10/10/2011

விடியலை காண துடித்திடும் நினைப்பு


கண்ணை மூடும் கருப்பு வாணம்
வெள்ளை குளமாய் வட்ட நிலவு
சிந்திக்கிடக்கும் சில்லறை விண்மீன்
சிலிர்க்க வைக்கும் சிக்கன காற்று

அடங்கிப்போகும் அவசர உலகம்
ஓய்வு எடுக்கும் இடைவெளி நேரம்
குடும்பம் கூடும் நிலவு முற்றம்
ஊரை கெடுக்கும் குடிகாரன் சத்தம்

குறைகளை சொல்லும் மனைவியின் நேரம்
தேவையை கேட்க்கும் பிள்ளையின் சிணுங்கள்
கணக்கு பார்க்கும் அப்பனின் மூளை
போர்வைக்குள் அடங்கும் இயலாமை யுத்தம்

தலையணை மந்திரம் சொல்லிடும் இரவு
தரணியை ஆள போட்டிடும் கணக்கு
கனவுகள் கண்டு மகிழ்ந்திடும் மனசு
விடியலை காண துடித்திடும் நினைப்பு

வழமைபோல் காலை விடிந்திடும் வேளை
வாடிய முகத்துடன் இன்னொரு நாளை
தேடியே போவான் குடும்பத்துத்தலைவன்
தேவைகள் தீர்த்தால் அவன் அன்று இறைவன்

34 comments:

இராஜராஜேஸ்வரி said...

தேவைகள் தீர்த்தால் அவன் அன்று இறைவன்

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

வாடிய முகத்துடன் இன்னொரு நாளை.. வரிகள் அனுபவ அறிவை காட்டுகிறது நண்பா.... வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

வழமைபோல் காலை விடிந்திடும் வேளை
வாடிய முகத்துடன் இன்னொரு நாளை
தேடியே போவான் குடும்பத்துத்தலைவன்
தேவைகள் தீர்த்தால் அவன் அன்று இறைவன்


ம்ம்ம்ம் நல்லாதான் சொன்னீங்க.

settaikkaran said...

நண்பரே! மரபில் எழுத முனைந்ததற்கே உங்களை முதலில் மனமாறப்பாராட்ட வேண்டும். அருமை, மிக அருமை!

காட்டான் said...

வணக்கம் கவியழகா..
ஒரு குடும்பத்தலைவனின் நிலையினை தாங்கி நிற்கின்றது உங்கள் கவிதை.. 

வழமைபோல் காலை விடிந்திடும் வேளை
வாடிய முகத்துடன் இன்னொரு நாளை
தேடியே போவான் குடும்பத்துத்தலைவன்
தேவைகள் தீர்த்தால் அவன் அன்று இறைவன்

அழகான வரிகள் இரசித்தேன் வாழ்த்துக்கள்..

SURYAJEEVA said...

அருமையான sollaadal, நிதர்சன உண்மை... அனைத்தும் arumai

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இந்த நிலை நம்தேசத்தை விட்டு ஓட வேண்டும்....

ஒரு குடும்ப தலைவனின் மனநிலை அவனது நிலைமை அப்படியே பிரிதிபலிக்கிறது..

ம.தி.சுதா said...

////போர்வைக்குள் அடங்கும் இயலாமை யுத்தம்////

பலரின் மறைமுக நிலை இது தானேங்க..

kobiraj said...

தேடியே போவான் குடும்பத்துத்தலைவன்
தேவைகள் தீர்த்தால் அவன் அன்று இறைவன்
அருமையான வரிகள்

MANO நாஞ்சில் மனோ said...

வாடிய முகத்துடன் இன்னொரு நாளை
தேடியே போவான் குடும்பத்துத்தலைவன்
தேவைகள் தீர்த்தால் அவன் அன்று இறைவன்//

நெஞ்சை தொட்ட வ[லி]ரிகள்....!!!

C.P. செந்தில்குமார் said...

>>தேவைகள் தீர்த்தால் அவன் அன்று இறைவன்

டச்சிங்க் லைன்

Rathnavel Natarajan said...

அருமை

Mohamed Faaique said...

ஒரு குடும்பத்தலைவனின் பார்வையை அழகாக கவிதையாக வடித்திருக்கிறீர்கள்

தனிமரம் said...

குறைகளை சொல்லும் மனைவியின் நேரம்
தேவையை கேட்க்கும் பிள்ளையின் சிணுங்கள்
கணக்கு பார்க்கும் அப்பனின் மூளை
போர்வைக்குள் அடங்கும் இயலாமை யுத்தம்//

ஒரு  குடும்பத்தலைவனின் பாரத்தின் சுமையை அற்புதமாக பதிவு செய்த கவிதை கவி அழகன் .வாழ்த்துக்கள்!
வாரம் ஒரு பதிவு போட்டாலும் வைரமாகபதிக்கின்றீர்கள் சகோ!

மாலதி said...

வழமைபோல் காலை விடிந்திடும் வேளை
வாடிய முகத்துடன் இன்னொரு நாளை
தேடியே போவான் குடும்பத்துத்தலைவன்
தேவைகள் தீர்த்தால் அவன் அன்று இறைவன்//
ஒரு சிறந்த கதைகருவை தெரிவு செய்து நல்ல ஆக்கத்தை பதிவு செய்து உள்ளீர் பாராட்டுகள் நல்ல எழுத்துநடை தேர்ந்த சொல்லாக்கம் பாராட்டுகள் நன்றிகள்

சக்தி கல்வி மையம் said...

