Showing posts with label பிளாக்கர் தொடங்கிய கதை. Show all posts
Showing posts with label பிளாக்கர் தொடங்கிய கதை. Show all posts

10/16/2016

அவன் அன்று இறைவன்

கண்ணை மூடும் கறுப்பு வானம்
வெள்ளை குளமாய் வட்ட நிலவு
சிந்திக்கிடக்கும் சில்லறை விண்மீன்
சிலிர்க்க வைக்கும் சிக்கன காற்று
*********
அடங்கிப்போகும் அவசர உலகம்
ஓய்வு எடுக்கும் இடைவெளி நேரம்
குடும்பம் கூடும் நிலவு முற்றம்
ஊரை கெடுக்கும் குடிகாரன் சத்தம்
************
குறைகளை சொல்லும் மனைவியின் நேரம்
தேவையை கேட்கும் பிள்ளையின் சிணுங்கல்
கணக்கு பார்க்கும் அப்பனின் மூளை
போர்வைக்குள் அடங்கும் இயலாமை யுத்தம்
*************
தலையணை மந்திரம் சொல்லிடும் இரவு
தரணியை ஆள போட்டிடும் கணக்கு
கனவுகள் கண்டு மகிழ்ந்திடும் மனசு
விடியலை காண துடித்திடும் நினைப்பு
***************
வழமைபோல் காலை விடிந்திடும் வேளை
வாடிய முகத்துடன் இன்னொரு நாளை
தேடியே போவான் குடும்பத்துத்தலைவன்
தேவைகள் தீர்த்தால் அவன் அன்று இறைவன்

10/15/2016

சொல்லிவிட்டுப் போ


யன்னல் கம்பிகளின் இடுக்கினிலே
சிக்கித்தவிக்கும் என் இரவு நிலவு

கண்கள் இரண்டும் குளமாகி
அரிவி கொட்டும் என் கண்கள்

சொல்லிய வார்த்தைகளெல்லாம்-உன் 
உள்ளத்தில் இருந்து வந்ததா

நான் உனக்காக வளரவில்லை - என்னை
உனக்காகவும் வளர்க்கவில்லை

உனக்கான துணையாக மாற்றினாய்
அதற்காகவே என்னை நான் மாற்றினேன்

எதற்காக வெறுத்தாய் காரணமின்றி
ஒரு முறை சொல்லிவிடு போகிறேன்

இந்த நிலவும் வேண்டாம்
கரு இரவும் வேண்டாம்

தனிமையில் ஓரு மூலையில்
என்னை நானே காதல் செய்வேன்

எதற்காக வெறுத்தாய் 
சொல்லிவிட்டுப் போ





ஆசைப்படுகிறேன்

கட்டிஅணைத்து
தூக்கிச்சுத்தி
முத்தம்கொடுப்பதெல்லாம்
சின்னப்பிள்ளைகளுக்கு
கிடைத்தவரம்
என்றிருந்தேன்

உன்னைக்காதலித்தபின்பு
நானும் 
சின்னப்பிள்ளை ஆகிவிட்டேன்


நீ இப்படியே இருந்தால்
உன்னுடன் சேரந்து வளர
ஆசைப்படுகிறேன்
ஒருநாள் எனை திரும்பி பார்ப்பாய் 
அந்நாளில் உதடு கொண்டு சிரிப்பேன்

