11/17/2009

வன்னியில் இருந்து ஒரு கடிதம் வந்தது பிளாக்கர் ஆரம்பிகச்சொல்லி.

2008 மார்கழி மாதம் இந்தியா சென்றபோது பிளாக்கர் சமந்தமாக கனடாவில் இருந்தது வந்த அண்ணா கதைத்தார். அப்பொழுது ஒன்றும் புரியவில்லை. பெரிய பெரிய ஆக்கள் எல்லாம் பிளாக்கர் வைத்திருக்கிறார்கள் கவிதை போடுகிறார்கள் என்றார். சிறுவயதில் இருந்து கொப்பியில் எழுதிவைத்த கவிதைகளை போடலாம் ஆனால் பெரியாட்களுக்கு முன் எனது கவிதை எடுபட வேண்டுமென்றால் பெயரிலாவது பெரியாள் போல் காட்டவேண்டும் என சிந்தித்தேன். சிந்த்திதுகொண்டே இலங்கை வந்தேன்.

இலங்கைக்கு வந்து அடுத்த நாள் அலுவலகம் சென்றேன். மேசையில் ஒரு கடிதம். இதோ கடிதம் . ஒரு சில காரணங்களுக்காக பெயர்கள் மறைக்கபட்டுள்ளது .

வன்னி வள்ளிபுனத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது பிளாக்கர் ஆரம்பிகச்சொல்லி.கொஞ்சம் அதிகம் தான் அப்படியே தருகின்றேன் .




ஆச்சரியம் கணணி பாவனை குறைந்த வன்னியில் இருந்து இந்த இடம்பெயர்வுக்குளும் பிளாக்கர் சமந்தமாக Colombo இல் இருக்கும் எனக்கு எழுதுகிறார். ஆரம்பிதேன் 16 17 வயதில் இருந்து யாருக்கும் காட்டாது எழுதிவைத்த கவிதைகளும் பல்கலைகழக சுவர்களில் எழுதிய கவிதைகளும் புதிதாக எழுதுகின்ற கவிதைகளும் என 99 கவிதைகளை பிரசுரிதேன்.

எனது கவிதைகளை பார்க்க உயிருடன் வருவாரா வந்தாலும் முகாமில் இருந்து எப்ப வந்து எப்ப பார்பார் என்ற ஏக்கம் மனதுக்குள் இருந்துகொண்டே இருந்தது .

வந்தார் குடும்பத்துடன் ஒருவித பிரச்சனையும் இன்றி. முகாமில் இருந்தார் தொடர்பு கொண்டார். இப்பொழுது முகாமில் இருந்து வெளியில் வந்து எனது 100 வது படைப்புக்கு ஆசியும் எழுதி தந்தார் . அவர் வேறு யாருமில்லை பூங்கோதை படைப்புகள் http://www.poonka.blogspot.com/ பளோகரின் சொந்தகாரி .
அவரது ஆசி கவிதை இதோ. கொஞ்சம் அதிகம் தான் அப்படியே தருகின்றேன்

யாதவன்!!! யாரவன்???
வார்த்தை மந்தைகளைச் சாய்த்து
வருடி மெல்லக் கொடுத்துத் தன்

வலிந்த உணர்வுகளை ஊட்டி அவற்றை

வழிநடத்தும் நல்ல மேய்ப்பன்
யாதவனாய் யாழவனாய்

யாத்துப் பல கவியமுதம் பின்னலூடே
யாவரும் சுவைப்பதற்காய்
யாசகமாய்த் தந்தவன்
தவழும் கவிக் குழவியாக என்முன்
தத்தி வந்த அவன் கண்களுக்குள்

தத்துவம் மிளிர்ந்தது கண்டேன்- அடடா இவன்

தவழ வேண்டியவனா..
வேண்டவே வேண்டாம்..

தம்பி எழடா என்று கை கொடுத்து

தூக்கி விட மட்டும் தான் முயன்றேன்

திரும்பிப் பார்ப்பதற்குள்.. அடடா

திடுமெனப் பாய்ந்துவிட்டான்


தம்பி யாதவா..

