கனவுகள் வரும் இரவுகளில்
காதலி தரும் உணர்வுகள்
விழிகளில் விழும் ஸ்பரிசங்களில்
விலகிட முடியா தருணங்கள்
அணைத்திட துடிக்கும் கைகளில்
அன்பினில் விளைந்த வித்தைகள்
விதிகளை மீறும் காதலில்
உலகினை மறந்த உண்மைகள்
உயிருடன் உயிர் பேசிடும்
உத்தரவில்லா தொடர்புகள்
உறங்கிடும் போது வரைந்திடும்
பத்திரமில்லா சொத்துக்கள்
விரைந்திடும் கால ஓட்டத்தில்
இணை பிரியாத உறவுகள்
தொடர்ந்திடும் வாழ்க்கை பயணத்தில்
பொக்கிசமான பல நினைவுகள்
Tweet | |||||
29 comments:
முதல் பொக்கிஷ கவர் கள்வன்
நினைவுளில் காதல் அருமையான கவிதை
பொக்கிசமான பல நினைவுகள்....
நினைத்தாலே இனிக்கும்
அருமை ...
வாழ்த்துக்கள்
அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.
காதலில் நினைவுகளே பொக்கிஷம்
கவி வரிகள் சூப்பர்
காதல் தரும் கனவுகள் இரவினில் பெரும் சுகம்தான்..
காதல் கவிஞனே அழகான கவிதை...
வாழ்த்துக்கள்....
!!இத்தனை காதல் கவிதையும் மனசில் ஊற்றெடுக்கிறதென்றால்
காதலிக்குத்தான் அதற்கு நன்றிசொல்ல வேண்டும் ...
காதலியால் கவிக்கு கவிதை வருதோ....
hahahaha!!!
கன்ஃபர்ம் ஆயிடுச்சு பாஸ் கன்ஃபர்ம் ஆயிடுச்சு... நடத்துங்க... நடத்துங்க...
காதலின் விதிகளை ஒரு தடவை கவிதையாகத் தாருங்கள் காதல் கவிஞரே! ஏனென்றால், முறைதவறிய காதலுக்கு இது பாடமாக இருக்கும் அல்லவா! தொடருங்கள் வாழ்த்துகள்.
ஒவ்வொரு நாளையும் நகர்த்திப்போவதே இந்த பொக்கிஷமான நினைவுகள்தான் !
உயிருடன் உயிர் பேசிடும்
உத்தரவில்லா தொடர்புகள்
உறங்கிடும் போது வரைந்திடும்
பத்திரமில்லா சொத்துக்கள்
அட புதுசா இருக்கே
யார் நண்பா அது
கேட்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகு கவிதை
ஐயா .. நீங்க கவிக்கிழவன்னு யாரோ சொன்னத கேட்டுத்தான் இஞ்ச வந்தனான் ஆனா நீங்க இப்பிடி காதல பற்றி எழுதிறீங்க.. வயசான காலத்தில கெட்ட கெட்ட கனவு வருது உங்களால சொல்லிபோட்டேன் ஆமா...!?
///உயிருடன் உயிர் பேசிடும்
உத்தரவில்லா தொடர்புகள்
உறங்கிடும் போது வரைந்திடும்
பத்திரமில்லா சொத்துக்கள்/// அழகான வரிகள் பாஸ் .
கவிதை அழகு வாழ்த்துக்கள்
தொடர்ந்திடும் வாழ்க்கை பயணத்தில்
பொக்கிசமான பல நினைவுகள்//
Nice..
பொக்கிசமான நினைவுகள்//
என்ன, அடி மனசைக் கிளறிட்டீங்க போல இருக்கே.
விதிகளை மீறும் காதலில்
உலகினை மறந்த உண்மைகள்//
இந்த வரி மாத்திரம்...என்னை ஏதேதோ செய்கிறது. கவிதையினூடாக, அற்புதமாக நினைவுகளை மீட்டிப் பார்த்திருக்கிறீங்க.
பொக்கிசமான நினைவுகள்//
மனதில் ஆழமாக வேரூன்றியுள்ள காதலின் நினைவுகளை, மீட்டிப் பார்க்கும் கவிஞனின் குரல்.
நம்மை உயிரோட்டத்துடன் வைத்திருப்பதே..இந்த பொக்கிஷ நினைவுகள் தானே!!
நல்ல கவிதை! :)
கவி வரிகள் மிக அருமை
அழகு கவிதை...படமும் அருமை...
வாழ்த்துக்கள்
''...விரைந்திடும் கால ஓட்டத்தில்
இணை பிரியாத உறவுகள்
தொடர்ந்திடும் வாழ்க்கை பயணத்தில்
பொக்கிசமான பல நினைவுகள்''...
நினைவுகள் தானே நம் வாழ்வின் பச்சையம். அன்றேல் வளமாவது!...வாழ்வாவது!....good!...
Vetha. Elangathilakam.
http://www. kovaikkavi.wordpress.com
உங்கள் பெயர் போலவே
கவிதையும் அழகு
//விரைந்திடும் கால ஓட்டத்தில்
இணை பிரியாத உறவுகள்
தொடர்ந்திடும் வாழ்க்கை பயணத்தில்
பொக்கிசமான பல நினைவுகள்//
நினைவுகள் தொடரட்டும்
விரைந்திடும் கால ஓட்டத்தில்
இணை பிரியாத உறவுகள்
தொடர்ந்திடும் வாழ்க்கை பயணத்தில்
பொக்கிசமான பல நினைவுகள்//நினைத்தாலே இனிக்கும் காதல் நினைவுகள்மிக அருமை தொடரட்டும்
கவி அழகனுக்கு
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
விதிகளை மீறும் காதலில்
உலகினை மறந்த உண்மைகள்
அழகு கவிதை.
Post a Comment