ஒருநாள் என் முன்னே வந்து போவாய் 
அந்நாளில் கண்ணடித்து பார்ப்பேன்

ஒருநாள் என் அருகில் வந்து நிற்பாய் 
அந்நாளில் உன் கைகோர்த்து நடப்பேன்

ஒருநாள் என் நெஞ்சில் வந்து சாய்வாய் 
அந்நாளில் உன் தலை கோதி விடுவேன்

ஒருநாள் தலையை குனிந்து நிற்பாய் 
அந்நாளில் தாலிகட்டி மகிழ்வேன்

ஒருநாள் வெட்கம் திறந்து நிற்ப்பாய் 
அந்நாளில் என்னை உனக்குள் தருவேன்



9/07/2015

யாயும் ஞாயும் யாராகியரோ

வழி அனுப்பிவிட்டு 
வாசலில் விழிகரைந்து 
நிற்பதும் 

வாசல் வரும்முன்னே 
ஆயிரம் முத்தங்கள் 
தருவதும் 

உயிர் உள்ளிருந்து 
வெளியில் செல்வதுபோல்
நினைப்பதும் 

அனுப்பி விட்டு 
நினைவு தோட்டத்தில் 
மலர் பறிப்பதும் 

அப்பப்ப சிரிப்பதும் 
அழகான படங்கள் எடுத்து 
பார்ப்பதும் 

அலை பேசியில் 
நொடிக்கொரு முறை 
தகவல்கள் சொல்வதும் 

வீடு திரும்பும் வேளை 
ஓடிவந்து கட்டி 
அணைப்பதும் 

குட்டி பூனைபோல் 
என் கால்களுக்குள்ளே 
நிற்பதும் 

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
நீயும் யானும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"

8/14/2015

கண்ணை மூடுகிறேன் காதல்கொள்ளு

நெஞ்சம் முழுக்க உன்னை நினைத்து 
பஞ்சு மெத்தையில் படுத்தாலும் 
கண்கள் மூட மறுக்கிறது
கனவு என்னை கலைக்கிறது
செங்கமல இதழ்விரித்து
சொல்லுகின்ற வார்த்தை ஒன்றை 
கண்கள் தேடி அலைகிறது – இது 
காதல் என்று புரிகிறது
பிஞ்சு விரல்கள் பட்டதுமே 
அஞ்சி சுருங்கும் இடை எனது 
உன் பத்து விரல் படுவதற்காய் 
பாய்விரித்து கிடக்கிறது
கொஞ்ச நேரம் என்னைப்பார்த்து
கொஞ்சி குலாவ நேரம் ஒதுக்கு 
உந்தன் இதய கோவில் வாழும் 
தெய்வமன்றோ நான் உனக்கு
சிவனும் சக்தியும் இமையமலையில் 
அர்த்தனா தீஸ்வரராய் உந்தன் மடியில் 
கற்ற வித்தை மொத்தம் இறக்கு 
கண்ணை மூடுகிறேன் காதல்கொள்ளு

7/27/2015

ஒரு தாய் மடி கொடு

கவலை
எதிர்பார்ப்புக்கள்
ஏமாற்றமானபின்பு
எதிர்பர்காமலேயே வருகிறாயே
தேவையானவர்கள்
காயப்படுத்தியபின்பு
தேவை இல்லாமலே வருகிறாயே
விருப்பமானவர்கள்
வெறுக்கின்றபோது - நான்
விரும்பாமலேயே வருகிறாயே
காயங்கள் வந்தாலும்
ஏமாற்றம் நடந்தாலும்
சிரிக்க வேண்டும் நான்
கவலையே இலவச கவலையே
தேவை இல்லை நீ போய்விடு
இறைவா என் கவலை தீர்க்க
ஒரு தாய் மடி கொடு

7/23/2015

அகதி வாழ்க்கை வெளிநாட்டில்

வீடு மேலே கூடு கட்டி
கூடுக்குள்ளே குஞ்சு பொரிச்சு
பாசத்துடன் வளர்த்துவரும்
குருவிபோல இருந்த வாழ்க்கை

கூடு உடைஞ்சு குருவிபறந்து
தேசமெங்கும் சிதறி வாழ்ந்து
பாசத்துக்கை ஏங்கி தவிக்கும்
தனிமை குயில் ஆனதேனோ

சின்னஞ்சிறு வீட்டுக்குள்ளே
சில்லறையாய் நாலு அரிசியுடனெ
கஞ்சி குடித்து வாழ்ந்த காலம்
பஞ்சு மெத்தையில் கிடைத்திடுமோ

சொந்த மண்ணில் முள்ளு வேலி
சொந்தங்களுக்குள் சண்டை போட்டி
சொந்தமாக வீடிருந்தும்
அகதி வாழ்க்கை வெளிநாட்டில்

7/10/2015

பணத்துக்காய்

பணத்துக்காய்
உயிருள்ள 
பிணமாய் மாறும் 
மனிதர்கள்

1/14/2011

நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)

உவன் தம்பி சுதாக்கு வேலையில்ல சிவனே எண்டு இருந்த என்ன மாட்டிவிட்டிடான்

தம்பி சுதா வின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கட்டுரை. இதுதான் கடைசி. எனது பிளாக்கரில் இனி கவிதை மட்டுமே வெளியிடப்படும். இது சத்தியம். (ஏனெண்ட அது தான் இலகு பந்தி பந்தியா அடிக்க தேவையில்லை ).