யாழ் மண்ணின் மாதவமே..

மூச்சிரைக்குதடா உன்னை
அண்ணார்ந்து பார்க்கையிலே

நூல் ஒன்று போதும் நீ
நிலாவைப் பிடித்து விடுவாய்- உன்

மூக்குக் கண்ணாடியில் ஒரு ஐயம்..
அதன்
மூலப் பொருள் என்னவோ??
நொந்து போன உறவுகளின் நெஞ்சுக்குள்

நுழைந்து பார்க்கிறாயே..
“தேவதையே எனது வேண்டுதல்”
என்ற
தெவிட்டாத பாவிலே-எம்
தேம்பலை அனுபவித்துப் பாடினாய்

நன்றி சகோதரா...
நம்புகிறோம் இன்னமும்நாம்

நாதியற்றுப் போகவில்லை-உன்

பேனா எம்மினத்தைப் பிரதிபலிக்கும்..


மரபிற்குள்ளும் உன் கவிவாசனை

மெல்ல வீசுகிறதே... மகிழ்ச்சி

காதற் பாக்களின் மென்னடையால்-உன்

காலடி வீழும் ரசிகர் உள்ளம்
கற்பனைகளின் ஆழம் கட்டியம் கூறுது- நீ

கவிஞன் தான் என்று

இன்னும் உன் புகழ் அதிகம்

இயம்பிடத்தான் விரும்புகிறேன்-ஆனால்

இல்லை என்னிடம்வார்த்தைகள்

இடையிலே சிக்குது உணர்வுகள்

பலம் பல இருந்த போதும்,
தம்பி
பலவீனம் ஒன்று கண்டேன்
எதிர்மறை உணர்வுகள் அதிகம்

எம்பிக் குதிக்கிறது உன்னுள்..

தமிழினம் அழுதது போதும்

துயர்மனம் துவண்டது போதும்
சேமம் விசாரிப்பது பண்பாடு
அது தேவை தான்

சேர்ந்து அழுவது ஒப்பாரி

சோர்ந்த உளத்துக்கு அதுவும் தேவைதான்
இதையெல்லாம் செய்வதற்கு
பலருண்டு இவ்வுலகில் -உன்
பேனாவின் பணியாக
இன்னுமொன்று
புதிதாகச் சேர்த்துக் கொள்
உளம் சோர்ந்து போனவர்க்கு

உரமூட்டும் பணி செய்

சாய்கின்ற உணர்வுக்கு
சவால் ஊட்டும் பணி செய்
மரணித்தது தமிழன் மட்டுமே-அவன்

மானம் அல்ல என உணர்த்து

புதைந்து போன சிந்தனைக்கு

புத்துணர்வு ஊட்டு

சலனமின்றி ஒதுங்குகின்ற

சமூகத்தைச் சாடு
சாக்கடை மனம் கொண்டோர்க்கு

சாட்டையாலே போடு -அது

சத்தியமாய் உன்னினத்தை

சரித்திரத்தில் நிமிர வைக்கும்


வாழ்க நீ நீடு

வளர்க நின் சிந்தனைக் கோடு

நீள்க உன் கவிப்பயணம்

நிமிர்க நீ இவ்வுலகில் மேலும்..


அன்புடன்
பூங்கோதை

நிலமதி அக்காவையும் குறிப்பிட வேண்டும் முதன் முதலில் தனிபட்ட முறையில் தொடர்பு கொண்டவர். வாழ்த்தினவர். அவரது வாழ்த்தும் இதோ

யாதவனின் 100.......வது படைப்புக்கு என் பாராட்டுக்கள்.

