நெஞ்சினிலே தஞ்சம் கொள்ளும்
தேவதை இவள்தானோ
கண்களாலே கவிதை சொல்லும்
அத்தை மகள் சுவைதானோ
கேள்வி குறியாய் கெஞ்சிநிக்கும்
வஞ்சிக்கொடி இடைதனோ
வேண்டும் என்றே கொலை செய்யும்
இதழ் இரண்டும் மலர்தனோ
அள்ளி அணைக்க சொல்லிநிக்கும்
அடக்கமான மெல் உடல்தானோ
அமைதிக்கு விலை பேசும்
வட்டநிலா முகம்தானோ
கற்பனை தரும் கவிதைகளில்
காதல் சொல் இவள்தானோ
கடைசிவரை கூடவரும்
அன்பு காதலன் நான்தானோ
Tweet | |||||
41 comments:
கற்பனை தரும் கவிதைகளில்
காதல் சொல் இவள்தானோ
கடைசிவரை கூடவரும்
அன்பு காதலன் நான்தானோ//
சிறந்த பதிவு
காதல் மனம் கமழும் கவிதை..
சூப்பர்..
காதலும் அதை சொல்லுகிற விதமும் உண்மையில் பாராட்டத் தக்கது காதல் இப்படி வேர்விட்டு முளைக்கும் பொது சிறந்த இல்வாழ்கை துடங்கும் பாராட்டுகள் தெடர்க,
கேள்வி குறியாய் கெஞ்சிநிக்கும்
வஞ்சிக்கொடி இடைதனோ
வேண்டும் என்றே கொலை செய்யும்
இதழ் இரண்டும் மலர்தனோ/
அருமையான கவிதைப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
ஓ! கவி அழகன்! மிக நன்கு முன்னேறி வருகிறீர்கள் சொற்கள் மிக அருமையாக விழுந்துள்ளது. சிறப்புடன் செழிக்க நல் வாழ்த்துகள்! கவிதையும் 4 வரியின்றி அளவான கவிதையாக உள்ளது. இறை அருள் கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
கவியழகன் கவிதை
சுவைதானே!இல்லை சுவை"தேனே"!
அள்ளி அணைக்க சொல்லிநிக்கும்
அடக்கமான மெல் உடல்தானோ
அமைதிக்கு விலை பேசும்
வட்டநிலா முகம்தான.....
அழகான சொற்கள்.. அருமை..
http://suresh-tamilkavithai.blogspot.com
காதல் சுவை கூட்டும் கவி
சொக்கிப்போனேன்...
அழகிய கவிதை
அழகாயிருக்கு பாஸ் கவிதை ...
கவி அழகனின்
ரசனையான வார்த்தைகளை ரசிக்க வரும் ரசிகன் நான் தானோ?
சிறப்பான கவிதைக்கு பாராட்டுகள்.
அழகான கவிதை
படிக்கும்பொழுதே
மனதில் காதல் உவகை
பகிர்வுக்கு நன்றி நண்பா
வாக்களித்தேன்
அருமையான கவிதைப் பகிர்வுக்கு நன்றி மாப்பிள..
கற்பனை தரும் கவிதைகளில்
காதல் சொல் இவள்தானோ
கடைசிவரை கூடவரும்
அன்பு காதலன் நான்தானோ
Post Comment
ரசித்தேன் கடைசிவரை... !!! வாழ்த்துக்கள்..
அழகான கவிதை அதுவும் மச்சாள் ஞாபகங்களை கிளரிவிட்டீர்கள் அதுவும் கூடவரும் அன்புக் காதலன் கொன்னூட்டீங்க பாஸ்!
///கேள்வி குறியாய் கெஞ்சிநிக்கும்
வஞ்சிக்கொடி இடைதனோ
வேண்டும் என்றே கொலை செய்யும்
இதழ் இரண்டும் மலர்தனோ////
ஒரு கம்பன் ஜீன்ஸ் போட்டுக் கொண்டு அலைகிறானாமே.. உண்மையா?