வன்னியில் இருந்து ஒரு கடிதம் வந்தது பிளாக்கர் ஆரம்பிகச்சொல்லி.

2008 மார்கழி மாதம் இந்தியா சென்றபோது பிளாக்கர் சமந்தமாக கனடாவில் இருந்தது வந்த அண்ணா coumputer தெரிஞ்ச மச்சானோட கதைத்தார். அப்பொழுது ஒன்றும் புரியவில்லை. நான் சும்மா பக்கத்தில கேட்டு கேட்டு கொண்டு தலையை ஆட்டி ஆட்டி கொண்டு இருந்தான். பெரிய பெரிய ஆக்கள் எல்லாம் பிளாக்கர் வைத்திருக்கிறார்கள் கவிதை போடுகிறார்கள் என்றார். அப்பவே மனதுக்குள்ள முடிவெடுத்திட்டன் நானும் ஒரு பிளாக்கர் திறக்குரதான் என்று .சிறுவயதில் இருந்து கொப்பியில் எழுதிவைத்த கவிதைகளை போடலாம் ஆனால் பெரியாட்களுக்கு முன் எனது கவிதை எடுபட வேண்டுமென்றால் பெயரிலாவது பெரியாள் போல் காட்டவேண்டும் என சிந்தித்தேன். சிந்த்திதுகொண்டே இலங்கை வந்தேன். அதனால் தான் கவி கிழவன் என பெயர் வைத்தேன்

இலங்கைக்கு வந்து அடுத்த நாள் அலுவலகம் சென்றேன். மேசையில் ஒரு கடிதம். இதோ கடிதம் . ஒரு சில காரணங்களுக்காக பெயர்கள் மறைக்கபட்டுள்ளது .

வன்னி வள்ளிபுனத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது பிளாக்கர் ஆரம்பிகச்சொல்லி.கொஞ்சம் அதிகம் தான் அப்படியே தருகின்றேன் .




ஆச்சரியம் கணணி பாவனை குறைந்த வன்னியில் இருந்து இந்த இடம்பெயர்வுக்குளும் பிளாக்கர் சமந்தமாக Colombo இல் இருக்கும் எனக்கு எழுதுகிறார். ஆரம்பிதேன் 16 17 வயதில் இருந்து யாருக்கும் காட்டாது எழுதிவைத்த கவிதைகளும் பல்கலைகழக சுவர்களில் எழுதிய கவிதைகளும் புதிதாக எழுதுகின்ற கவிதைகளும் என கவிதைகளை பிரசுரிதேன்.

பாமினியில் மட்டும் type பண்ண தெரியும் அந்த துணிவில பிளாக்கர் ஆரம்பித்தான். நானே ஒன்று திறந்தேன் அது சரி வரல பிறகு மச்சானின்ட உதவியோட அவன கேட்டு கேட்டு துறந்தான். அவன் எங்கள் வீட்டில் இருந்து படிச்சபடியா வசதியா போட்டு. டெம்ப்ளேட் வடிவமைப்பு எல்லாம் சொல்லித்தந்தான்.எல்லா கவிதையையும் word ல அட்டிச்சன். நல்ல காலம் மச்சான் சொன்னான் unicod font தான் பிளாக்கர்ல போடலாம் என்று. அத எப்படி மாத்திரதென்ட்டு சொல்லித்தந்தான். ஒரு மாதத்திற்கு 10 கவிதை போடிரதுதான் அரம்பத்தில திட்டம் . அடுத்தடுத்து 10 கவிதையையும் போட்டன் . அப்படி 2 மாசம் போட்டன். thamilish ல இணைக்கவில்லை . இன்னும் என்ட கவிதைகள் சில தமிளிஸ்ல வராம இருக்கு . மச்சான் தான் எனக்கு thamilish இல இணைகிற முறை சொல்லித்தந்தான் . அவன் தான் vote போடுற கருத்து போடுற நுட்பங்கள் சொல்லித்தந்தான். எதாவது சந்தேகம் என்றால் உடனே தொடர்பு கொள்வது அவனைத்தான் . அவன் வேறு யாருமல்ல http://www.tamilhackx.com/ பிளாக்கர் உரிமையாளர் சயந்தன்.