நவீன விஞ்ஞான உலகில் கணணி மிகப்பெரும்பங்கு வகிக்கிறது .தற்கால இளையோர் முதல் ஆர்வமுள்ளவர்களிடையே ,தங்கள் கவிதை கட்டுரை கதைகள் போன்றவற்றை, தமது உள்ளத்து வெளிப்பாட்டை உணர்த்த வலைப்பதிவு வழிசமைக்கிறது .என் தமிழ் வாசிப்பு ஆர்வமிகுதியால் கண்டு பிடித்த தளம் தான் "கவிக்கிழவன் பக்கம்:" இவர் ஒரு துடிப்பான , சமூக சேவையில் ஆர்வமுள்ள இளையவர். இவரது கவிதைகள் , தாயக அவலங்கள் பற்றிய பகுதிகளை மிகுந்த ஆர்வமுடன் படிக்கும் நூற்றுக் கணக்கான வர்களில் நானும் ஒருத்தி . இவரது கவிதைகள் காதல் சோகம் தனிமை என்ன்பவற்றை தாங்கி வரும் .அவ்வப்போது ஈழத்து அவலங்களை பற்றி ,மக்களின் துயரம் அவல வாழ்வு என்பவற்றை கலை நயத்துடன் வெளிக்கொண்டு வருவதில் இவரின் படைப்புக்கள் பெறும் பங்கு வகிக்கிறது .பதிவர் உலகில் நானும் இவரது நட்பு .என்னை கவர்ந்த படைப்பாளிகளில் இவரும் ஒருவர் .யாதவன் எனும் இயற் பெயர் கொண்ட இவர் இலங்கை வலை ப்பதிவாளர்களில் ஒருவர் .இவரது நூறாவது பதிவு வெளி வரும் இவ்வேளை மேலும் சிறந்த படைப்புகளை தனது ,வலியுலகின் சிறந்த படைப்பளியாக வாழ்த்துகிறேன். இதனை ஏனைய வாசகர்கள் முன் கூறுவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன். நட்புடன் நிலாமதி

இந்த்நேரத்தில் எனதது கவிதையை வாசிபவர்களுக்கும் பின்ஊட்டம் இடுபவர்களுக்கும் வாக்கு இடுபவர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.


15 comments:

ஹேமா said...

யாதவன் நான் தான் முதன் பின்னூட்டமோ !என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு.
ஊர்க்காற்றைச் சுமந்து வந்து தரும் உங்களுக்கு நன்றியும் கூட.உங்கள் பின்னூட்டம் காணும்போது ஏதோ நான் என் ஊரில் நிற்பதாய் உணர்வேன்.
எங்கள் தேசத்து இளைஞர்கள் இப்போ நிறையப்பேர் தளங்கள் திறந்து பதிவுகளோடு காணச் சந்தோஷமே.
இன்னும் நிறைய எழுதுங்கள்.சுகமாயும் இருந்துகொள்ளுங்கள் யாதவன்.

ப்ரியமுடன் வசந்த் said...

100வது இடுகைக்கு வாழ்த்துக்கள்

உலகமே ஒற்றை தேசம்தான்

Kavinaya said...

மனமார்ந்த வாழ்த்துகள்!

கவி அழகன் said...

நன்றி அன்பு உள்ளங்கள் ஹேமா,பிரியமுடன்...வசந்த்,கவிநயா

அகல்விளக்கு said...

100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் தோழா...

மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.

கவி அழகன் said...

நன்றி அன்பு அகல் விளக்கு

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

மனமார்ந்த வாழ்த்துகள்!

பெருங்காயம் said...

வாழ்த்துகள் நண்பா

கவி அழகன் said...

நன்றி அன்பு ஜெஸ்வந்தி விஜய்

CS. Mohan Kumar said...

நல்ல பதிவு. பூங்கோதையின் கடிதமும் வாசித்தேன். பூங்கோதை எனது ப்ளாக்கிலும் படித்து தொடர்ந்து ஊக்குவிப்பார். அவரது கடிதம் மனதை கனக்க வைத்தது

Admin said...

100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...
This comment has been removed by the author.
அன்புடன் நான் said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்... தொடர்க.

சிந்தையின் சிதறல்கள் said...

வாழ்த்துகள் தோழா என்றும் பலம்பெறுக இவ்வுலகில்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

100 வது இடுகைக்கு வாழ்த்துக்கள் தோழா...
மென்மேலும் உயர வாழ்த்துக்கள்.