நிலவொன்று விழுந்ததோ
பூமியில்
நிஜ அழகொன்று படர்ந்ததோ
மேனியில்
கண்கொண்டு பார்கையில்
சிலிர்க்கிறேன்
காதல் வளர்பிறையாக
உயிர்க்கிறேன்
கனவொன்று தெரிந்ததோ
கண்களில்
இமை கண்மூடி திறந்ததோ
நாணத்தில்
விரல் கொண்டு தீண்டையில்
குளிர்கிறேன்
வளைந்தோடும் நதியாக
பாய்கிறேன்
இதழொன்று விரிந்ததோ
பூவினில்
கரு வண்டொன்று அமர்ந்ததோ
உதட்டினில்
சுவைதேடி செல்கையில்
இனிக்கிறேன்
காதல் சுகம்தரும் காதலனாய்
வாழ்கிறேன்
Tweet | |||||
51 comments:
முதல் வருகை.........
கவிதை நல்லா இருக்குது..........
விரல் கொண்டு தீண்டையில்
குளிர்கிறேன்
வளைந்தோடும் நதியாக
பாய்கிறேன்
எனக்கு பிடித்த வரிகள்..
மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)
//இதழொன்று விரிந்ததோ
பூவினில்
கரு வண்டொன்று அமர்ந்ததோ
உதட்டினில்
சுவைதேடி செல்கையில்
இனிக்கிறேன்
காதல் சுகம்தரும் காதலனாய்
வாழ்கிறேன்//எனக்கு பிடித்த வரிகள்..
நெஞ்சத்தை வருடும் வரிகள் உளம் கனிந்த பாராட்டுகள் காதல் சிக்கென பிடியும் அவிழ்ந்து விட போகிறது
இதமான கவிதை
nice kavithai
சுவைதேடி செல்கையில்
இனிக்கிறேன்
காதல் சுகம்தரும் காதலனாய்
வாழ்கிறேன்//
பாராட்டுக்கள்.
அருமை அருமை
மீண்டும் மீண்டும் படித்து சந்த லயத்தை சுகித்தேன்
"நாணத்தில் "என்ற இடத்தில் மட்டும்
கொஞ்சம் தடுமாறினேன்
அதுவும் இரு சீராக இருந்திருக்குமாயின்
இன்னும் சிறப்பாக இருக்குமோ?
சூப்பர் படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
கவிக்கிழவன் கவி அழகன் ஆகும் போதே எங்கேயோ இடித்தது. இப்போ கன்ஃபார்ம் ஆயிடுச்சு...
ம்ம்ம்ம்.. கலக்குங்க...
ட்ரீட் எப்போ???
கவிச்சுவைதேடி செல்கையில்
இனிக்கிறேன்....மிகவும் இனித்தது, வாழ்த்துக்கள் !!
அப்போ காதலிச்சு பார்க்க வேண்டியது தான் .))
கவிதை -இனிமை .
பாடல் போல இருக்கு.நைஸ்
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
''..கண்கொண்டு பார்கையில்
சிலிர்க்கிறேன்
காதல் வளர்பிறையாக
உயிர்க்கிறேன்''...
ஆகா!...காதலே காதல்! அருமை வரிகள் கவி அழகா! எழுது! எழுது! ஏணியில் எறி உயர்க!! வாழ்த்து!.
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com
கவிக்கிழவரே...வர வர காதல் ரசம் கூடிக்கொண்டே போகிறது.பிரிந்து வந்ததால் காதலின் சுவை அதிகரித்துக்கொண்டே போகிறது.இது காதல் !
போங்கோ போங்கோ எது மட்டும் போகுதுன்னு பார்ப்போம் !
கவிதை முழுதும் காதல், காலம் முழுதும் அவள். இனிமையான கவிதை. அருமையாய் இருந்தது. . .
காதல் காதல் காதல்....(சிசர் மனோகர்)
ஹா ஹா ... அருமை கவிதை அருமை
காதல் வளர்பிறையாக
உயிர்க்கிறேன்
ஆமாயா வளர்பிறைக்கு பின் தேய்பிறைதானே...!!!!!!
நடத்து... நடத்து கொடுத்து வைச்சவன்யா நீ...!!!
கவிதை அருமை வாழ்த்துக்கள்..
காட்டான் குழ போட்டான்...
காதல் சுகம் தரும் காதலன்
கவிக்கு இனிமை..
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
wow! super. well written.
கருவண்டென இரு கண்கள் என கேட்டிருக்கின்றேன். கருவண்டொன்று அமர்ந்ததோ உதட்டினில் என்பதை உங்கள் கவிதைகளில் காண்கின்றேன். இப்போதெல்லாம் மிகச்சிறப்பாகக் காதல்கவிஞனாக வலம் வருகின்றீர்கள் வாழ்த்துகள்
அருமையான கவிதை .
வரிகள் ,கவிதை நடை அருமை .
அருமை அன்பரே <3
சிறப்பான கவிதை ஒரே காதல் கவிதை எழுதுகின்றீர்கள் வயசுக் கோளாறு போல் காதல் வளர்பிறையாக இப்படி சின்னப்பிள்ளை என்னைக் கொல்லக் கூடாது.
கருனைக் கொலை வந்து பாருங்கள் தனிமரம் அழைக்கிறது!
இதமான கவிதை
கவி அழகன் உங்கள் கவிதையும் கொள்ளை
வாழ்த்துக்கள்
கவிதை அழகோ அழகு. பிரிவு காதலை இன்னும் வளர்க்குமாம். உண்மையா? பாராடுக்கள். உங்கள் கவிதைகளில் தேர்ச்சி தெரிகிறது.