என்ன பகிடி ஏன்டா விசிட்டர்ஸ் flag counter பொட்டுடன எங்க எங்க இருந்தெல்லாம் அகல் பக்கிரினம் எண்டு விழுந்திச்சு . எனகேண்டா சந்தேகம் அரம்பத்தில . என்ட கவிதையை இவ எல்லாம் பாபினமோ உது சும்மா பொய் சொல்லுது என்டு நினைச்சன் . பிறகு தான் கம்ப்யூட்டர் பொய் சொல்லாது எண்டு விளங்கிச்சு .

எனது கவிதைகளை பார்க்க உயிருடன் வருவாரா வந்தாலும் முகாமில் இருந்து எப்ப வந்து எப்ப பார்பார் என்ற ஏக்கம் மனதுக்குள் இருந்துகொண்டே இருந்தது .

வந்தார் குடும்பத்துடன் ஒருவித பிரச்சனையும் இன்றி. முகாமில் இருந்தார் தொடர்பு கொண்டார். இப்பொழுது முகாமில் இருந்து வெளியில் வந்து எனது 100 வது படைப்புக்கு ஆசியும் எழுதி தந்தார் . அவர் வேறு யாருமில்லை பூங்கோதை படைப்புகள் http://www.poonka.blogspot.com/ பளோகரின் சொந்தகாரி .இப்பொழுது லண்டன் சென்றுவிட்டார் . அவரது ஆசி கவிதையை பார்க்க

http://kavikilavan.blogspot.com/search/label/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%௮௮

இந்த லிங்குக்கு செல்லவும். ஒரு மாதிரி 161 கவிதை எழுதிட்டன். நிலா மதி அக்கா தான் முதன் முதலில் தனிபட்ட முறையில் தொடர்பு கொண்டவர். வாழ்த்தினவர். அவரையே இதை தொடர அழைக்கிறேன் .
நிலா மதி அக்கா நிலா மதி அக்கா எங்கிருந்தாலும் உடனே கரியாலியதுக்கு வரவும் உங்களுக்கு பொங்கல் காத்திருக்கிறது . இப்படிக்கு ஆலய பரிபாலன சபையினர்

11/17/2009

வன்னியில் இருந்து ஒரு கடிதம் வந்தது பிளாக்கர் ஆரம்பிகச்சொல்லி.

2008 மார்கழி மாதம் இந்தியா சென்றபோது பிளாக்கர் சமந்தமாக கனடாவில் இருந்தது வந்த அண்ணா கதைத்தார். அப்பொழுது ஒன்றும் புரியவில்லை. பெரிய பெரிய ஆக்கள் எல்லாம் பிளாக்கர் வைத்திருக்கிறார்கள் கவிதை போடுகிறார்கள் என்றார். சிறுவயதில் இருந்து கொப்பியில் எழுதிவைத்த கவிதைகளை போடலாம் ஆனால் பெரியாட்களுக்கு முன் எனது கவிதை எடுபட வேண்டுமென்றால் பெயரிலாவது பெரியாள் போல் காட்டவேண்டும் என சிந்தித்தேன். சிந்த்திதுகொண்டே இலங்கை வந்தேன்.

இலங்கைக்கு வந்து அடுத்த நாள் அலுவலகம் சென்றேன். மேசையில் ஒரு கடிதம். இதோ கடிதம் . ஒரு சில காரணங்களுக்காக பெயர்கள் மறைக்கபட்டுள்ளது .

வன்னி வள்ளிபுனத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது பிளாக்கர் ஆரம்பிகச்சொல்லி.கொஞ்சம் அதிகம் தான் அப்படியே தருகின்றேன் .




