9/18/2011

காதல் கடவுள் மட்டும் கல்லு

பரந்தவெளி வானம்
பரவிக்கிடக்கும் மேகம்
சிதறிக்கிடக்கும் நட்சத்திரம்
சிரித்து பேசும் வெண்ணிலா

அழுது வடிக்கும் மழை
அழகாய் பிடிக்கும் குடை
ஓடித்திரியும் வெள்ளம்
நிரம்பி வழியும் உள்ளம்

பச்சைக்கடல் வயல்
பாகம் பிரிக்கும் வரப்பு
முத்து முத்தாய் நெல்லு
வெள்ளை நெல்லாய் அவள் பல்லு

கரையை கழுவும் கடல்
நுரையை பருகும் மணல்
ஓடித்திரியும் நண்டு
தேடித்திரியும் என் மனது

பனைமரம் விழுந்த வீதி
இரு மருங்கிலும் புல்லினச்சாதி
விரிந்து ஒடுங்கிடும் கண்கள்
அவள் வீட்டுக்கு போகும் கால்கள்

முளை நிமிர்ந்த கோவில்
மடை திறந்த கருணை
கல்லு முழுக்க கடவுள்
காதல் கடவுள் மட்டும் கல்லு

51 comments:

ம.தி.சுதா said...

////அழுது வடிக்கும் மழை
அழகாய் பிடிக்கும் குடை
ஓடித்திரியும் வெள்ளம்
நிரம்பி வழியும் உள்ளம்///

அண்ணே எத நிரம்புதோ இல்லியோ வாசிக்கையில் மனம் நிரம்புது...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்

இராஜராஜேஸ்வரி said...

மடை திறந்த கருணை
கல்லு முழுக்க கடவுள்
காதல் கடவுள் மட்டும் கல்லு/

கடவுள் ஏன் கல்லானார்?

Rathnavel Natarajan said...

அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

வார்த்தைபிரயோகம்
வாசமூட்டுது!
நேர்த்தியாய் தொடுத்த
சொல்மாலை
நாசிதுளைக்குது!

உணர்வுள்ள
அருமையான கவிதை

வலையுகம் said...

வார்த்தைகளை அழகாக தொகுத்து இருக்கிறீர்கள்

உணர்பூர்வமான வரிகள்
வாழ்த்துக்கள்

கோகுல் said...

வார்த்தைகளை கோர்த்த விதம அருமை!

kowsy said...

இயற்கையை இரசித்து, காதலின் இனிமை சேர்த்துக் கட்டிய காதற்கோயிலில் கடவுளைத் தேடும் கவிஞரே! அக்கடவுள் உங்கள் கண்ணுக்குள் மனதுக்குள் என்றும் குடியிருக்கின்றார். அதை அங்கே இங்கே தேடியலையாது மனதுக்குள்ளே இருக்கும் அக்காதல் கடவுளை அடைய வழிமுறைகளைப் பற்றிப் பிடியுங்கள். பார்வை பக்கம் திரும்பும். வாழ்த்துகள்.

இமா க்றிஸ் said...

கவிதை வரிகள் அழகு.

Yaathoramani.blogspot.com said...

கல்லு முழுக்க கடவுள் -காதல் கடவுள் மட்டும் கல்லு/

படிக்க படிக்க சந்தமெட்டு
துள்ளிக் குதிக்கச் செய்து போகுது
அருமையான ஆழமான கருத்துடன்
கூடிய பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

ஜெயமாறன் நிலாரசிகன் said...

மச்சி மிகவும் அருமையாக உள்ளது கலக்குறிங்க போங்க .................

குறையொன்றுமில்லை. said...

கவிதை வரிகள் அழகு.

kobiraj said...

அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.

kobiraj said...

''முத்து முத்தாய் நெல்லு
வெள்ளை நெல்லாய் அவள் பல்லு ''
வரிகள் சூப்பர்
ஓட்டு போட்டாச்சு .
''தோனியால் ஏன் முடியவில்லை '' என் வலையில்
http://kobirajkobi.blogspot.com/2011/09/5000-pageviews.html

DREAMER said...

கவிதை வரிகள் மிக அழகு..!

-
DREAMER

இராஜராஜேஸ்வரி said...

கரையை கழுவும் கடல்
நுரையை பருகும் மணல்
ஓடித்திரியும் நண்டு
தேடித்திரியும் என் மனது

Nice..

Prem S said...

//கல்லு முழுக்க கடவுள்
காதல் கடவுள் மட்டும் கல்லு //அருமையான வரிகள் அன்பரே வாழ்த்துக்கள் .

காட்டான் said...

கரையை கழுவும் கடல்
நுரையை பருகும் மணல்
ஓடித்திரியும் நண்டு
தேடித்திரியும் என் மனது

 கரையை கழுவும் கடல்.. அருமையான கற்பனை.. எவ்வளவு காலம் அந்த கடலில் கால் வைத்திருக்கிறேன்.. ஒரு நாள் கூட சிந்தித்ததில்லை இப்படி ஒரு வார்த்தையை...!!!!!

வார்த்தைகள் உங்களிடம் இருந்து வருவதே ஒரு அழகுதானையா... 

வாழ்த்துக்கள் மாப்பிள..

Anonymous said...

என்னே அசத்தல் வரிகள் சூப்பர் பாஸ் ...

Anonymous said...

///அழுது வடிக்கும் மழை
அழகாய் பிடிக்கும் குடை
ஓடித்திரியும் வெள்ளம்
நிரம்பி வழியும் உள்ளம் // கூடவே என் மனதையும் தொட்டு சென்ற வரிகள் ...

சென்னை பித்தன் said...

அழகு!கல்லும் கரையும்!