ஃஃஃஃகாதல் வளர்பிறையாக
உயிர்க்கிறேன்ஃஃஃஃ
ஆகா வர வர ஒரு மார்க்கமாத் தான் போகுது பாப்பம் பாப்பம்..
அசத்தல் கவிதை சகோ//
வணக்கம் கவிக் கிழவரே, இருங்கள் படிச்சிட்டு வாரேன்.
நிலவொன்று விழுந்ததோ
பூமியில்
நிஜ அழகொன்று படர்ந்ததோ
மேனியில்
கண்கொண்டு பார்கையில்
சிலிர்க்கிறேன்
காதல் வளர்பிறையாக
உயிர்க்கிறேன்//
ஒரு பெண் எதிர்பாராமல் ஒரு ஆணின் வாழ்க்கையில் குறுக்கே வரும் போது, அவனின் மன அலைகளை குறுக்கிடும் போது ஏற்படும் அற்புதமான மாற்றங்களை முதலாவது பந்தி சொல்லுகின்றது.
கனவொன்று தெரிந்ததோ
கண்களில்
இமை கண்மூடி திறந்ததோ
நாணத்தில்
விரல் கொண்டு தீண்டையில்
குளிர்கிறேன்
வளைந்தோடும் நதியாக
பாய்கிறேன்//
சந்த நடையில் கவிதை காதல் சிந்தினை இசைக்கின்றது.
வளைந்தோடும் நதியாக...பெண்ணைத் தான் கவிஞர்கள் நதிக்கு ஒப்பிடுவார்கள்,. ஆனால் இங்கே ஒரு ஆண் மகன் தன் உணர்வுகளை நதிக்கு ஒப்பிட்டு, காதலுக்காக வளைந்து செல்வதி விரிவாக விளக்கியுள்ளான்.
இதழொன்று விரிந்ததோ
பூவினில்
கரு வண்டொன்று அமர்ந்ததோ
உதட்டினில்
சுவைதேடி செல்கையில்
இனிக்கிறேன்
காதல் சுகம்தரும் காதலனாய்
வாழ்கிறேன்//
சுவை தேடிச் செல்கையில் இனிக்கின்றேன். ஏன் உதட்டில் அவா இனைப்பை பூசிக் கொண்டு வந்திட்டாவோ;-)))
என்னமோ பண்ண வைச்சிட்டீங்க.
கலக்கலான கவிதை. காதலின் இனிமையான தருணங்களையும், காதலனாய் எதிர்பார்ப்புக்களோடு வாழும் போது ஏற்படும் உணர்வுகளையும் இங்கே கவிதையாக்கியிருக்கிறீங்க.
காதல் சுகம்தரும் காதலனாய்: காதலிக்காகவும், காதலுக்காகவும் வளைந்து கொடுக்கும் காதலனின் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கின் உணர்வுகளை காதல் ரசம் கலந்து சொல்லுகின்றது.
காதல் வளர்பிறையாக.....
நல்வ உவமை....
Vetha. Elangathilakam.
http://kovaikkavi.wordpress.com
தம்பீ!
எதை எழுத..?
கவி அழகனா அல்லது காதல் அழகனா
தெரியவில்லை
படத்தைப் பார்த்தா புரியுது பாடலைப் பா்த்தா
புரியுது
விரைவில் அழைப்பு வருமா..?
அருமை!அருமை! அருமை!! அருமை!!!
புலவர் சா இராமாநுசம்
அழகான கவிதை.
nice... :)
கவி!! நல்லா ரசிச்சுத்தான் எழுதிறீங்க காதலை..
அப்பிடியே கவிதையில் நிறைந்து கிடக்கிறது..
படத்திற்கேற்ற வரிகளும் அருமை..
வாழ்த்துக்கள் சகோ////
தம்பி காதல்கவிதையையே எழுதி எழுதி கொட்டுறீங்க ..
அவ்வளவிற்கு காதலிக்கிறீங்க போல காதலை...
hahaha...
ரசிக்கும் படியான கவிதை
கலக்கலான காதல் கவிதை super
கனவொன்று தெரிந்ததோ
கண்களில்
இமை கண்மூடி திறந்ததோ
நாணத்தில்
விரல் கொண்டு தீண்டையில்
குளிர்கிறேன்
வளைந்தோடும் நதியாக
பாய்கிறேன்/// அருமையான வார்த்தைகளின் தொகுப்பு..
இன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டை பற்றி நகைச்சுவை .
வாருங்கள் ,வந்து கருத்தை கூறுங்கள்
இன்று எனது வலைப்பதிவில்
நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..
நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்
http://maayaulagam-4u.blogspot.com
வாழ்த்துக்கள் நண்பரே...
////கண்கொண்டு பார்கையில்
சிலிர்க்கிறேன்////
பார்க்கையில்...
கவிதைக்கு பொய் வேண்டுமானால் அழகாக இருக்கலாம்... நிச்சயம்
பிழைகள் அழகல்ல...
மீண்டும் வாழ்த்துக்கள்!
நீண்ட நாளைக்குப் பிறகு வந்திருக்கிறன். சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்கிறியே... இது நியாயமா?... மறுபடியும் முதல்ல இருந்து காதலிக்கணும் போல இருக்கு...நீங்க நல்லா காதலியுங்க... அதுக்காக கவிதையில கொட்டி நம்மள குழப்பாதீங்கடா...
தம்பீ... கவிதை அழகோ அழகுடா...
சிறு இடைவேளையின் பின் வருகுறேன் ,
வழமை போல் உங்கள் கவிதையே என்னை காதலிக்க வைத்து விட்டீர்கள் பாஸ்
சுகமான கவிதை
''..கனவொன்று தெரிந்ததோ
கண்களில்
இமை கண்மூடி திறந்ததோ
நாணத்தில்
...''
nalla vtikal..
Post a Comment