9/23/2014

கொடுப்பனவு



எந்த செடி கொடுத்து வைத்தோ 

தான் பெத்த பூ பிள்ளை 
உந்தன் கழுத்தில் 
மாலையாக !

9/22/2014

பெண் கவிதை


உதட்டினிலே
குறுங்கவிதை
உன் இடையினிலே
ஹைக்கு கவிதை
மார்பினிலே
மரபுக்கவிதை
உண்மைடியினிலே -நான்
தமிழ் குழந்தை

9/19/2014




ஒத்திகை பார்த்த                                                                       
ஓராயிரம் விடயங்கள்                                                                    
ஒற்றைக்குரலில் மௌனிக்க                                           
மௌனமானேன்
 நீ                                                                                                             
என் மௌனத்தின் 
பிரியன் என்பதால்   

9/18/2014

ஒருமுறை சொல்லிவிடு


ஒருமுறை சொல்லிவிடு 
அங்கே என் இதயம் துடிக்கிறதா என்று 
ஒருமுறை சொல்லிவிடு 
இன்னும் என்ன உயிர் இருக்கிறதா என்று 
ஒருமுறை சொல்லிவிடு 
இன்னமும் உன் காதல் உண்மையா என்று 
ஒரே ஒருமுறை சொல்லிவிடு 
உன்னிடம் இருப்பது என் இதயம்தானா என்று

9/17/2014

காயம்


நெஞ்சை
துளைக்கும்
வார்த்தை
இரத்தம்வராத
காயம்

9/16/2014

கடிவாங்கியும் காதலிக்கிறேன்


ஆசைப்பட்டு துடிக்கும்
இதயத்தை
வெட்கப்பட்டு மறைக்கும்
தாவணிக்குள்
என் மூச்சுகாற்றின்
முத்தங்கள்

வேசமில்லா உன்கண்கள்
சிமிட்டுகின்ற சிரிப்பில்
பாசமுடன் பணிந்து
உதடுகுவிக்கும் சிவப்பில்
காயப்பட்ட என் இதயத்துக்கு
மருந்து

காற்றே இல்லாதபோது
ஆடிடும் உன் இடையில்
காயப்போட்டதுபோல் அசையும்
உன் சேலைத்தலைப்பில்
என் தேவதைக்கான
திருவாசகம்

கொலுசுமணிகள்
குழுங்கி ஆட
மூச்சுகாற்று வளைந்துவீச
பறந்தோடும் கூந்தல்
விருந்தாகும்
கண்களுக்கு

யாருமில்லா நேரம்
வெட்கம் மட்டும்
துணைவர
நான் கவ்விக்கொள்ளும்
இதழ்களில்
முளைத்தது உன்
முள்ளு பற்கள்

இது ஆசைப்பட்டு
கடித்ததா
அசையாமல் இருக்க
கடித்ததா - நான்
கடிவாங்கியும்
காதலிக்கிறேன்
பிடிவாதமாய்
உன்னை தான்

9/15/2014

நனையவில்லை


மழையில் நிக்கிறேன்
உன் நினைவுடனே
நனையவில்லை
குடையுமில்லை

9/11/2014

அம்மா ......மன்னிப்பு கேக்கின்றேன்



மனதோடு மனம் வைத்து
மன்னிப்பு கேக்கின்றேன்
தினம் உன்னை பார்பதற்க்காய்
தெரியாமல் பேசிவிட்டேன்

யாரிடம் நான் போவேன்
அதை யாரிடம் நான் கேட்பேன்
அன்பினில் விளைந்த அம்மாவாய்
உன்னையே நான் பாக்கிறேன்

குழந்தை மனசு கொண்ண்டதனால்
குழப்படிகள் பல செய்துவிட்டேன்
அடம்பிடித்து அழுதுவிழுந்து
அரியண்டம் கொடுத்துவிட்டேன்

பாசத்தை நீ தரவேண்டும் - காக்கை
குஞ்சாக பார்க்கவேண்டும்
கண்மூடி தூங்குவதற்கு - நல்ல
நிம்மதி நீ தரவேண்டும்

9/10/2014

காதல்



இதயம் நினைப்பதை 

கண்கள் சொல்லும் 
உதடுகள் மட்டும்
அமைதியாய் இருக்கும் 



காதல்

9/09/2014

தெய்வங்கள் இன்று

தெய்வங்கள் இன்று
அங்கங்கள் இழந்து
புகழ் இழந்து போனதால்
மனிதனால் மறந்து
துன்பங்கள் கொண்டு
சோகங்கள் தாங்கி
தன்மாணம் மறந்து
உதவி கேட்க
வைத்துவிட்டான்
 
துப்பாக்கி ஏந்தி
சொந்த மண்ணை காக்கையில்
அக்காக்கள் என்றும்
அண்ணாக்கள் என்றும்
புகழோடு வாழ்த்தி
பொருளாக கொடுத்து
புன்னகைத்த மனிதன்

வெட்கமா



நிலம் கழுவும் அலைகடலில்

உன் முகம் புதைத்து 
நெஞ்சில் சாய 
இத்தனை ஆசையா ...
அதை நேரில் சொல்ல 
இத்தனை வெட்கமா 
என் வண்டி சாவியை 
கடலுக்குள் வீசிவிட்டாயே

9/08/2014

தமிழ் மூச்சு

மூச்சு விடும் போது
தமிழ் மூச்சாய் இருக்கட்டும்
மூச்சை விடும் போது
தமிழ் மூச்சாய் இருக்கட்டும்

9/07/2014

தங்க தேர் பட்டு


தென்னை மர இளநீர் 
கண்களடி உனக்கு - 
அது வெட்டி மோதி பார்க்கும் 
 அழகோ தனி அழகு 

 என்னை சுற்றி ஓடும்
 காலில் இரு கொலுசு
 தாளம் போட்டு நடக்கும்
 நடையே புது விருந்து 

 நெற்றி புருவம் நடுவில்
 சிவந்த குங்கும பொட்டு
 சேலையில் நீவந்தால்  
தங்க தேர் பட்டு