நல்ல கவிதை. பழைய ஞாபகங்களை தூண்டிவிட்டது
கற்பனை தரும் கவிதைகளில்
காதல் சொல் இவள்தானோ
கடைசிவரை கூடவரும்
அன்பு காதலன் நான்தானோ
ஏன்தானோ தம்பநீ-கவிதை
எழுதுகின்றாய் நம்பிநீ
தேன்தானே அத்தைமகளை-உடன்
திருமணமே செய்துவிடு
வீண்தானே புலம்புவதே-அதை
விட்டுவிடு நலமதுவே
நாண் எதற்கு கவியழகா-விரைந்து
நடத்திவதே ஆணழகே
புலவர் சா இராமாநுசம்
இனிய காலை வணக்கம் பாஸ்,
அத்தை மகளின் அழகோடு, அவளுக்காய் காத்திருந்து,
அவள் கூடவே நடை போடப் போடும் காதலனின் உணர்வுகளை இக் கவிதை அழகுறச் சொல்லி நிற்கின்றது.
கவிதைகள் மூலம் காதலை நாம் சொல்லலாம் ஆனால் அந்த கவிதைக்கே காதலைத் தந்தவள் அவள் மட்டுமே. . .அருமை சகா. . .
சந்தேகம் கொள்வதும் தான் ஏனோ
கூட வரும் காதலன் எனக் கூட்டிச் செல்ல
சாதகங்கள் காட்டிவிடல் முறைதானே.
வாழ்த்துகள்
அமைதிக்கு விலை பேசும்
வட்டநிலா முகம்தானோ
அழகு!
அத்தை மகளின் கவிதை... வாழ்த்துக்கள்
அத்தை மகளை வர்ணிக்கும் அசத்தலான காதல் கவிதை கலக்குங்க.....
அத்தை மகள் என்றாலே
அனைவருக்கும் கவிதை பொங்கும்
கவி அழகனுக்கு சொல்லவா வேண்டும்
அருமை அருமை
தொடர வாழ்த்துக்கள்
கவிதை நல்லா இருக்கு.
''...கடைசிவரை கூடவரும்
அன்பு காதலன் நான்தானோ....''
அதிலேன்ன சந்தேகம்....
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
'...கடைசிவரை கூடவரும்
அன்பு காதலன் நான்தானோ....''
அருமை அருமை
உங்கள் கற்பனை தொடர வாழ்த்துக்கள்
ரொமான்ஸ் ரொமான்ஸ் ரெம்ப வழியுது தல... ஹீ ஹீ சூப்பர் பாஸ்
அத்தை மகள் அழகோ அழகு,, கவிதைய சொன்னேன்..
Sorry Boss.
உங்க ப்லாக் என் டேஷ்போட்`ல வருதில்ல... உங்க MAil'ம் ஸ்பாம்`க்கு போயிடுது... அதனாலதன் வர லேட்டு...
உங்க கவிதைல, என்னமோ ஏதோ தெரியல..கொஞ்ச நாளா காதல் சொட்டுது பாஸ்
kavitha kavitha kavitha
((கேள்வி குறியாய் கெஞ்சிநிக்கும்
வஞ்சிக்கொடி இடைதனோ
வேண்டும் என்றே கொலை செய்யும்
இதழ் இரண்டும் மலர்தனோ )) super super
கவி அழகா
நீ அழகு
நின் பெயர் அழகு
அதனிலும் உன் கவி - அழகு.
அற்புதமான வரிகள்
அடடா இப்பதான் புரியுது நீங்க கவிஞர் ஆனதற்கான கரணம் .
வாழ்த்துக்கள் சகோ அருமையான காதல்க் கவிதைக்கு .ஓட்டுகளும்
போட்டாச்சு .கொஞ்சம் பதிவர்கள் எங்களையும் நினைச்சுக்கோங்க ஹி..ஹி ..ஹி ..
மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ...........
மாமா பொண்ணூம்!!!!
கடைசி இரு வரிகளுக்கு பதில் கிடைத்ததா?
''...கடைசிவரை கூடவரும்
அன்பு காதலன் நான்தானோ ...''
அப்படிக் கூடப் போகாதவர்களால் தானே சிக்கல் வரும் ;கையால் இது நல்ல காதல் கவி அழகன்.
Vetha.
தங்கள் பெயரில் இருக்கும் அழகு கவிதைகளிலும்
மிளிர்கிறது. வாழ்த்துக்கள் !
அறிமுகப்படுத்திய மதுமத் சகோ விற்கு என் நன்றி!
Post a Comment