பிள்ளை அப்பா எங்கே
முள்ளிவாய்க்காளில்
இறுதியாக போர்நடந்த இடம்
அப்பா இறந்துவிட்டார்
இல்லை நான் அவர்உடலை
பார்க்கவில்லை
இறைவனுக்கே தெரியாது
எத்தனை பேர் இறந்ததென்று
உன் அப்பா சாம்பலாகிவிட்டார்
இல்லை
மீளக்குடியேறும்போது
அப்பாவை சந்திப்பேன்
இன்று சர்வதேச சிறுவர்தினம்
கொண்டாடுகிறார்களா
கொண்டு ஆடுகிறார்களா
வாழ்த்து தெரிவிக்கிறார்களா
வாழ்த்தமுன் வாடிவிழும்
பிள்ளைகளுக்கு

நான் இறந்தால்
தூக்குவதற்கு
நாலுபேர் இல்லை
நான் இறந்தால்
கவலைப்பட
மூன்றுபேர் இல்லை
நான் இறந்தால்
அழுவதற்கு
இரண்டுபேர் இல்லை
நான் இறந்தால்
கொள்ளிவைக்க
ஒருமகன் இல்லை
நான் இறந்தபின்
இறப்பதற்கு குடும்பத்தில்
யாருமே இல்லை
உடன்நிகழ்காலம் உருக்குலைந்துவிட்டது
உண்மைகள் எல்லாம் தலைகுனிந்துவிட்டது
உணர்வுகள் இப்போ வரையருக்கப்பட்டது
உணர்ச்சிகள் எல்லாம் நிலைகுலைந்துவிட்டது
உங்களுக்கென்றுதான் நிதி திரட்டப்பட்டது
உண்மையில் அது சூரையாடப்பட்டது
உயிரனங்கள் எல்லாம் ஊனமாக்கப்பட்டது
உள்ளங்களின் வேதனைவடுக்கள் புதைக்கப்பட்டது
உச்சக்கட்டத்தில் உயிர்கள் கொல்லப்பட்டது
உத்தமர்கள்போல் ஊடகங்கள் காட்டிக்கொண்டது
உருவாகமுன்னே சிசுக்கலைப்பு நடந்தேறியது
உறவுகள் மூச்சுவிட முடியாது நசிக்கப்பட்டது
உயிருடனே உடல்கள் எரிக்கப்பட்டது
உண்ணாநிலைகூட மறுக்கப்பட்டது
உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்டது -இப்போ
உலகமே தமிழரை கைவிட்டுவிட்டது
யாருக்குமுன் யார்போவார்
யார் இருப்பார் யார் அழைப்பார்
யாருக்கும் சொந்தமில்லா உலகில்
யாருடன் யார் இருப்பார்
யாருக்கும் உதவாத உடலை
யாரையோ பெறுவதற்கு
யாதகம் பார்த்து
யாருக்கோ கட்டிவைப்பார்
யாருடனும் யாருமில்லை
யாருக்கும் யாருமில்லை
யாரும் உதவிக்கில்லை-நாம்
யாரென்றும் தெரியவில்லை
வேரறுத்து குடும்பங்களை
ஊரைவிட்டு ஓடவைத்தார்
பாரினிலே யாவருக்கும்
உரிமையில்லை என்றுரைத்தார்
வீடிளந்த எம்மரை வெறும்
வெட்டையிலே தங்கவைத்தார்
காடறுத் செய்த இடம்
வெள்ளத்தில் மூள்கினதோ
சோறுமில்லை யாருமில்லை
சொந்தம் கொள்ள பெயருமில்லை
நாடிலந்து நிற்கும்நிலை
நாயைவிட கேவலம்தான்
வேளாமை செய்துவைத்தோம்- பெரும்
பேராண்மை கொண்டுநின்றோம்
ஏலாமல் வந்தவனை
விருந்தோம்பி ஏற்றிவைத்தோம்
பாலாறு பசுக்களையும்
சோராத வயல் குளங்களையும்
பரம்பரைக்கே சேர்த்துவைததோம்
இன்று பரம்பரையே இல்லையென்றோம்