ரிஷபன் said...

கல்லு முழுக்க கடவுள்
காதல் கடவுள் மட்டும் கல்லு

தோல்வியின் கோபம் நன்றாக வெளிப்பட்டிருக்கிறது

Unknown said...

அழகு கவிதை.
வாழ்த்துக்கள்.

முனைவர் இரா.குணசீலன் said...

கரையை கழுவும் கடல்
நுரையை பருகும் மணல்
ஓடித்திரியும் நண்டு
தேடித்திரியும் என் மனது

மிகவும் இரசித்தேன் நண்பா..

முனைவர் இரா.குணசீலன் said...

காதல் குறித்த எனது தேடைலைக் காண வாருங்கள் கவிஞரே...

“இது மனிதக் காதல் அல்ல“

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_16.html

அம்பாளடியாள் said...

//கரையைக் கழுவும் கடல்
நுரையைப் பருகும் மணல்
ஓடித் திரியும் நண்டு
தேடித் திரியும் என் மனம்// ......
அருமையான வரிகள் .வாழ்த்துக்கள் சகோ .
மிக்க நன்றி பகிர்வுக்கு .......

தமிழ்வாசி பிரகாஷ் said...

கவிதை அருமை...

M.R said...

உணர்வை வெளிப்படுத்தும் அருமையான கவிதை நண்பரே

M.R said...

தமிழ் மணம் 11

Unknown said...

கரையை கழுவும் கடல்
நுரையை பருகும் மணல்
ஓடித்திரியும் நண்டு
தேடித்திரியும் என் மனது

என்ன தம்பீ!

தேடித்திரியும் என் மனதா
அல்லது
மாதா எது..?

அருமை!

an identity


புலவர் சா இராமாநுசம்

மாய உலகம் said...

கவிதை கலக்கல் நண்பா...

ஆகுலன் said...

அண்ணே கவிதை அருமை .....

நிரூபன் said...

காதல் கடவுள் மட்டும் கல்லு//

தலைப்பே ஒரு வித்தியாசமா இருக்கே...

நிரூபன் said...

நுரையை பருகும் மணல்
ஓடித்திரியும் நண்டு
தேடித்திரியும் என் மனது//

ஆகா....இவ்வளவு அழகாக ரசித்து அவளைத் தேடித் திரியும் மனதினைச் சொல்லியிருக்கிறீங்க.

நிரூபன் said...

காதல் கடவுள் மட்டும் கல்லு//

கவிதையில் எனக்கு ஏதொ ஒரு பொருள் தொக்கி நிற்பதாகப் புலப்படுகின்றது,.

அதாவது காதல் என்பது கடவுளாகவும்,
காதல் கடவுள் என்பது கல்லாகவும் தானே இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது,

பிரணவன் said...

அழுது வடிக்கும் மழை. . .
கரையை கழுவும் கடல். . .
கல்லு முழுக்க கடவுள்
காதல் கடவுள் மட்டும் கல்லு. . .
அருமையான வரிகள் சகா. . .ரசித்தேன். . . .

SURYAJEEVA said...

ok ok

சம்பத்குமார் said...

பச்சைக்கடல் வயல்
பாகம் பிரிக்கும் வரப்பு
முத்து முத்தாய் நெல்லு
வெள்ளை நெல்லாய் அவள் பல்லு

ரசிக்க வைத்த கவிதை நண்பரே

அருமை

நட்புடன்
சம்பதகுமார்

vetha (kovaikkavi) said...

நல்ல கவிதை . பாராட்டுகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www,kovaikkavi.wordpress.com

Anonymous said...

கரையை கழுவும் கடல்
நுரையை பருகும் மணல்
ஓடித்திரியும் நண்டு
தேடித்திரியும் என் மனது ...... பிடித்த வரிகள், மிக நன்று !!

Anonymous said...

அருமையான உணர்வுள்ள கவிதை...

காந்தி பனங்கூர் said...

கவிதை அருமை நண்பரே.

தனிமரம் said...

காதலும் ஒரு கல்லு மிகவும் வார்த்தை முடிவில்லை அழகான காதலும் கல்லுத்தானோ என என்னவைக்கும் வண்ணம் பாடிச் செல்லும் இயற்கையான கவிதை!

அம்பலத்தார் said...

காதல் கடவுள்
கடவுள் கல்லு
இவற்றைத்தாண்டி
கல்லுக்குள் ஈரம்.
இதுவும் இருப்பதாலும்
பல காதல்கள் வாழ்கின்றன

sarujan said...

((பரந்தவெளி வானம்
பரவிக்கிடக்கும்....))சிரித்து பேசி கவி அழகனை மடகிட்டா உணர்ந்து எழுதிய வரிகள்

sarujan said...

அருமையான கவிதை.

Unknown said...

அழகான வார்த்தைகளின் தொகுப்பாக்கி, கவிதையில் காதலை சொல்லியிருக்கிறீர்கள்..அற்புதம்..

Unknown said...

//முளை நிமிர்ந்த கோவில்//
இதற்கான அர்த்தம் புரியவில்லையே?

vidivelli said...

நீண்ட நாட்களின் பின் இணைவதில் மகிழ்ச்சி.. கவியழகா நலமா?


/கரையை கழுவும் கடல்
நுரையை பருகும் மணல்/

ஒவ்வொரு வரிகளும் அழகாய்,அருமையாய் வாசிக்க வாசிக்க இதமாய் இருக்கு கவி..
படம் சுப்பர்.
வாழ்த்துக்கள்..

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க!
கருத்த சொல்லுங்க!!
நல்லா பழகுவோம்!!!

Unknown said...

இப்போதுதான் தங்களிடம் வந்தேன் கவி அருமை அண்ணா...