11/27/2010

கார்த்திகையில் ஒரு தீபம் மனதில் ஏற்றுவோம்


வட துருவத்தில்
ஓளி அணைந்ததால்
உலகிலேயே இருள் சூழ்ந்தது

நீர் சொரியும்
கண்களிலேலாம்
ஒரு ஒருவம் தெரிந்தது

இறுதி முச்சும்
இனத்துக்கே
என்ற இறுமாப்பு கொண்டவன்

இதயம் எல்லாம்
ஓளி ஏற்றும்
உலகம் படைத்தவன்

அவன் இனத்தில்
பிறந்ததற்காய்
நெஞ்சை நிமிர்துவோம்

கார்த்திகையில்
ஒரு தீபம்
மனதில் ஏற்றுவோம்

11/25/2010

உன்னில் தலைசாயா ஆசையடா


முற்றத்து மரங்களிலே
முக்கனிகள் பழுத்திருக்க
சுற்றத்து கண்களெல்லாம்
கனி பறிக்க காத்திருக்க

ஊர் சுற்ற வந்த மச்சான்
எனை பறித்து போனதென்ன
என் மனதிற்குள் புகுந்ததென்ன
மனசோடு சேர்ந்ததென்ன

மரம் சுற்றும் கிளிகளெல்லாம்
பழம் தின்ன வந்ததென்ன
உனைப்பார்த்த பின்னாடி
மனம் மாறிப்போனதென்ன

தலைவாசல் ஓரத்தில்
விழி பார்த்து வீற்றிருந்தேன்
உன் வழிகான காத்திருந்தேன்
உன் மனம் சேர தவமிருந்தேன்

கிளி பார்த்த போதினிலே
கனி ஆசை கொள்ளுதடா
எனைக்கடிகாமல் விடுவாயோ
தவிப்பாக உள்ளதடா

உன்னில் தலைசாயா ஆசையடா

11/22/2010

காதலின் குழந்தைகள் சொர்க்கத்திற்கு சொந்தமாக


இளம் கீற்றின் சுகம்
காற்றின் வழி வந்து
விழி மூட

இதயத்தின் இசைமீட்டல்
மெல் இதமாக
சுகம் சேர்க்க

என் சுவாசக்காற்று
உன் உடல் வருடி
சிலிர்க்கவைக்க

காதலின் குழந்தைகள்
சொர்க்கத்திற்கு
சொந்தமாக

????????????????
???????????
??????

காலையில் சூரியன்
உத்திதான்
சோம்பல் முறித்து

11/17/2010

வாழ்விலும் நீயே சாவிலும் நீயே



நித்தமும் உன்னை தொட்டிடதானே
நெஞ்சினில் காதல் வளர்த்தேன்

சொல்வதும் ஒன்று செய்வதும் ஒன்று
இதழ் கூப்பிடதானே துடித்தேன்

பெண்மையே உன்னை போற்றிடதனே
கண்களின் இமைக்குள் வைத்தேன்

பிறந்ததும் எனக்கு வளர்ந்ததும் எனக்கு
உன்னை தாங்கிடும் பொறுப்பை ஏற்றேன்

சொந்தமாய் உன்னை மாற்றிடத்தனே
சொர்கத்தை இங்கு படைத்தேன்

வாழ்விலும் நீயே சாவிலும் நீயே
உயிர் கொடுக்க நான் பிறந்தேன்



கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

11/14/2010

இதயம் வரை காதல்



என் படுக்கையறை
கனவுகளின் தோட்டம்
நீண்ட இரவுகள்
வேதனையின் ஆளம்

இரு விழிகளும்
சூரியனின் சொந்தம்
இதயம் வரை
காதலின் வேதம்

இணைவதுதான்
வாழ்கையின் ஞானம்
இல்லையேல்
உயிர் தானாக சாகும்

11/09/2010

வசியமில்லா காதலால் ருசிக்கமுடியா இரவுகள்



கடல் புரண்டு தரையானாலும்
மனம் உடைந்து துரும்பானாலும்
பிடிவாத குணம் படைத்தாய்
பிழையானத்தை ஏன் தொடுத்தாய்

உடலிலே ஒன்றுமில்லை
மனசும் உணர்வும் இரண்டும் உண்மை
தடையாக ஏன் நினைத்தாய்
தடுக்காமல் ஏன் துடித்தாய்

பிரிவென்றால் விருப்பமில்லை
சேர்ந்துவாழ முடியவில்லை
எதற்காக் இணைத்துக்கொண்டாய்
இணைந்தபின் ஏன் உதைந்தாய்

