Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

10/16/2016

புலம் பெயர்ந்தாலும் மனம் மாறாது
திறந்து கிடக்கும் யன்னல் வழியே
பறந்து கிடக்கும் வானம் கண்டேன்
மனதில் தோன்றும் எண்ணம் எல்லாம்
நினைந்து நினைத்து கண்ணீர் விட்டேன்

நாலுபக்கம் வேலி கட்டி
நடுவில் ஒரு வீடு கட்டி
படலைக்கு கூட பட்லொcக் போட்டு
பாதுகாப்பாய் இருந்த குடும்பம்

உயிரை பாதுகாக்க வேண்டுமென்று
நாலு திசையும் ஓடி ஒளிந்து
திக்குக்கு ஒருவராய் சிதறிவிட்டோம்
பெற்றவர்களை மட்டும் விட்டிவிட்டோம்

வயது வந்த நேரத்திலும்
வைரம் பாய்ந்த மனசுடனே
சொந்த வளவில் சோறு ஆக்கி
தின்று மகிழும் அம்மா அங்கே

ஐந்துவருசத்துக்கு ஒரு முறையேனும்
பேரப்பிள்ளைகளை கூட்டிக்கொண்டு
அம்மா அப்பாக்கு காட்டி விட்டு
வந்த கடனை அடைப்பதற்கு
திரும்பி ஓடி வந்துவிடுவோம்


சொந்த மண்ணில் போய் நின்று
சொந்தத பந்தங்களோடு விருந்துண்ட்டு
கோயில் குளம் போய்வந்து
சந்தோசமாய் இருந்ததை நினைத்தே 
இரவு பகல் உழைக்க தொடங்குவோம்
அடுத்த ஐந்துவருடம் வரும் வரைக்கும்

10/15/2016

வெக்கங்கள்


எனக்குத்ததெரியாத 
வெக்கங்கள் எல்லாம்
சொல்லித்தந்தது யார்

எனக்கே தெரியாமல் 
என் வெக்கங்களை
தொட்டுப்பார்ப்பது ஏன்


எனக்கே தெரியாமல்
என்வெக்கங்கள் எல்லாம்-உன்னிடம்
வெக்கப்படுவது எப்படி

காப்பாற்ற வாராயோ


மழையிலும் நனையவில்லை
வெய்யிலில் உருகவும் இல்லை
குடை கூட தேவையில்லை
என்றிருந்தேன் ....

கரும்பாறையைவிட
உறுதியாய் கிடந்தேன்

கரும்பைவிட
இனிமையாந் இருந்தேன்

உன்னை கண்டதும்
நடுங்கி வியர்து
நனைந்துவிட்டேன்

என் இதயத்ததை
பிடுங்கி முழுதாய்
முழுங்கிவிட்டாய்

ஆடைகளைந்தது போல்
என் இதயம் பறித்துவிட்டாய்
வெட்கங்கள் கொள்கிறதே
என்னை இறுக்கி அணைத்து
காப்பாற்ற வாராயோ .....



இறுதியாக தந்த முத்தம்

இறுதியாக தந்த முத்தம்
இன்னும் ஈரம் மாறாமல்
என் கன்னங்களில்
ஊற்றெடுக்கிறது

துயிலும் அறையில் - உன்
ஒற்றைத்தலையணையை
கட்டி அணைத்தே
காலம் கழிக்கிறேன்

நீ விட்டு போன
சுவாசக்காற்றுகள் -என்னை
சுற்றி சுற்றி வந்தே
நினைவை தூண்டுகின்றது

ஒரு முறையேனும்
உன் அழைப்புவராதா என
காத்து கிடந்தே என்
தொலைபேசி செத்துவிட்டது

விட்டு சென்ற
எச்சங்களை அளித்துவிட்டு போ
இல்லை என்னை வந்து
அள்ளிக்கொண்டு போ


என்னோடு நான் பேசும்
கொடூரத்தை மட்டும்
தந்துவிடாதே
நான் செத்துவிட மாட்டேன்
ஒருநாள் எனை திரும்பி பார்ப்பாய் 
அந்நாளில் உதடு கொண்டு சிரிப்பேன்