ஆச்சரியம் கணணி பாவனை குறைந்த வன்னியில் இருந்து இந்த இடம்பெயர்வுக்குளும் பிளாக்கர் சமந்தமாக Colombo இல் இருக்கும் எனக்கு எழுதுகிறார். ஆரம்பிதேன் 16 17 வயதில் இருந்து யாருக்கும் காட்டாது எழுதிவைத்த கவிதைகளும் பல்கலைகழக சுவர்களில் எழுதிய கவிதைகளும் புதிதாக எழுதுகின்ற கவிதைகளும் என 99 கவிதைகளை பிரசுரிதேன்.

எனது கவிதைகளை பார்க்க உயிருடன் வருவாரா வந்தாலும் முகாமில் இருந்து எப்ப வந்து எப்ப பார்பார் என்ற ஏக்கம் மனதுக்குள் இருந்துகொண்டே இருந்தது .

வந்தார் குடும்பத்துடன் ஒருவித பிரச்சனையும் இன்றி. முகாமில் இருந்தார் தொடர்பு கொண்டார். இப்பொழுது முகாமில் இருந்து வெளியில் வந்து எனது 100 வது படைப்புக்கு ஆசியும் எழுதி தந்தார் . அவர் வேறு யாருமில்லை பூங்கோதை படைப்புகள் http://www.poonka.blogspot.com/ பளோகரின் சொந்தகாரி .
அவரது ஆசி கவிதை இதோ. கொஞ்சம் அதிகம் தான் அப்படியே தருகின்றேன்

யாதவன்!!! யாரவன்???
வார்த்தை மந்தைகளைச் சாய்த்து
வருடி மெல்லக் கொடுத்துத் தன்

வலிந்த உணர்வுகளை ஊட்டி அவற்றை

வழிநடத்தும் நல்ல மேய்ப்பன்
யாதவனாய் யாழவனாய்

யாத்துப் பல கவியமுதம் பின்னலூடே
யாவரும் சுவைப்பதற்காய்
யாசகமாய்த் தந்தவன்
தவழும் கவிக் குழவியாக என்முன்
தத்தி வந்த அவன் கண்களுக்குள்

தத்துவம் மிளிர்ந்தது கண்டேன்- அடடா இவன்

தவழ வேண்டியவனா..
வேண்டவே வேண்டாம்..

தம்பி எழடா என்று கை கொடுத்து

தூக்கி விட மட்டும் தான் முயன்றேன்

திரும்பிப் பார்ப்பதற்குள்.. அடடா

திடுமெனப் பாய்ந்துவிட்டான்


தம்பி யாதவா..

யாழ் மண்ணின் மாதவமே..

மூச்சிரைக்குதடா உன்னை
அண்ணார்ந்து பார்க்கையிலே

நூல் ஒன்று போதும் நீ
நிலாவைப் பிடித்து விடுவாய்- உன்

மூக்குக் கண்ணாடியில் ஒரு ஐயம்..
அதன்
மூலப் பொருள் என்னவோ??
நொந்து போன உறவுகளின் நெஞ்சுக்குள்

நுழைந்து பார்க்கிறாயே..
“தேவதையே எனது வேண்டுதல்”
என்ற
தெவிட்டாத பாவிலே-எம்
தேம்பலை அனுபவித்துப் பாடினாய்

நன்றி சகோதரா...
நம்புகிறோம் இன்னமும்நாம்

நாதியற்றுப் போகவில்லை-உன்

பேனா எம்மினத்தைப் பிரதிபலிக்கும்..


மரபிற்குள்ளும் உன் கவிவாசனை

மெல்ல வீசுகிறதே... மகிழ்ச்சி

காதற் பாக்களின் மென்னடையால்-உன்

காலடி வீழும் ரசிகர் உள்ளம்
கற்பனைகளின் ஆழம் கட்டியம் கூறுது- நீ

கவிஞன் தான் என்று

இன்னும் உன் புகழ் அதிகம்

இயம்பிடத்தான் விரும்புகிறேன்-ஆனால்

இல்லை என்னிடம்வார்த்தைகள்

இடையிலே சிக்குது உணர்வுகள்

பலம் பல இருந்த போதும்,
தம்பி
பலவீனம் ஒன்று கண்டேன்
எதிர்மறை உணர்வுகள் அதிகம்

எம்பிக் குதிக்கிறது உன்னுள்..