கனவாக நினைக்கவில்லை
கனவுகான பிடிக்கவில்லை
தெளிவாக சொல்லுகின்றேன்
உனைவிட்டால் வாழ்வு இல்லை

கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

10/27/2010

நீ ஆணாக பிறந்ததனால் அப்படி என்ன கண்டுவிட்டாய்

உதட்டோரம் விழுவதெல்லாம்
உணர்வுள்ள வார்த்தைகளே
என் கழுத்தோடு கொடிகட்டி
துணையாக தொட்டது ஏன்

உனக்காக மாறவேண்டும் என
நீ எதற்காக நினைக்கின்றாய்
நீ ஆணாக பிறந்ததனால்
அப்படி என்ன கண்டுவிட்டாய்

எனக்கென்று தனி உணர்வு
அதற்குள்ளே பெரும் கனவு
அதை உணரக்கூட தெரியாமல்
ஆணாக ஏன் பிறந்தாய்

உடலிலே வலிமை கொண்டு
உணர்விலே வன்மைகொண்டு
அழகான பெண்மை என்னை
அடக்கி ஆள ஏன் வந்தாய்

மிருகம் எனக்கு தேவையில்லை
மீதி வாழ்வு பாரமில்லை
வேகமாக நான் எழுந்திடுவேன்
மிக உயரத்துக்கு சென்றிடுவேன்

கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

10/14/2010

காமம் கொண்ட கண்களினால் சேலை உரிந்து போகின்றது


நான் உரைக்க போவதெல்லாம்
நாவிலுள்ள உண்மைகளே

நலிவுற்று இருந்தாலும்
தளராத உறுதியுடன்
மெலிவுற்று இருந்தாலும்
கலங்காத கண்களுடன்

ஒரு சேலை தலைபெடுத்து
உடல்முழுக்க சுத்திவிட்டு
மானத்துடன் நிமிர்கின்ற
மறத்தமிழ் பெண்மணி

ஊர் விட்டு ஓடிவந்து
உற்றவரை நான் இழந்து
கைக்குழந்தை கதறலுடன்
கை ஏந்தி நிற்கின்றேன்

ஒருமுறை பசி போக்க
ஒன்பது இடம் ஏறிவிட்டேன்
ஒவ்வொரு இடமும் புதுசெனக்கு
ஒவ்வொரு கதையும் பழசெனக்கு

பிள்ளை ஒன்றை கையிலேந்தி
பிச்சை கேக்கும் போதிலும்
காமம் கொண்ட கண்களினால்
சேலை உரிந்து போகின்றது

கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

10/10/2010

தமிழினம் ஆண்டிடும் நாடு

நாவினில் ஊரும் நற்றமிழ் கவிதை
பாவினில் புலம்பும் சொ
ற்களின் இனிமை
வாழ்வினில் கிடைக்கும் அனுபவக்கோவை
வந்திடும் கவிதையாய் செந்தமிழ் மேடை

தமிழினும் இனிது உலகினில் இல்லை
தமிழினை கொள்பவர் உலகினில் கொள்ளை
சுழன்றிடும் நாவில் சுட்டிடும் உண்மை -
செந்
தமிழினை காத்திட நெஞ்சினில் வன்மை

நெஞ்சினில் குண்டு பாய்ந்திடும் போதும்
செத்துமே உடல் சாய்ந்திடும் போதும்
செவ்விதழ் உதடுகள் தமிழென உரைக்கும்
தமிழினை காத்திட இரத்தத்தை இறைக்கும்

சத்தியம் என்பது சரித்திர உண்மை
வேள்விகள் செய்வது தமிழனின் கொள்கை
உண்மைகள் ஒரு நாள்
சுட்டிடும் போது
தமிழினம் எழுந்து ஆண்டிடும் நாடு

கருத்துகள் வாக்குகளை தீர்மானிக்கும் ,வாக்குகள் கருத்துகளை தீர்மானிக்கும் சனநாயக பிச்சை .

10/03/2010

காதலால் ஆதலால் கண்

10 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
கண்களுக்குள் தூசு போகாமல்

18 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
உனை பார்க்கும் கண்களுக்குள்
தூசு போகாமல்

28 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
உன் கண்களுக்குள் தூசு போகாமல்

38 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
எம் செல்லகண்ணின்
கண்களுக்குள் தூசு போகாமல்

78 வயதில்

காற்றிலும் நான்
கவனமாகத்தான் போகிறேன்
கடைசிவரை வருபவளை
கண் கொண்டு பார்பதற்கு