ஒருநாள் என் முன்னே வந்து போவாய் 
அந்நாளில் கண்ணடித்து பார்ப்பேன்

ஒருநாள் என் அருகில் வந்து நிற்பாய் 
அந்நாளில் உன் கைகோர்த்து நடப்பேன்

ஒருநாள் என் நெஞ்சில் வந்து சாய்வாய் 
அந்நாளில் உன் தலை கோதி விடுவேன்

ஒருநாள் தலையை குனிந்து நிற்பாய் 
அந்நாளில் தாலிகட்டி மகிழ்வேன்

ஒருநாள் வெட்கம் திறந்து நிற்ப்பாய் 
அந்நாளில் என்னை உனக்குள் தருவேன்



என் நெஞ்சில்

முட்டாமல் கிட்ட வந்து 
முத்தங்கள் நூறு தந்து 
நிற்காமல் போகும் தென்றலாய்
*****
என்னையும் பார்க்காமல் 
என் கண்ணையும் பார்க்காமல் 
மண்ணையே பார்க்கும் வெக்கமாய் 
******
சொன்னதும் கேக்காமல் 
கேட்டதும் சொல்லாமல் 
பெண்ணென நெளியும் ஓடையாய் 
*****
மெல்லவும் முடியாமல் 
தின்னவும் முடியாமல் 
காதல் நெஞ்சில் சிக்கலாய் 
****
தப்பவும் முடியாமல் 
தப்பிக்கவும் நினைக்காமல் 
கையைகட்டி நிக்கிறாய்


என் நெஞ்சில் 




உன்னைத்தவிர

என்னையே 
நம்பிவந்திருக்கும்
உன்னைத்தவிர
வேறென்ன வேண்டும்
இந்த உலகைவெல்ல

துடிக்குதடி இதயம்

உன்னை அழகாக்கி 
என்னுடன் கூட்டிச்செல்ல
துடிக்குதடி இதயம்

என்னை சிவனாக்கி
உந்தன் நினைவாகி
உன்னுடன் அலையவே
துடிக்குதடி நெஞ்சம்

மண்ணில் நீவிழுந்தால்
கண்ணில் மண்விழுந்ததுபோல்
கலங்குதடி கன்னம்

கன்னம் இரண்டினிலே
செல்லக்கடி கடித்க
சினுங்கவேண்டும் 
கொஞ்சம்


அன்பை அள்ளித்தந்து
உன்னை அள்ளி அணைத்து
காதல் கொள்வதே எண்ணம்

மூச்சுகாற்று


அநியாயமாய் ஆடும்
இடையின் மேல் 
அழகாய் இருக்கும்
குடத்துக்குள் கிடக்கும்
கோயில் கிணத்து 
நல்ல தண்ணி 
துள்ளி குதிக்குதடி
என் இதயத்தை போல

குடம் முட்டவுமில்லை
தண்ணி சொட்டவுமில்லை
இடை ஆடுவதும் நிற்கவுமில்லை
என் இதயம் துடிக்கவுமில்லை


மட்டும் 
சூடாகிறதே
இதுவரை இல்லாத ஒன்று
இதையத்தில் புகுந்தது
அதன் பெயர் காதல் என்றது

தெரியாதவர்களை நான்
சேர்பதில்லை என்றேன்

அடம்பிடித்து அழுதது
இதையத்தை கட்டிப்பிடித்தது

உடனே வெளியேறசொல்லி 
திகதியும் குறித்தேன்

கேட்ப்பதாக தெரியவில்லை
அத்துமீறி குடியிருந்தது
ஒவ்வொரு நிமிடமும் - என்னை
ஆட்டிப்படைத்தது

தெரியாமல் நுழைந்த
தெரியாத காதலை
தெரிந்துகொள்ள நினைத்தேன்
காதலுக்கு முதல் முதலில்
அறிமுகமானேன்

அடுத்த நிமிடமே நான்
காதலானேன்.
அத்துமீறி குடியிருந்ததை
அடாவடியாக இதையதுக்குள்
பொத்திவைத்தேன்

