5/19/2010

இறுதி பிணத்தின் புலம்பல்

நான் பார்துக்கொண்டிருக்கவே

என் உயிர் பிரிவதை

என் கண்களால் பார்த்தேன்


நான் பார்க்காமலே

பல உயிர் கொல்லப்பட்டுவதை

என் காதுகளால் கேட்டேன்


மரண ஓலத்தின் மத்தியில்

சதை பிண்டங்கள் துடிப்பதை

எல்லோரும் பார்த்தார்கள்


ஒரு இனமே எரிந்து

கருகி சாவதை

உலகமே பார்த்தது


அனுதாபப்வடுவதை விட

வேறு என்னதான்

செய்ய முடிந்தது


போங்கடா நான் என்னைத்தவிர

வேறு யாரையும் நம்புவதில்லை

அடுத்தபிறப்பில்

22 comments:

நிலாமதி said...

எல்லோரையும் நம்பி என்னத்தைக்கண்டோம். வெறுப்பும் வேதனையும் விரக்தியும் தான்

ஹேமா said...

கவிதையின் இறுதிப் பந்தியில் அத்தனை வெறுப்பு !எங்கள் நாட்டைப் பொறுத்தவரை எல்லோர் மனநிலைமையுமே இதேதான் யாதவன்.

க.பாலாசி said...

இந்த பிறப்பிலும்..... வெட்கப்படத்தான் முடிகிறது...

கவி அழகன் said...

நிலாமதி ஹேமா க.பாலாசி நன்றி உங்கள் ஆதங்கங்களுக்கு

Priya said...

உங்களின் வெறுப்பு நியாமானதுதான்;(

எல் கே said...

யாரை நம்பி நாம் பிறந்தோம் ??

Kousalya Raj said...

இந்த எழுத்துகள் கவிதை இல்லை அவலம்.... படிக்கும்போதே உள்ளே ஏதோ உடைவதுபோல் இருந்தது. நம் மக்களின் இயலாமை குறித்து என் மனம் அடிக்கடி கலங்கும் கூடவே நம் கையாலாகாதத்தனம் குறித்து வெறுப்பும் வரும். இதை பற்றி சொன்னால் இது பின்னுட்டம் இல்லாமல் பதிவாகிவிடும். உங்கள் பதிவை எனக்கு அறிமுகபடுத்தி வைத்ததற்கு மகிழ்கிறேன். தொடர்ந்து பகிர்வோம் நண்பரே

கண்மணி/kanmani said...

கையாலாகதத் தனமே மிஞ்சுகிறது

ஸாதிகா said...

///
போங்கடா நான் என்னைத்தவிர

வேறு யாரையும் நம்புவதில்லை

அடுத்தபிறப்பில்///

வெறுப்பின் உச்சம்.கவிதை நடை அருமை.

Menaga Sathia said...

கவிதை மிக அருமை!!

கவி அழகன் said...

நன்றி அன்பு உள்ளங்களே Priya LK கண்மணி/kanmani ஸாதிகா Mrs.Menagasathia

கமலேஷ் said...

மனம் பாதிக்கும் கவிதை...

vanathy said...

யாதவன், நல்லா இருக்கு. என்னத்தை சொல்ல. எல்லாமே நடந்து முடிந்து விட்டது. நானும் இலங்கை தான். நாட்டை விட்டு வந்து பல வருடங்கள் ஆகி விட்டது. போய் பார்க்க விருப்பம் இருந்தாலும் ஏனோ ஒரு தயக்கம்.

Anonymous said...

இனம் கண்முன்னே அழிய உலகமும் உறவுகளும கையறுநிலையில்...! இந்த வலி இப்பிறப்பில் மாறது. அடுத்த பிறப்பினிலும் தமிழனாய்...?

யாழ்.

prem said...

nice tamelenam orukalam mendalum nanpa

சுசி said...

//போங்கடா நான் என்னைத்தவிர

வேறு யாரையும் நம்புவதில்லை

அடுத்தபிறப்பில்//

என்ன சொல்ல யாதவன்.. தமிழராய் பிறக்க தவம் செய்ய வேண்டுமாம்..

அண்ணாமலை..!! said...

உங்கள் கோபம் வெகு நியாயமானதே!
மலையைத்தூக்க முடிந்தவர்கள்
புல்லைப் புரட்டிப்போடக் கூட
முயலவில்லை என்பதே உண்மை!

Jaleela Kamal said...

மிகவும் சங்கடமாக இருக்கு.

மனதை மிகவும் பாதிக்கிறது.

Anonymous said...

அருமையான கவிதை என் நெஞ்சே சுட்டு விட்டு போச்சு

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
thiyaa said...

அருமையான கவிதை

tamil blog said...

super sir