ஒரு அருமையான கவிதை..

Yaathoramani.blogspot.com said...

அரிதான அருமையான சிந்தனை
அழகான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 13

நிகழ்வுகள் said...

அசத்தல் வரிகள்..

Unknown said...

// வழமைபோல் காலை விடிந்திடும் வேளை
வாடிய முகத்துடன் இன்னொரு நாளை
தேடியே போவான் குடும்பத்துத்தலைவன்
தேவைகள் தீர்த்தால் அவன் அன்று இறைவன் //

நிறைய அனுபவங்கள்
கவிதையில் கொடிகட்டிப் ப(பி)றக்குது

புலவர் சா இராமாநுசம்

rajamelaiyur said...

//
தலையணை மந்திரம் சொல்லிடும் இரவு
தரணியை ஆள போட்டிடும் கணக்கு
கனவுகள் கண்டு மகிழ்ந்திடும் மனசு
விடியலை காண துடித்திடும் நினைப்பு


//

அருமையான வரிகள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

வழமைபோல் காலை விடிந்திடும் வேளை
வாடிய முகத்துடன் இன்னொரு நாளை
தேடியே போவான் குடும்பத்துத்தலைவன்
தேவைகள் தீர்த்தால் அவன் அன்று இறைவன்///

உண்மையான வரிகள் நண்பா

நிலாமதி said...

அன்றாட வாழ்க்கையை அழகாய் சொல்லியிருகிரீர்கள்.பாராட்டுக்கள்

Anonymous said...

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்...

நிரூபன் said...

இனிய மதிய வணக்கம் பாஸ்,
நேற்று கொஞ்சம் பிசியாகிட்டேன்.
அதான் உடனே வர முடியலை.

நிரூபன் said...

நல்லதோர் கவிதை பாஸ்.

நாளைய விடியலில் நமக்கும் நல் வாழ்வு கிட்டும் எனும் எதிர்பார்ப்போடு நகரும் அன்றாடங் காய்ச்சிகளின் நிலையினை சந்தம் கலந்து உரைத்து நிற்கும் அழகிய கவிதை பாஸ்.

kowsy said...

ஆழ்ந்த அநுபவ ஞானம் அறியாமலே சொல்லிடும் கவிதை. வாழ்ந்து பட்ட அநுபவத்தை வாழத் துடிக்கும் வேளையிலே சொல்லும் கவிதை. சிறப்பு கவிக்கு அழகா!

ரிஷபன் said...

தேடியே போவான் குடும்பத்துத்தலைவன்
தேவைகள் தீர்த்தால் அவன் அன்று இறைவன்

அசத்திட்டீங்க..

அம்பலத்தார் said...

என்ன இப்படித் தத்துவமாக பேசுகிறீகள்

அம்பலத்தார் said...

வாழ்வில் நிறைந்த அனுபவக் கல்வி பெற்றவர் என்பது புரிகிறது.

sarujan said...

அநுபவ கவிதை அருமை

Anonymous said...

//கனவுகள் கண்டு மகிழ்ந்திடும் மனசு
விடியலை காண துடித்திடும் நினைப்பு//
நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

மதுரை சரவணன் said...

//தலையணை மந்திரம் சொல்லிடும் இரவு
தரணியை ஆள போட்டிடும் கணக்கு
கனவுகள் கண்டு மகிழ்ந்திடும் மனசு
விடியலை காண துடித்திடும் நினைப்பு//

arumai..vaalththukkal

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

அருமையான பதிவு

அம்பாளடியாள் said...

அட அட அட என்ன அசத்தலான வரிகள் சொல்ல வந்த விசயத்தை
மிகக் கச்சிதமாகச் சொல்லும்விதம் அருமை!..நமக்குள்ள ஒரு சின்ன
ஒப்பந்தம் .எங்காவது ஒரு கவிதைப் போட்டி வந்தா நீங்க வாற இடத்துக்கு
நான் வரமாட்டன் (ஏனென்டால் தோத்திருவேன் ஹி...ஹி ..ஹி .....)அதமாதிரி நான் போற இடத்துக்கு நீங்களும் வரக்கூடாது .(அப்பயும் நான்தான் தொதிருவன்
இல்ல ஹி ...ஹி ...ஹி ......)நம்ம ரெண்டுபேருக்கும் கப் கிடைக்கும் இல்ல .இதெப்படி நம்ம ஐடியா ஹி ...ஹி ....ஹி ......சரி அது இருக்கட்டும் சகோ ஓர் சின்ன வேண்டுகோள் .நான் என் ஆரம்பகாலக் கவிதைகளை இப்போது தமிழ் 10 ல் தொடர்ந்து வெளியிட்டுள்ளேன் .அவை அனைத்தும் காத்திருக்கும் பகுதியில் உள்ளன .தயவு செய்து சிரமம் கருதாமல் முடிந்தவரை அந்தக்
கவிதைகள் உங்களுக்குப் பிடித்திருந்தால் அவை அனைவரையும் சென்றடைய உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோ தாங்கள் எனக்கு இதுவரை
வழங்கிவரும் ஊக்குவிப்புகளிற்கு .