இங்கே கவிதையாக குடுத்திருக்கிறீங்க. அருமை.

திரு.சி.நந்தகோபன்(ஆசிரியர்) said...

கவியழகா! இதயத்தை தொலைத்த காதலின் வேதனை
தரமான கவிதை .

Yaathoramani.blogspot.com said...

இயைபுத்தொடை மிகக் கச்சிதமாக அமைந்த
அருமையான காதல் கவிதை
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்

சுதா SJ said...

உங்க காதல் தேவதையை நாங்களும் கொஞ்சம் ரசித்தோம் தோழா :)

தனிமரம் said...

காதல் தேவதை என்னையும் மயக்குது. வாழ்த்துக்கள்

சசிகலா said...

காற்று வெளியில் பூக்கள் மிதக்கும்
காதல் சொல்ல கண்கள் துடிக்கும்
மெல்லிசை மெல்ல காதினில் கேட்க்கும்
மேகமாய் கூந்தல் முகத்தினில் பறக்கும்
ரசனை மிகும் வரிகள் . அருமை .

மும்தாஜ் said...

அருமை ! வாழ்த்துக்கள் !

அம்பலத்தார் said...

கிழவனின் காதல் தேவதை யாரோ? அவ்வளவு ரசித்து எழுதியிருக்கிறியள்.

Anonymous said...

''....காற்றுக்கு கொஞ்சும் மலரின் வாசனை
கண்களை மயக்கும் அழகின் போதனை ...''
நல்ல வரிகள் .வாழ்த்துகள் கவி அழகன்.
வேதா. இலங்காதிலகம்.

மாலதி said...

இன்று உணர்ந்தேன் மனதினில் தோல்வியை
ஒரு நொடி உந்தன் பார்வையின் வேதனை
நெஞ்சினில் கை வைத்து அடிச்சு சொல்கிறேன்
நீயே என் காதலின் அழகிய தேவதைரசனை மிகும் வரிகள் . //பாராட்டுக்கள்..

sarujan said...

வாழ்த்துக்கள் காதலில் மூழ்கி எழுதிய வரிகள்

அப்பாதுரை said...

துள்ளுகிறது கவிதை. பிரமாதம்.

Unknown said...

அனைத்தும் மனதை தொட்ட வரிகள் தோழரே.

நீரோடை மகேஷ்.
தமிழ்நாடு இந்தியா.