இனி காதலை விடுவதாய்
எண்ணமில்லை
இதுவரை இப்படி
நான் நினைத்ததுமில்லை



9/21/2015

இலக்கணம் இல்லா இரவுகளில்

அச்சடித்த புத்தகத்தில்
பச்சை குத்திய என்இதயம்

பார்த்தவுடன் கவர்வதில்
அட்டைப்படம் உன்வர்க்கம் 

பக்கம் தட்டும் விரல்களில்
ஏங்கவைக்கும் உன் எண்ணம்

வளைந்தோடும் இடைவரியில்
விரிந்து கிடக்கும் கதையம்சம் 

விமர்சனம் இல்லா பார்வையில்
முகவுரை சொல்லும் முத்தம்

இலக்கணம் இல்லா இரவுகளில்
இலக்கியம் படைத்திடும் என்விருப்பம்

9/14/2015

விழுந்துவிட்டேன் காதலில்

நீ 
வீதியை கடக்கமுன்பே 
நான் 
விழுந்துவிட்டேன் காதலில்

9/11/2015

மொட்டை போட்டுவிட்டாய்


கூந்தல்
கலைத்து விளையாடும்
தென்றல் காற்றாய் - உன்
பின்னாலே வந்தேன்

நீ

கூந்தலே வேண்டாமென்று
வெட்டிவிட்டாய்
என் காதலுக்கு
மொட்டை போட்டுவிட்டாய்

9/10/2015

நதியா

நதியா 
இடையா 
நெளிகிறதே 
தனியா


9/09/2015

வெட்க்கமின்றியே பறக்கிறேன்

விடுமுறை நாள் 
அதிகாலை
துயில் கொள்ளும் 
கட்டிலின் மேலே
இரு கைகளுக்குள் - நீ 
குழந்தைபோல 

வெட்கப்பட்டு சிரிக்கிறாய் - நான் 
வெட்க்கமின்றியே பறக்கிறேன்

9/08/2015

என் நெஞ்சில்

முட்டாமல் கிட்ட வந்து 
முத்தங்கள் நூறு தந்து 
நிற்காமல் போகும் தென்றலாய்
*****
என்னையும் பார்க்காமல் 
என் கண்ணையும் பார்க்காமல் 
மண்ணையே பார்க்கும் வெக்கமாய் 
******
சொன்னதும் கேக்காமல் 
கேட்டதும் சொல்லாமல் 
பெண்ணென நெளியும் ஓடையாய் 
*****
மெல்லவும் முடியாமல் 
தின்னவும் முடியாமல் 
காதல் நெஞ்சில் சிக்கலாய் 
****
தப்பவும் முடியாமல் 
தப்பிக்கவும் நினைக்காமல் 
கையைகட்டி நிக்கிறாய் 

என் நெஞ்சில் 

9/07/2015

யாயும் ஞாயும் யாராகியரோ

வழி அனுப்பிவிட்டு 
வாசலில் விழிகரைந்து 
நிற்பதும் 

வாசல் வரும்முன்னே 
ஆயிரம் முத்தங்கள் 
தருவதும் 

உயிர் உள்ளிருந்து 
வெளியில் செல்வதுபோல்
நினைப்பதும் 

அனுப்பி விட்டு 
நினைவு தோட்டத்தில் 
மலர் பறிப்பதும் 

அப்பப்ப சிரிப்பதும் 
அழகான படங்கள் எடுத்து 
பார்ப்பதும் 

அலை பேசியில் 
நொடிக்கொரு முறை 
தகவல்கள் சொல்வதும் 

வீடு திரும்பும் வேளை 
ஓடிவந்து கட்டி 
அணைப்பதும் 

குட்டி பூனைபோல் 
என் கால்களுக்குள்ளே 
நிற்பதும் 

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

9/04/2015

என் காலை உணவு

மூன்று செத்தல் மிளகாய் 
நான்கு சின்ன வெங்காயம் 
ஐந்து தேங்காய் சொட்டு 
ஆறு கருவப்பிள்ளை 
கொஞ்சம் உப்புவைச்சு 
அம்மியில் அரைச்ச சம்பல்போல 
சிவந்திருக்கும் உன் சொண்டை 
கடித்துக்கொண்டே முடிக்கவா 
என் காலை உணவை

9/03/2015

இதயத்தில்

தழுவும் தாவணியில்
தவறிவிழுந்த இதயத்தை
வெட்கப்பட முன்னே
ஏந்திவிட்டேன் - என்
இதயத்தில்
.....
தழுவிய தாவணியை
தலைகுனிந்தே அள்ளியெடுத்து 
குழந்தை போல்
நெஞ்சிலே போட்டபோது
நானும் உன் இதயத்துக்குள்

9/02/2015

கோவில் கதவு

ஆறுகால பூசையில்லா 
காதல் கோவில் 
பாத கொலுசு 
பூஜை மணியாக 
முத்த துகள்கள் 
தீர்த்த துளியாக
அள்ளிகொடுக்கும் ஆண்டவனாய் 
நீ 
அள்ளி எடுக்கும் பக்தனாய் 
நான்
கோவில் கதவு 
எப்பொழுதும் பூட்டுதான்