10/12/2013

வெட்கப்பட தெரியாமல்

தெரியாமல்
வெட்கப்பட தெரியாமல்
வெட்ட வெளிச்சத்தில் வெட்கி
காதலை காட்டிகொடுத்துவிடாயே

மௌனமொழி பேசும் கண்கள்
காந்த விழியை கவர்ந்து
நாணத்தை உடல்பரவி
நரம்புகளை நெளியவைத்துவிட்டனவோ

இல்லாத இடை
எங்கிருந்து முளைத்தது உனக்கு
அது தள்ளாடி நிப்பதை
என்னெவென்று சொல்ல்வது

பாத விரல்களில் எப்போ
பேனா முளைத்தது
பார்க்காமலே கோலம்போட
யார் சொல்லி தந்தது

உதடு கடிக்கும் அளவுக்கு
உனக்கு என்னடி வெட்கம் – பாவம்
ஒத்தடம் கொடுப்பதற்கு – அது
தேடுகிறது ஒரு சொந்தம்

குளிரில் தானே புல்லரிக்குமென்றாய்
கையில் இருக்கும் சிறு ரோமங்கள்
இந்த வெயில்ளிலும் புல்லரிக்கின்றனவே
ஏன் கூர் கொண்ட பார்வையாளா

கிட்டவரும் போதே
முட்ட வருகிறேனென்று எண்ணுகிறாய்
தொட்டு பார்க்குமுன்பே
கையை தட்டி பறிக்கிறாய்

தெரியவில்லையா நான் இன்னும்
கிட்டவே வரவில்லை என்று  
வெட்கப்பட தெரியாமலேயே
வெட்குகிராயே .........








7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அடடா... ஒவ்வொரு வரியும் ரசிக்கத்தக்கவை...

வாழ்த்துக்கள்...

Yaathoramani.blogspot.com said...

ஆஹா அற்புதம்
வேறென்ன சொல்ல
ஆழமான கருத்துடன் கூடிய
அற்புதமான விளக்கம்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்/

/மிக மிக அற்புதம்
மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்


Anonymous said...

வணக்கம்

கிட்டவரும் போதே
முட்ட வருகிறேனென்று எண்ணுகிறாய்
தொட்டு பார்க்குமுன்பே
கையை தட்டி பறிக்கிறாய்

ஆஹா என்ன வரிகள் கவிதை நன்று வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-



மகேந்திரன் said...

வெட்கப் பூக்களின்
அழகில் சிக்கித் தவிக்கிறேன்...
அழகுக் கவிதை...

http://bharathidasanfrance.blogspot.com/ said...


இனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

நிலாமதி said...

கவி அழகன் ..........கவிதை நன்று. நீங்களும் உறவுகளும் நலமா ? மிக நீண்ட நாட்களுக்கு பின் . முடிந்தால் தொடர்பு கொள்ளவும்.

நிலா அக்கா

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

01.01.2014