தமிழினம் அழுதது போதும்

துயர்மனம் துவண்டது போதும்
சேமம் விசாரிப்பது பண்பாடு
அது தேவை தான்

சேர்ந்து அழுவது ஒப்பாரி

சோர்ந்த உளத்துக்கு அதுவும் தேவைதான்
இதையெல்லாம் செய்வதற்கு
பலருண்டு இவ்வுலகில் -உன்
பேனாவின் பணியாக
இன்னுமொன்று
புதிதாகச் சேர்த்துக் கொள்
உளம் சோர்ந்து போனவர்க்கு

உரமூட்டும் பணி செய்

சாய்கின்ற உணர்வுக்கு
சவால் ஊட்டும் பணி செய்
மரணித்தது தமிழன் மட்டுமே-அவன்

மானம் அல்ல என உணர்த்து

புதைந்து போன சிந்தனைக்கு

புத்துணர்வு ஊட்டு

சலனமின்றி ஒதுங்குகின்ற

சமூகத்தைச் சாடு
சாக்கடை மனம் கொண்டோர்க்கு

சாட்டையாலே போடு -அது

சத்தியமாய் உன்னினத்தை

சரித்திரத்தில் நிமிர வைக்கும்


வாழ்க நீ நீடு

வளர்க நின் சிந்தனைக் கோடு

நீள்க உன் கவிப்பயணம்

நிமிர்க நீ இவ்வுலகில் மேலும்..


அன்புடன்
பூங்கோதை

நிலமதி அக்காவையும் குறிப்பிட வேண்டும் முதன் முதலில் தனிபட்ட முறையில் தொடர்பு கொண்டவர். வாழ்த்தினவர். அவரது வாழ்த்தும் இதோ

யாதவனின் 100.......வது படைப்புக்கு என் பாராட்டுக்கள்.

நவீன விஞ்ஞான உலகில் கணணி மிகப்பெரும்பங்கு வகிக்கிறது .தற்கால இளையோர் முதல் ஆர்வமுள்ளவர்களிடையே ,தங்கள் கவிதை கட்டுரை கதைகள் போன்றவற்றை, தமது உள்ளத்து வெளிப்பாட்டை உணர்த்த வலைப்பதிவு வழிசமைக்கிறது .என் தமிழ் வாசிப்பு ஆர்வமிகுதியால் கண்டு பிடித்த தளம் தான் "கவிக்கிழவன் பக்கம்:" இவர் ஒரு துடிப்பான , சமூக சேவையில் ஆர்வமுள்ள இளையவர். இவரது கவிதைகள் , தாயக அவலங்கள் பற்றிய பகுதிகளை மிகுந்த ஆர்வமுடன் படிக்கும் நூற்றுக் கணக்கான வர்களில் நானும் ஒருத்தி . இவரது கவிதைகள் காதல் சோகம் தனிமை என்ன்பவற்றை தாங்கி வரும் .அவ்வப்போது ஈழத்து அவலங்களை பற்றி ,மக்களின் துயரம் அவல வாழ்வு என்பவற்றை கலை நயத்துடன் வெளிக்கொண்டு வருவதில் இவரின் படைப்புக்கள் பெறும் பங்கு வகிக்கிறது .பதிவர் உலகில் நானும் இவரது நட்பு .என்னை கவர்ந்த படைப்பாளிகளில் இவரும் ஒருவர் .யாதவன் எனும் இயற் பெயர் கொண்ட இவர் இலங்கை வலை ப்பதிவாளர்களில் ஒருவர் .இவரது நூறாவது பதிவு வெளி வரும் இவ்வேளை மேலும் சிறந்த படைப்புகளை தனது ,வலியுலகின் சிறந்த படைப்பளியாக வாழ்த்துகிறேன். இதனை ஏனைய வாசகர்கள் முன் கூறுவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். நட்புடன் நிலாமதி

இந்த்நேரத்தில் எனதது கவிதையை வாசிபவர்களுக்கும் பின்ஊட்டம் இடுபவர்களுக்கும் வாக்கு இடுபவர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.