மழை வேண்டாம்
அகதி முகாம் வெள்ளத்தில்
மூழ்க வேண்டாம்
வெய்யில் வேண்டாம்
பச்சைக் குழந்தைகள் அகதி முகாமில்
சிறுவீட்டுக்குள் காயவேண்டாம்
காற்றுவேண்டாம்
அகதி முகாமில்
தொற்றுநோய்பரவி சாகவேண்டாம்
உணவு வேண்டாம்
விருந்தோம்பும் தமிழன்
கையேந்தி நிற்கவேண்டாம்
கனவு வேண்டாம்
கனவு முழுக்க இறந்த உறவுகளின்
நினைவுவேண்டாம்
கடவுள் வேண்டாம்
பெற்றோரை இளந்து
ஆனாதைகளான பிள்ளைகள் வேண்டாம்
தண்ணீர்வேண்டாம்
குடிக்கும்தண்ணீர் எல்லாம்
தமிழனின் கண்ணீராக வேண்டாம்
கத்திவேண்டாம்
சிசுக்களை கருவிலேயே
கொல்ல வேண்டாம்
பாக்கிஸ்தான் இந்தியா சீனா வேண்டாம்
தமிழரை அளிக்க
ஆயுதம் அனுப்பவேண்டாம்
சர்வதேசம் வேண்டாம்
சதிதீட்டி தமிழரை
கொல்ல வேண்டாம்
தேவதையே நான் கேட்பது என்ன என்பது
உனக்கு புரியவேணும்
நான் தேவதையை அனுப்புகிறேன் இவர்களுக்கு
சுமஜ்லா
சக்தி
தியாவின் பேனா
அகல் விளக்கு
தமிழரசி
Tweet | |||||
14 comments:
வேட்கை வேண்டாம் வேள்விகள் வேண்டாம் வேதனைகள் வேண்டாம் வெடிகுண்டு கலாச்சாரம் வேண்டாம் விடுதலை வேண்டாம் விட்டு பிரியும் விரகங்களும் வேண்டாம் வெட்டியாகப் போகும் இந்த உயிர் வேண்டாவே வேண்டாம்.....
அனைத்து வரங்களும் கிடைக்க பெறுவதாக....
அத்தனையும் மனசை உருக வைத்தன....
நாதியற்று இருக்கும் மக்களுக்காய் நாமும் பிரார்த்திப்போம்
//
கடவுள் வேண்டாம்
பெற்றோரை இளந்து
ஆனாதைகளான பிள்ளைகள் வேண்டாம்
தண்ணீர்வேண்டாம்
குடிக்கும்தண்ணீர் எல்லாம்
தமிழனின் கண்ணீராக வேண்டாம்
//
உண்மைதான் நமக்கு யார்தான் உதவப் போகிறார்கள் என்ற வெறுப்புடன் உள்ள முகாம் வாழ் மக்களின் ஆதங்கத்தை நன்றாக பிரதிபலித்துள்ளீர்கள்
தமிழரசி,பிரியமுடன்,பிரியமுடன்...வசந்த் ,தியாவின் பேனா
நன்றி அன்பு தோழர்களே
வரம் முழுக்கத் தமிழனுக்காய்த் தந்து விட்டாய். மெய் சிலிர்க்க வைத்து விட்டாய்.
தேவதை அறியும் உன் நல மனம்.
ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.
உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்
அத்தனை வரங்களும் மனதை ஒரு கணம் ஏதோ செய்து விட்டன
வரங்கள் கவிதையாய் நம் உறவுகளின் வேதனையத் தாங்கி.....
அருமை...
யாதவன் அத்தனையும் உணர்வோடு மனசைப் பிழியும் எண்ணங்கள்.தேவதைக்கு எட்டுமா எங்கள் ஓலம் !
கொள்ளவேண்டாம் - கொல்லவேண்டாம்.
சந்ரு ஹேமா நன்றி அன்பு தோழர்களே உங்கள் கருத்துக்கு
பிழைகளை திருத்துகின்றேன்
வேண்டாம் என்ற இந்த
வேண்டுதலே
வேண்டாம் என்ற நிலை
வேண்டும் என்று
வேண்டுகிறேன்...
மனது எரியும் இடுகை நண்பா
வேதனை சுமந்துநிற்கும் தாங்களின் வேண்டுதல்கள் அத்தனையும் பலிக்கட்டும்
உள்ளத்தை தொட்ட கவிதை . பதிவுக்கு பாராடுக்கள்.
Post a Comment