5/27/2012

சொல்லிடத்தானே துடிப்பேன்

உருவான காதல்

தெரியாமல் நானும்

பலகாலம் வாழ்ந்தேன்

மண்ணில்


சிலநேரம் நெஞ்சில்

வந்தாடும் உணர்வால்

தடுமாறிப்போனேன்

என்னுள்


ஒவ்வொருநாளும் உன்னை

பார்க்கின்ற போது

எனை மறந்தாடி போனேன்

உண்மை


இருந்தாலும் என்னை

சுதாரித்து கொண்டு

சிறு சிரிப்போடு கடப்பேன்

உன்னை


தனியாக நானும்

இருக்கின்ற வேளை

உனை நினைக்காமல்

இருக்க மாட்டேன்


இது எதற்காக என்று

தெரியாமல் நானே

விசராக்கி திரிந்தேன்

கண்ணே

இரவோடு இரவாக

கனவோடு கனவாக

உனை மட்டும் காண்பேன்

அன்பே


இதை உன்முன்னே வந்து

உன் கண் முன்னேநின்று

சொல்லிடத்தானே

துடிப்பேன்

5/22/2012

இருக்கிறான் எண்டதே எனக்கு போதும்

இனி என்ன செய்ய முடியும்

செய்வதற்கு என்ன இருக்கு

இருந்ததே ஒரே ஒருத்தன்

இப்பொழுது

எங்கே என்று தெரியாது

சேர்ந்து திரிந்தவர்கள்

இருக்கிறான் என்கிறார்கள்

புயலையும் கிளிதெறிந்தவன்

கடலையும் கரைத்து குடித்தவன்

என் கைக்குள்ளேயே வளர்ந்தவன்

என்னையே வளர்த்து விட்டவன்

சீருடை களட்டமுன்னே

சோறு கேட்பவன்

புத்தப்பையை தூக்கி எறிந்தவன்

குடும்ப சுமையை ஏற்று வாழ்ந்தவன்

நேற்று இரவு வீடு வரவில்லை

அவனது

மட்காட் இல்லா சைக்கிளையும்

வார் அறுந்த செருப்பினையும்

காக்கா கடை சந்தியில

கண்டதா சொல்லியினம்

ஒரு எட்டு போய்

பார்த்திட்டு உறுதிசெஞ்சன்

ஒரு கிழைமையாச்சு

ஒரு மாசமாச்சு

ஒரு செய்தியும் இல்லை

விடியப்புரம் ஆறு மணிக்கு

நாய் குலைக்குது எண்டு

எட்டி பார்த்தன்

படலேக்க ஒருபெடியன்

பதுங்கினான்

நேற்று தான்

வெளியாள விட்டவங்களாம்

என்டமகன் தப்பியோடி

வெளியாள நிக்கிரானாம்

உயிர் எழுந்து

விளி சுரந்து

வந்ததுபோல உணர்வு

இன்னுமும் உயிரோட

இருக்கிறான் எண்டதே

எனக்கு போதும்

நான் தலைவாரி

சீலை சுத்தி

நெஞ்சை நிமிர்த்தி நடப்பதட்க்கு

5/10/2012

விசர்தான் வரும்

அவள்

அருகில் இருந்தால்

கவிதை வரும்

நான்

தனிமையில் இருந்தால்

விசர்தான் வரும்

5/06/2012

என் காதல் இன்று கைக்குழந்தையாய்

பிளந்த இதயத்தில்

விழுந்த குருதி

சிவந்த கண்களில்

வந்ததென்ன


நான்

நடந்து வந்த

பாதை எல்லாம்

தடம்புரண்டு விழுந்ததென்ன


கரம் கோர்த்து

வரம் வாங்கி

காதல்

செய்த நாட்கள் என்ன


என் காதல்

இன்று

கைக்குழந்தையாய்

கதறி கதறி அழுவதென்ன

5/02/2012

கனவொடிந்த கூட்டினுள்ளே காதல் தினம்

கிளி இருந்தால்

கிளை ஓடியும் பட்டமரம்

நினைவுகளுடன்

சேர்ந்து வாழும் பெண்ணின் மனம்


கனவொடிந்த

கூட்டினுள்ளே காதல் தினம்

கதறி கதறி அழுகிறதே

இது என்ன வரம்


இணைபிரியா இருப்பது

எங்கள் குணம்

இடையிலே வந்ததென்ன

இந்த சினம்


மனம் இரண்டும் ஒடிந்தது

எந்த கணம்

மறக்க முடியா காதல் – அது

எந்தன் நிறம்


கரம் கோர்த்து நடந்திருப்பேன்

எத்தனை தரம் - நீ

கைவிட்டாலும் காதலிப்பேன்

என் காதல் நிஜம்